ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

12 நவம்பர், 2008

சிம்ரன்-தேவயானி... கொக்கரிக்கும் நீலாம்பரிகள்! சூடான சினிமா

சிற்றிடை அழகி சிம்ரனுக்கு தீராத கவலை, தமிழ்சினிமாவில் மீண்டும் ஒரு Devayaniஇடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான். சமீபத்தில் வந்த சேவல் சிம்ரனின் கவலையில் மேலும் கொஞ்சம் வெந்நீரை ஊற்றிவிட்டு போய்விட்டது. சிம்முவின் அடுத்த சாய்ஸ்...ஐந்தாம்படை! சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சிம்ரனுக்கு வெயிட்டான ரோல். இவருக்கு ஜோடி யாருங்க? என்றால் அதுதான் சஸ்பென்ஸ் என்கிறார் படத்தின் இயக்குனர் பத்ரி.

கதையிலே ரொம்ப முக்கியமான இடம் இது என்பதால் இப்போதைக்கு சொல்ல வேணாம்னு பார்க்கிறேன் என்றவர், ஐந்தாம்படைக்கு விளக்கம் சொன்னார். ஐந்து சகோதரர்கள் பற்றிய கதைதானாம் இது. இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் பல காலமாக இருந்து வரும் தீராத பகைதான் படத்தின் மையக்கரு. சிம்ரனை போலவே ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் தேவயானியும். இவரும், சிம்ரனும் டபுள் நீலாம்பரிகளாக கொக்கரிக்கும் காட்சிகள் அதிரடியாக இருக்கும் என்றார். அப்போ சுந்தர்சி என்ன செய்வாராம்? என்ற நமது கேள்விக்கு பத்ரி சொன்ன பதிலில் ஒரே ஆக்ஷன் நெடி! ஒருபக்கம் ஆக்ஷன் இருந்தாலும், விவேக், சுந்தர்சி காமெடி திரையை அதிர வைக்கும் என்றார்.

கணவரை முன்னிறுத்துவதற்காக கோடிகளை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கும் Aithampadaiகுஷ்பு, ஐந்தாம்படைக்கு தருகிற பணமும், சுதந்திரமும் தாராளமானது என்கிறார் பத்ரி. ஏற்கனவே கிரி, வீராப்பு என்ற இரண்டு வெற்றிப்படங்களை தந்த தயாரிப்பாளரல்லவா? குஷ்பு கொடுக்கும் இன்னொரு சுதந்திரம்தான் இன்னும் பிரமாதம். சுந்தர்சி, அதிதி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை எடுக்கிற நாட்களில் மட்டும் ஸ்பாட்டுக்கு வர மாட்டாராம்.

அதை சொல்லுங்கய்யா முதலில்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு