ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 ஆகஸ்ட், 2009

என் முதல் விமான பயணம்என் முதல் விமான பயணம்

அரை டவுசர் போட்ட காலத்தில்

வானத்தில் ஏரோப்பிளான் சத்தம் கேட்டால்

அன்னாந்து கழுத்து வலிக்க வலிக்க விமானம்

மறைவும் வரை பார்த்து கொண்டே இருப்பேன்..

என்றாவது ஒரு நாள் அதன் அருகே சென்று

பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு

அண்மையில் பயணம் செய்யும்

வாய்பாகவே வசப்பட்டது...!

என் தொழில் தொடர்பான நிறுவனம்

42 பேர் கொண்ட குழுவை சுற்றுலா

அழைத்து சென்றார்கள்

என்னைவிட என் பொண்ணுக்கும், பையனுக்கும்தான்

ரொம்ப சந்தோசம்....!

என் 10 வயது மகள் அப்பா நீங்கள் இந்த

வயதில்.......!தான் பிளைட்டில் ஏறுகிறீர்கள்

நான் 10வயதில பிளைட்டில் பறக்கப் போகிறேன் என

நக்கல் அடித்தார்..ஒரு மாதம் முன்பிருந் தே

இன்னும் 30 நாள்,29நாள்தான் இருக்கு என

நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தனர்...

டெல்லி,ஜெய்பூர் செல்வதாக திட்டம்..

சேலத்தில் இருந்து ஏ.சி.டீலக்ஸ் பஸ்ஸில் கிளம்பி

அதிகாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம்

விமான நிலையத்தில் சென்று இறங்கினோம்.

விமான நிலையத்தில் ஒரு காப்பி குடிக்கலாம் என

நானும் என் பையனும் சென்றோம்...விலையை கேட்டவுடன்

அடி வயிறு கலங்கி விட்ட்து.......! ஒரு காப்பி 78 ரூபாயாம்...?

அம்மாடியோவ்...எங்கள் ஊரில் இந்த காசில் 20 காபி குடிக்கலாம்....!

ஜெட் ஏர்வேஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்...பணிப்பெண்கள்

புன்முகத்துடன் வரவேற்றனர்...பின்..(இண்டர்சிட்டி எக்ஸ்பிரசில்

வருவது போல) குளிர் பானம்,மோர்,வந்த்து பின் சிற்றுண்டி

வெஜ்ஜா,நான்வெஜ்ஜா,சவுத்தா,நார்த்தா,என்று கேட்டு

கொடுத்தார்கள்,நானூம் என் குழந்தைகளும் நான்வெஜ் வாங்கினோம்

இது வரை பார்திராத உணவு......!நார்த் நான்வெஜ் சகிக்கவில்லை என

பையன் சொன்னான்..!மற்றவை நன்றாக இருந்த்து..!

மேகத்தூடே பற்ந்தபோது ரொம்ப சிலிர்பாக இருந்த்து

வேறு உலகில் இருப்பதாய் உணர்ந்தேன்......

முதல் அனுபவம் இனிப்பாய் இருந்த்து...!

பிடித்திருந்தால் உங்கள் கருத்தை சொல்லூங்கள்

டெல்லி,ஜெப்பூர், அனுபவம் அடுத்த பதிவில்...!

லேபிள்கள்: , ,