ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும்

ஊரே திரண்டு நடத்தப்பட்ட உற்சாக விழா

சூழியக்கோட்டையில் பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா
ஜாதி, மதம், கடவுள் - மக்களைப் பிரித்துவிடும்; பகுத்தறிவு ஒன்றுதான் மக்களை ஒன்றுபடுத்தும்

தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை

சூழியக்கோட்டை, நவ.17: தஞ்சா வூர் மாவட்டம் சூழியக் கோட்டையில் தந்தை பெரி யார் சிலை திறப்பு விழாவை ஊரே ஒருமனதாக திரண்டு எடுத்தது. தந்தை பெரியார் சிலையைத் திறந்த திராவிடர் கழகத் தலைவர் -பகுத்தறிவு தான் மக்களை ஒன்றுபடுத்தும் என்று கூறினார்.

சூழியக்கோட்டையில் தந்தை பெரியாரின் முழு உரு வச் சிலை மிகுந்த எழுச்சியோடு திறந்து வைக்கப்பட்டது. கிரா மமே திரண்டு நிற்க, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 16.11.2008 அன்று மாலை சூழியக்கோட்டையில் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை சாலியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் தோழர்கள் வரவேற்றனர்.

எழுச்சிமிகு வரவேற்பு

பின்னர் சாலியமங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட புதிய கம்பத்தில் கழகக் கொடியினை தமிழர் தலைவர் ஏற்றி வைத் தார். தொடர்ந்து கடைவீதி தொடங்கி சூழியக்கோட்டை கிராமம் வரை திரளாக தோழர்கள் பங்கேற்று தமிழர் தலைவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

எண்ணற்ற இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் அணி வகுத்து வந்தனர். இந்த ஊர்வலத்தை, இரு மருங்கிலும் நின்று பார்த்தனர் கிராம மக்கள். பெண்களும், குழந்தை களும் தங்கள் கைகளை அசைத்து உற்சாகத்தை வெளிப் படுத்தினர்.

கருப்புச் சட்டை அணிபவர் கள், கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் என்றாலும் இவர்களின் சேவை இந்நாட் டுக்கு அவசியம் தேவை என் பதை ஒவ்வொருவரும் உணர்ந்தே வைத்துள்ளனர்.

காரணம் கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என ஒலிபெருக்கி யில் வீறிட்டு நாம் முழங்கி னாலும், நம்மிடம் கம்பு இல்லை, கத்தி இல்லை, வன் மம் இல்லை, வன்முறை இல்லை, இரத்தம் சிந்த வைக்கவில்லை. நாம் விரும்புவது அமைதி நிறைந்த சுயமரியாதை உலகு!

இதனை மக்கள் ஒவ்வொரு வரும் நெஞ்சிலே நினைத்து வைத்துள்ளனர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் சூழியக் கோட்டை திருவிழா!

இதற்கிடையே ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட தமிழர் தலைவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குழுமியிருந்த மக்களின் நடுவே, தோழர்கள் சூழ்ந்து நிற்க, தலை நிமிரச் செய்த தந்தை பெரியாரை எல்லோரும் நிமிர்ந்து பார்க்க, வாண வேடிக்கைகள் அதிர, வானதிர முழக்கங்கள் எழுப்ப தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.

ஒன்றியத்தில் முதல் பெரியார் சிலை

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் இது தான் முதல் சிலை என்பது சூழியக்கோட்டைக்கும், இதற் காக உழைத்த தோழர்களுக் குமான சிறப்பு அம்சமாகும்.

தொடர்ந்து பெரியார் சிலை அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயலவைத் தலை வர் இராசகிரி கோ.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.குருசாமி, சிலை அமைப்புக் குழுத் தலைவர் செ.உத்திராபதி, பெரியார் பெருந்தொண்டர் துரைரா ஜன், ஊராட்சி மன்றத்தலைவர் பொன்.சேகர், காங்கிரஸ் ஒன் றியக்குழு உறுப்பினர் வீ.கோபி நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிலை அமைக்க பாடுபட்டவர்களுக்குச் சிறப்பு

முன்னதாக சிலை அமைக் கப்பாடுபட்ட, உதவி செய்த கழகத் தோழர்கள், பொது மக்கள், கிராம மக்கள், பல் வேறு அரசியல் கட்சி நண் பர்கள் அனைவரையும் தமிழர் தலைவர் அவர்கள் பாராட்டி, பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

அ.எழிலரசன் வரவேற்புரை

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய ஒன்றியப் பகுத்தறி வாளர் கழகத் தலைவரும், சிலை அமைப்புக் குழுச் செய லாளருமான அ.எழிலரசன், நான் தமிழர் தலைவர் அவர்களால் ஆசிரியர் பணி வாய்ப்பு பெற்றேன். இப்போது தலைமையாசிரியராக உயர்வு பெற்றுள்ளேன். தந்தை பெரியார், திராவிடர் கழகம், நம் ஆசிரியர் ஆகியோரின் உழைப்புக்குக் கிடைத்த அற்புதமான எடுத்துக்காட்டு இந்தச் சூழியக்கோட்டை கிராமம்.

சூழியக்கோட்டையில் அரசு அலுவலர்களின் பட்டியல்

இக்கிராமத்தில் 3000 பேர் வசிக்கிறோம். இவர்களில் மத்திய, மாநில ஊழியர்களாக 41 பேர், காவல் துறையில் 22 பேர், கல்வித்துறையில் 19 பேர், முதுகலைப் பட்டதாரிகளாக 43 பேர், பொறியாளர்களாக 14 பேர். இளங்கலைப் பட்டதாரி கள் 55 பேர், தொழில்நுட்பம் பயின்றவர்கள் 17 பேர், செவிலி யர்கள் 7 பேர், தொடர் வண்டிப் பணியாளர்கள் 3 பேர், வெளிநாடுகளில் 29 பேர், ஒப்பந்தக்காரர்கள் 3 பேர், தொழிலதிபர்கள் 3 பேர், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட மக்களில் பட் டம் பெற்றவர்கள் 15 பேர் என இக்கிராமமே பகுத்தறிவை உள்வாங்கி வளர்ந்திருக்கிறது எனத் தம் வரவேற்புரையில் கூறினார்.

ஊராட்சி மன்றத் தலைவர் பொன்.சேகர் குறிப்பிடும் போது, எங்களின் சூழியக் கோட்டை கிராமத்தில் தந்தை பெரியார் சிலை அமைவது எங்களுக்குப் பெருமையாக வும், மகிழ்ச்சியாகவும் இருக் கிறது எனக் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் அமர்சிங்

தஞ்சை மாவட்டத் தலை வர் வழக்கறிஞர் சி.அமர்சிங் பேசுகையில், அனைத்துக் கட்சித் தோழர்களும், கிராம மக்களும் எங்கள் தலைவர் பெரியார் என உரிமை பாராட்டி, ஒத்துழைப்புக் கொடுத்து இச்சிலை அமைப்பில் பங் கெடுத்துக் கொண்டார்கள்.

சிலை அமைப்புக்குழுச் செயலாளர் அ.எழிலரசன் தந்தை சென்ற வாரம் மறைந் தார். சிலை அமைப்புக் குழுத் தலைவர் உத்திராபதி அவர் களின் இல்லத்தில் இன்னும் ஓரிரு நாள்களில் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஆனாலும் இவர்களின் சிந் தனை, கவனம் முழுக்க பெரி யார் சிலை மீதுதான்!

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். பெரியார் சிலை இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என மாற்றி எழுதுவோம். 100 விழுக்காடு மக்களும் நன்கொடை அளித்து உருவானதே இப்பெருமைமிகு பெரியார் சிலை என அவர் பேசினார். தொடர்ந்து ஒன்றி யக் கழகச் செயலாளர் கோ.தங்கராசு அவர்கள், அக்கி ராமத்தின் முன்னோடிகள் குறித்தும், பகுத்தறிவுப் பணி களில் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது குறித்தும், மலேசியா, சிங்கப் பூரில் இம்மண்ணின் மைந்தர் அய்யாறு அவர்கள் செய்த சாதனைகள் குறித்தும் விளக் கிப் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறைப்புரையாற்றினார். அவர் தம் உரையில், அய்க்கியமான சூழலுக்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இத்திரு விழா நடைபெறுகிறது. 3000 மக்கள் தொகை கொண்ட இக்கிராமம் நம்மைப் பெருமைப்பட வைக்கிறது.

இங்கு வந்த போதும், உங்களைப் பார்க்கும் போதும் இந்நிகழ்ச்சி பெரும் திருவிழா, பெரு விழா என்பதை உணர்ந் தோம். இந்த மண் சுயமரி யாதை வரலாற்றில் இடம் பெற்ற மண். இந்நாளில் பல் வேறு பணிகள், நெருக்கடிகள் இருந்தாலும் இவ்வூருக்கு வரு வதில் நான் ஆர்வமாக இருந் தேன்.

இம்ண்ணில் பிறந்த அய்யாறு அவர்கள் பச்சை அட்டைக் குடிஅரசு இதழை மலேசியா நாட்டிலே பரப்பி, புரட்சி செய்தவர். அவருக்கு வீர வணக்கம் செலுத்தித்தான் இங்கே சிலையைத் திறந்துள் ளோம்.

சூழியக்கோட்டையில் பிறந்த அய்யா அவர்கள் பெருமை

தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி செய்த அ.சி.சுப்பையா அவர் கள் சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் எனும் நூலை எழுதினார். மொத்தப் புரா ணம் குறித்தும் தெரிய வேண் டுமானால் அந்நூல் ஒன்றே போதும். சிங்கப்பூரில் பலர் வீட்டில் இந்நூல் இருக்கும். இப்போது திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

அதேபோல தமிழ்முரசு பத்திரிகை மூலம் பெரியார் கொள்கை வளர்த்தவர் சாரங்க பாணி அவர்கள். இவர்களைப் போன்ற எண்ணற்றோருக்கு முன்னோடியாக இருந்தவர் தான் இம்மண்ணில் பிறந்த அய்யாறு அவர்கள். தந்தை பெரியாரின் உற்ற தோழராக, தொண்டராக இருந்தவர் அவர்.

அய்யாறு பெயரால் படிப்பகம்

சிறு கிராமமாக இருந்தா லும் முன்னோடியான, பதிவு செய்ய வேண்டிய கிராமம் இது. இங்கே பெரியார் சிலை மட்டுமல்ல, படிப்பகமும் அமைக்க வேண்டும். அதுவும் அய்யாறு அவர்களின் பெய ரிலே அமைய வேண்டும்.

போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை கொடுத் ததாகக் கூறினார்கள். முன் பெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு கற்களைத்தான் வீசுவார்கள்.

அதற்கெல்லாம் நன்றித் திருவிழாவாகவே இது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோட்டுப் பாதை மிகச் சரியாக அமைக்கப்பட்டதன் விளைவாகவே இப்பகுதியில் தொழில் நுட்பக் கல்லூரி, பல்கலைக் கழகம் என விரிந்து சாதனை படைத்து வருகிறது.

பெரியார் கல்லூரியின் நலத்திட்டம்

பெரியார் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மூலமாக இவ்வூரில் 10 நாள்கள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் கறுப்புச் சட்டை என்றாலே வெறுப்பார் கள். ஆனால் இன்றைக்கு அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் கன்னிசாமி முதல் குருசாமி வரை கருப்புச் சட்டை - போராட்டமா? ஆர்ப் பட்டமா? உண்ணாவிரதமா? எதற்கெடுத்தாலும் கருப்புச் சட்டைதான்.

இதிலிருந்து என்ன தெரி கிறது என்றால், நெருக்கடி நேரத்தில் கருப்புச் சட்டை தான் உதவும் என்பது தெரி கிறது.

தந்தை பெரியார், பெருந் தலைவர் காமராசர் போன் றோரின் உழைப்பால் இவ் வூரில் சிறப்புற்று வாழும் மக்களின் நிலை குறித்து ஓர் பட்டியல் வாசித்தார்கள். அக்காலத்தில் டிகிரியும் கிடையாது, படிப்பும் கிடை யாது. ஆனால் இன்றைக்கு இந்த இயக்கம் அனைத்தையும் மாற்றியுள்ளது. இன்னும் நாம் உயர வேண்டு மானால் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண் டும். இன்றைக்கு அறிவியலின் அற்புதமாகக் கைப்பேசி வந்து விட்டது. இந்தக் கைப்பேசி குறித்து முப்பத்தி முக்கோடி தேவர்கள், இராமன், சீதை, சரஸ்வதி போன்றோருக்குத் தெரியுமா? ஒருவேளை இந்தக் கைப்பேசி இருந்தால் இராமா யணமே உருவாகி இருக்காது. சீதைக்கு போன் செய்து நீ எங்கிருக்கிறாய்? என இராமர் கேட்டிருப்பார்.

மேலை நாடுகளில் விஞ் ஞானிகள் நிறைய உருவாகி றார்கள். அதேபோன்று மாண வர்களிடம் பகுத்தறிவுச் சிந் தனையை உருவாக்கி, அவர் களை அறிவியல் பூர்வமாக ஆக்கும் பொறுப்பு ஆசிரியர் களிடம் உள்ளது. இன்றைக்கு மாணவர்கள் ஜாதி உணர்வோடு இருக்கிறார் கள். ஜாதி, மதம், கடவுள் மனிதர்களைப் பிரித்துவிடும். பகுத்தறிவுதான் ஒன்றுபடுத் தும். நாம் பகுத்தறிவோடு வாழ வேண்டும் எனத் தமிழர் தலைவர் பேசினார்.

நிறைவாக ஒன்றியப் பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் தி.அன்பழகன் நன்றி கூறினார். முன்னதாக சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி கிராம மக்களிடையே வியப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தின.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை