ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

20 நவம்பர், 2008

தாழ்த்தப்பட்டோருக்கும், கிரீமிலேயர் நீக்கம் என்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூற்று ஆபத்தான கருத்தாகும்


  • ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு மேலும்மேலும் அழுத்தத்தைக் கொடுப்போம்!
  • தி.மு.. பதவி விலகல் என்பது இந்துத்துவாசக்திகளுக்கு மகுடம் சூட்டவே வழிவகுக்கும்

தாழ்த்தப்பட்டோருக்கும், கிரீமிலேயர் நீக்கம் என்ற
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூற்று ஆபத்தான கருத்தாகும்

இந்துத்வ பயங்கரவாதத்தை அடையாளம் காண்பீர் !

  • மாணவர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புக்கான கலந்துரையாடல் கூட்டம்சென்னையில் நடைபெறும்
  • கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் ஜாதிஒழிப்பு மாநாடு டிசம்பர் 24 இல்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள்

சென்னை, நவ. 20- ஈழத் தமிழர்ப் பிரச்சினை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு உள்ளிட்டமுக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டன. திராவிடர் கழகத் தலைமைச்செயற்குழுக் கூட்டம் சென்னை - பெரியார் திடல் துரை. சக்ரவர்த்தி நிலையத்தில்திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

சென்னை, நவ. 20- ஈழத் தமிழர்ப் பிரச்சினை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு உள்ளிட்டமுக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை - பெரியார் திடல்துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு மனதாகநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

1. இரங்கல் தீர்மானம்:

சிங்கப்பூர் தமிழ்முரசு ஏட்டின் மேனாள் ஆசிரியரும், விடுதலை ஏட்டின் மேனாள்ஆசிரியர் குழு உறுப்பினரும், திராவிட இயக்க ஆர்வலரும், பகுத்தறிவாளருமானவை. திருநாவுக்கரசு (வயது 81, மறைவு 5.11.2008), ஈரோடு நகர திராவிடர் கழகத்தலைவர் ஓவியர் எஸ்.எம். தியாகராசன் (வயது 75, மறைவு 22.10.2008) ஆகியோர்மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 ():

ஈழத் தமிழர்ப் பிரச்சினை

இலங்கையில் வாழும் - அம்மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்கள்அங்குள்ள பேரினவாத அரசின் இராணுவத்தால் நாளும் கொன்றொழிக்கப்படும்கொடுமை திட்டமிட்ட வகையில் நடந்துகொண்டு வருகிறது.

இதனை எதிர்த்து தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தாலும், அண்மைக் காலத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையில் மானமிகுமாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்வந்துபல அரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் பேரணி, சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் என்கிறமுறையில் ஆக்க ரீதியான அறவழிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு, ஈழத்தில்தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத்தப்படவேண்டும் என்றும், அதற்கு இந்தியமத்திய அரசு - குறிப்பாக இந்தியப் பிரதமர் இலங்கை அரசிடம் தேவையானஅழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவரப்படுகிறது.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் முதலாவதாகதிராவிடர் கழகம் இரயில் மறியல் போராட்டத்தை மேற்கொண்டு, ஆயிரத்துக்கும்மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (23.9.2008).

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தனித்தனியாக அவரவர்களுக்குஉகந்த முறையில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இவ்வளவுக்குப் பிறகும் இலங்கைப் பேரினவாத அரசு தமிழர்களைக்கொன்றொழிக்கும் போரை நிறுத்தவில்லை என்பதோடு, நிறுத்தமயிலாடுதுறையில் வரும் 2009 ஜனவரி 3 ஆம் தேதியன்று திராவிடர் எழுச்சிமாவட்ட மாநாட்டினை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
முடியாது என்றும் அறிவித்துள்ளது. இப்பொழுது நம் முன் உள்ள முயற்சிகள்எல்லாம் மத்திய அரசை மேலும் மேலும் வலியுறுத்திச் செயல்பட வைப்பதுதான். தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு கொடுப்பதோடு, சற்றும்தளராமல் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதுஎன்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் 2 ():

பதவி விலகல் என்பது -
இந்துத்துவா சக்திகளுக்குச் சாதகமே!

தமிழ்நாட்டில், ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவத்தின் குண்டு மழையிலிருந்துகாப்பாற்றிடவும், அவர்களது வாழ்வுரிமையை பாதுகாக்கவும், உடனடி போர்நிறுத்தத்துக்கு மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்திட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சியினரும் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள்முன்மொழிந்த தீர்மானம் (12.11.2008) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனைத் தொடர்ந்து ஈழத் தமிழர் பாதுகாப்பு உணர்வு, தொடர்ந்து ஒற்றுமையுடன்முன்னெடுத்துச் செல்வது மிகவும் அவசியமும், அவசரமும் ஆகும்! தமிழ்நாட்டின்இந்த எழுச்சி, தமிழக அரசின் முதலமைச்சர் அவர்கள் முன்னின்று தலைமைதாங்கி எடுத்ததால், ஏற்பட்ட விளைவு என்பதை உலகத் தமிழர்கள் முதல்இங்குள்ள மக்கள்வரை அனைவரும் அறிவர்.

முக்கியமான இக்காலகட்டத்தில், ஒரே குரலில் நமது ஆதரவைக் காட்டுவதுமட்டும்தான் உருப்படியான பயன் அளிக்கும் என்பதால், அரசியல் அல்லது வேறுகண்ணோட்டங்களில் இங்குள்ள கட்சிகள் பிரிந்து, பிளந்து நின்றால், அதுஏற்பட்டுள்ள எழுச்சியை பலவீனப்படுத்தும் என்பதால், தனித்தனி கிளர்ச்சிகளைநடத்தாமல், தமிழக அரசு, முதல்வர் அவர்கள் தலைமையில் அடுத்தகட்டநடவடிக்கையை அவர்கள் அறிவிப்பதை எதிர்நோக்கி, அனைவரும்ஒருங்கிணைந்து அறவழிப் போராட்டத்தின்மூலம் நமது ஆதரவினைத்தெரிவிப்பது மிகவும் முக்கியம் என்று இச்செயற்குழுக் கூட்டம் அனைத்துஅரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகளுக்கு அன்பான வேண்டுகோள்விடுக்கிறது.

இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை ஆதரித்துக் குரல்கொடுப்பதை தீவிரவாதத்திற்கு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக் குரல் என்றுசிலர் திசை திருப்புவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்குப் பார்வை - இனப் படுகொலையை சிங்கள அரசு செய்கிறது என்ற திட்டவட்ட அறிவிப்புஇவைகளை மத்திய அரசு நினைவிற்கொண்டும், இந்திய இறையாண்மைக்கும்பாதுகாப்புக்கும் வெளிநாட்டுச் சக்திகள் அச்சுறுத்தும் வகையில் இலங்கையைப்பயன்படுத்தி, அங்கே சில துறைமுகங்களையும், இராணுவத் தளங்களையும்அமைத்துத் தருவது மிகப்பெரிய ஆபத்து என்பதை திருமதி இந்திரா காந்திஉணர்ந்ததால், அந்நாள் சிங்கள அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒருதடை ஏற்படுத்தவும், ஒரு அணுகுமுறையை இந்திரா காந்தி கையாண்டதுபற்றி, வெளியுறவுத் துறையும், மத்திய அரசும் இப்போதாவது சரியாகப் புரிந்து, சிங்களஇராணுவத்தின் போக்கிற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திட முன்வரவேண்டும்என்று இச்செயற்குழு - நமது நாட்டின் பாதுகாப்பு - இறையாண்மைக்கண்ணோட்டத்தில் வற்புறுத்துகிறது!

கடந்த 14.10.2008 அன்று தமிழக அரசு கூட்டிய கூட்டத்தில், இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்திட, தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்திடுவது என்றுமுடிவெடுத்தன் விளைவுதான் வெளியுறவுத் துறை அமைச்சர் வருகை, மத்தியஅரசின் பல்முனைக் கவனம் என்கிற அளவுக்கு அத்தீர்மானங்கள்மீது மத்தியஅரசின் பற்பல நடவடிக்கைகள் உருவாகியுள்ளன என்பது யதார்த்தஉண்மையாகும்.

முழுமையாக நடைபெறவில்லை என்ற அதிருப்தியினால், உடனடியாகஇராஜினாமா என்ற கடைசி எல்லைக்குத் தி.மு.. செல்லுமானால், அதுவும் மற்றஅகில இந்தியக் கட்சிகள் எதுவும் இதனைச் செயல்படுத்த முன்வராத நிலையில், அது தமிழ்நாட்டின் நலனுக்கு, பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரும்நிலையில், மத்தியில் மதவெறிச் சக்திகள் எளிதில் மகுடம் சூட்டிக்கொள்ளமறைமுக உதவியையும், தமிழ்நாட்டில் நடைபெறும் தனித்தமிழர் ஆட்சியைஒழிக்கத் திட்டமிடும், பார்ப்பனிய சக்திகளுக்கும், பதவி வெறிச் சக்திகளுக்கும்வாய்ப்பளிக்கும் நிலையையும் ஏற்படுத்தும் என்பதால், இவ்வாட்சியின்காரணமாகவே ஈழத் தமிழர் ஆதரவுக்கான எழுச்சி என்பது மறுக்கப்பட முடியாதகல்லுப் போன்ற உண்மையைக் காண - ஒப்புக்கொள்ள மறுப்போர் பற்றிக்கவலைப்படாமல், தொடர்ந்து பணிகளில் இருக்கவேண்டும். ராஜினாமாவிமர்சனங்களை புறந்தள்ளிடவேண்டும் என்றும் தமிழக முதல்வர் மானமிகுமாண்புமிகு கலைஞர் அவர்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் 3:

பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்பீர்!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராகவும், காட்டிக் கொடுக்கும்வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் பார்ப்பனர் நடத்தும் ஏடுகளைப்புறக்கணிக்கவேண்டுமாய் தமிழர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:

சமூகநீதி

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள்அளிப்பது என்கிற சட்டப்படியான நிலையில் நீதிமன்றங்கள் தொடர்ந்துமுட்டுக்கட்டை போட்டு வருவதை இக்கூட்டம் கவலையுடன் பரிசீலனைசெய்கிறது.

27 விழுக்காடு இடங்களை ஒவ்வொரு ஆண்டும் 9 விழுக்காடு அளவில் இடஒதுக்கீடு என்பது - ஏற்கெனவே காலங்கடத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டபிற்படுத்தப்பட்டோரை மேலும் வஞ்சிக்கும் கொடும் செயலாகும். எனவே, ஒரேதவணையில் அந்த 27 விழுக்காடு இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்குவழங்கிட மத்திய அரசு ஆவன செய்யவேண்டும் என்று இக்கூட்டம்வலியுறுத்துகிறது.

அப்படி இட ஒதுக்கீடு செய்யும்போது பிற்படுத்தப்பட்டோரில் போதுமானவர்கள்கிடைக்கவில்லையென்றால், அந்தக் காலியாகும் இடங்களைப் பொதுப்போட்டிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புசமூகநீதிக்கு எதிரானது என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி, இதில்தாழ்த்தப்பட்டோருக்கு உள்ளதுபோலவே பிற்படுத்தப்பட்டோருக்கான காலிஇடங்களை அடுத்த ஆண்டுக்குக் கொண்டு செல்லும் (Carry Forward) முறையைப்பின்பற்ற ஆவன செய்யுமாறு மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும்இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

அதேபோல, பதவி உயர்விலும், இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குஅளிக்கப்பட வேண்டும் என்றும், நீண்ட நாள் நியாயமான கோரிக்கையானபிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக்குழுவை உடனடியாகநியமிக்கவேண்டும் என்றும் மத்திய அரசை, குறிப்பாக மக்களவைத் தலைவரைஇக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:

தாழ்த்தப்பட்டோருக்கும் கிரீமிலேயர் முறை அமல்படுத்தும் காலம்வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து - தாழ்த்தப்பட்டோரின்முன்னேற்றத்திற்குப் பேராபத்து என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுவதுடன், பொதுவாக இட ஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்பிற்படுத்தப்பட்டவர்கள் (Socially and Educationally Backward Classes of Citizens) என்றுஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் பெரும் விவாதங்களுக்குப் பிறகு ஒப்புதல்பெறப்பட்ட அளவுகோலை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று இக்கூட்டம்வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6 ():

மாணவர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புச் சிந்தனையை உருவாக்குதல்

சென்னை- அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஜாதியின் அடிப்படையில்மாணவர்களுக்குள் மோதிக் கொண்டது குறித்து இக்கூட்டம் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 6 ():

கல்விக் கூடங்களில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், நாராயண குரு, மகாத்மாபாபுலே போன்ற ஜாதி ஒழிப்புப் பெருமக்களின் வரலாறுகளையும், சமூகநீதிப்போராட்டங்களையும், பாடத் திட்டத்தில் சேர்க்குமாறு மத்திய, மாநில அரசுகளைஇக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக, தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான தந்தை பெரியார் நடத்தியவைக்கம் போராட்டத்தினை அவசர அவசியமாகப் பாடத் திட்டத்தில் இணைத்திடதமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6 ():

கல்வி நிறுவனங்கள், குறிப்பாக மாணவ விடுதிகள் அரசியல் அமைப்புகளின்புகலிடமாக இருப்பதும், விடுதிகளில் வெளியார் தங்குவதை அனுமதிப்பதும்இத்தகு ஜாதிக் கலவரங்களுக்கு முக்கிய காரணமாகவிருப்பதால் இதில் மிகவும்கண்டிப்புடன் விடுதிகளை ஒழுங்குபடுத்த தேவையான முயற்சிகளைமேற்கொள்ள தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6 ():

முதற்கட்டமாக சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளைச் சேர்ந்தமாணவர்களை அழைத்து ஒரு கலந்துரையாடல் நடத்தி, மாணவர்களின்கருத்துகளைக் கேட்டறிந்து, ஜாதி ஒழிப்புக்கான சிந்தனையை மாணவர்கள்மத்தியில் வேரூன்றச் செய்வதற்காக பூர்வாங்கக் கூட்டம் ஒன்றை ஜாதி ஒழிப்புநாளான நவம்பர் 26 அன்று மாலை - திராவிடர் கழகத் தலைவர் அவர்களின்முன்னிலையில் நடத்தி தக்க தொலைநோக்குத் திட்டத்தினை உருவாக்குவதுஎன்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 ():

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் நாள் ஜாதி ஒழிப்பு மாநாடுஒன்றினை சென்னையில் நடத்துவது என்றும், அம்மாநாட்டில்துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூகஇயக்கத்தவர்கள் ஆகியோரை அழைப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7 ():

இந்துத்துவா பயங்கரவாதம்

முசுலிம் பயங்கரவாதம் என்று இந்துத்துவா அமைப்பினரும், பார்ப்பனஊடகங்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்துள்ள நிலையில், மகாராட்டிரமாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணையில், நாடு தழுவிய அளவில் பா... மற்றும் சங் பரிவார்க் கும்பலின்பின்னணி திட்டமிட்ட வகையில் பலமாக இருந்து வந்திருக்கிறது என்பது தக்கஆதாரங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்துத்துவா தீவிரவாதம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களை மத வாரியாகப் பிரித்து, பிளவுகளை உண்டாக்கி அதன்மூலம்மோதல்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் காணும் இந்துத் தீவிரவாதக்கூட்டத்திடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும், இந்தக்கூட்டத்தின் இரகசிய வன்முறைத் திட்டங்களைக் கண்காணித்து சட்ட ரீதியானநடவடிக்கைகளை காலந்தாழ்த்தாது உடனடியாக எடுக்கவேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களிலும், பொது இடங்களிலும், ஏற்கெனவே பலமுறை தடைசெய்யப்பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பயிற்சிகளை சட்ட ரீதியாகத்தடுக்கவேண்டும் என்றும், பொதுக்கூட்டங்களில் வன்முறைகளைத் தூண்டும்வகையில் மிக இழிந்த முறையில் பேசும் சங் பரிவார்க் கும்பலின்மீது கண்டிப்புமிகுந்த உரிய நடவடிக்கைகள் தேவையென்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7 ():

தமிழ்நாட்டில் கோட்சே பெயரில் பேரவையா?

உலகம் போற்றும் காந்தியார் அவர்களைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேபெயரில் பேரவை (குறிப்பாக பழனியில்)களை அமைத்து, கோட்சே கனவைநனவாக்குவோம் என்று தட்டிகள் வைத்துப் பிரச்சாரம் செய்யும் போக்குவெளிப்படையாக வன்முறைக்குக் கத்தி தீட்டும் செயல் என்பதால், இந்தஅமைப்புகள்மீதும், அதற்கான பொறுப்பாளர்கள்மீதும் சட்டம் தன் கடமையைச்செய்யவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8:

பயிற்சிப் பட்டறைகள்

திருச்சி - திருவெறும்பூர், சாத்தனூர் (திருவண்ணாமலை), ஒகேனக்கல், சென்னை அருகே சுயமரியாதைச் சுடரொளி சோ. ஞானசுந்தரம் தோட்டம் ஆகியஇடங்களில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது என்றுஇச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 9:

மகளிர் பங்கேற்கும் கூட்டங்கள்

முற்றிலும் மகளிரே பங்கு ஏற்கும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்றும், மகளிரணி மற்றும் மகளிரணி பாசறைப் பொறுப்பாளர்கள் அதற்கான திட்டத்தைவகுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தீர்மானம் 10:

திராவிடர் எழுச்சி மாவட்ட மாநாடு

மயிலாடுதுறையில் வரும் 2009 ஜனவரி 3 ஆம் தேதியன்று திராவிடர் எழுச்சிமாவட்ட மாநாட்டினை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது

லேபிள்கள்: , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு