ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

20 நவம்பர், 2008

எங்கே போனே செல்லம்? காத்திருக்கும் விஜய்

எங்கே போனே செல்லம்?
காத்திருக்கும் விஜய்

காலம் மட்டுமல்ல, கால்ஷீட்டும் பொன் போன்றது என்பதை பிறருக்கு உணர Prakash Rajவைத்தவர் பிரகாஷ்ராஜ். ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், பிரகாஷ்ராஜ் டேட்ஸ் கிடைக்கறது பெரிய விஷயம். அவரோட டேட்ஸ் கிடைச்சிருப்பதால் நான் சீக்கிரம் போயாகணும் என்று பாதியிலேயே ஓடினார் தான் இயக்கிக் கொண்டிருந்த பந்தயம் படப்பிடிப்பை தொடர!

பிரகாஷ்ராஜின் சொந்தப்படமான வெள்ளித்திரையை இயக்கிய டைரக்டரும், வசனகர்த்தாவுமான விஜி, இவரது கால்ஷீட் சொதப்பலால் மனம் நொந்து சாபம் விட்டதெல்லாம் தமிழ் சினிமாவின் சந்து பொந்துகள் கூட அறிந்த சங்கதி. இவ்வளவு ஏன்? தற்போது இவரது தயாரிப்பில் உருவாகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘அபியும் நானும்’ படப்பிடிப்புக்கே இவர் ஒழுங்காக வராமல் படமே தாமதமாகி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.

இப்படி தன் படங்களுக்கே தண்ணி காட்டும் பிரகாஷ், ஊரார் படங்களுக்கு உடுக்கடிக்க மாட்டாரா என்ன? வில்லு படத்தில் இவரும் விஜயும் சேர்ந்து வரும் காட்சிகள் சுமார் 20 நாட்கள் படம் பிடிக்க வேண்டுமாம். கொடுத்திருந்த தேதிகளில் ஆஜராக வேண்டிய பிரகாஷ்ராஜ், எங்கு போனார் என்றே தெரியவில்லையாம். நாலு மொழி ராஜாவாயிற்றே? எல்லா லாங்குவேஜ் கம்பெனிகளுக்கும் போன் போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா வரும் வரை படப்பிடிப்பை ஒத்தி போட்டிருக்கிறார்களாம். எங்க இருக்கீங்க செல்லம்ம்ம்ம்...?

லேபிள்கள்: , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு