ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

30 நவம்பர், 2008

ஸ்ரேயாவின் சந்தோஷம் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தினத்தோடு போய்விட்டது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது என்று சந்தோஷப்பட முடியாத நிலையில் இருக்கிறார் ஸ்ரேயா. அதே நிலையில்தான் இருக்கிறார்கள் த்ரிஷாவும், நயன்தாராவும். கந்தசாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, "நான் ஹாலிவுட் படத்திற்கு போகணும். என் போர்ஷனை சீக்கிரம் முடிங்க" என்று அப்படத்தின் இயக்குனர் சுசிகணேசனுக்கு பிரஷர் கொடுத்த ஸ்ரேயா, சொன்ன மாதிரியே அவசரம் அவசரமாக அங்கே போய் நடித்துக் கொடுத்தார்.

ஆனால், ஸ்ரேயாவின் சந்தோஷம் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தினத்தோடு போய்விட்டது. வெளிவந்த சில நாட்களிலேயே அந்த படம் பயங்கர ஃபிளாப் ஆகிவிட்டதாம். ஹாலிவுட் தள்ளிவிட்டால் என்ன? பாலிவுட் இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டவருக்கு அங்கேயும் இதே நிலை. இவர் நடிப்பில் வெளிவந்த பாலிவுட் படங்களும் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு ஓட, சென்¬க்கே ஓடி வந்துவிட்டார் ஸ்ரேயாவும்.

தங்களின் போட்டியில் ஒருவர் விலகிப் போய்விட்டார் என்று ஸ்ரேயாவின் இந்திப்பட மோகத்தை சந்தோஷமாக அனுபவித்து வந்த த்ரிஷாவும், நயன்தாராவும் அவரது சென்னை வருகையை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள். வந்த வேகத்தில் வலையை வீச ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரேயா. துட்டு விஷயத்தில் மட்டுமல்ல, துணி விஷயத்திலும் ஸ்ரேயாவின் தள்ளுபடியை கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம் இருவரும்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு