ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

22 நவம்பர், 2008

விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும் அறிக்கை அரசி நமது நாட்டின் இராணுவத்தையே இந்து மயமாக்கும் கொடுமை கண்டு வாய் திறக்காதது ஏன்? ஏன்? ஏன்?


இன்றைய கேள்வி?

ஏன்? ஏன்? ஏன்?

அப்பாவிகளான ஈழத் தமிழர்கள் சிங்களஇராணுவ குண்டு மழையிலிருந்துகாப்பாற்றப்படவேண்டும்; சொந்தமண்ணிலேயே அம்மக்கள் ஏதிலிகளாகி, காடுகளிலும், வனாந்தரங்களிலும் பசி, பட்டினியோடு நாளும் செத்துக்கொண்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களுக்கு நிவாரணஉதவி போய்ச் சேரவேண்டு மென்றும் குரல் கொடுத்தால், அப்படிப்பேசுகிறவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்திற்குத் துணைபோகிறவர்கள் என்று அறிக்கை விடும் அறிக்கை அரசி ஜெயலலிதா அவர்கள்கடந்த இரு வாரங்களுக்கு மேல் மகாராட்டிரத்தில் மாலேகான் குண்டுவெடிப்புசம்பவத்தையொட்டிய புலன் ஆய்வில், இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ். சாமியார்சாத்வி பிரக்யாக்சிங், இராணு வத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து பல்வேறுவெடிகுண்டு பயிற்சிப் பாசறைகளை நடத்திய லெப்டினன்ட் கர்னல் புரோகித், மகந்த் என்ற பெயரில் உலவி இந்து இராணுவப் பயிற்சி அளித்த தயானந்த்பாண்டே என்ற பார்ப்பனர் போன்றவர்களின் தீவிரவாதங்கள் பகல்வெளிச்சம்போல் தெரியும் நிலையில், கண்டன அறிக்கை விடாதது ஏன்? ஏன்? இறையாண்மைக்கு, மக்கள் அமைதி வாழ்விற்கு இந்த ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு கலாச்சாரம், ஹவாலா மோசடி போன்றனவும் சவால்கள்அல்லவா?

அதை ஏன் இதுவரை கண்டிக்க முன்வரவில்லை செல்வி ஜெயலலிதா? மோடிராஜ்ஜியத்திற்கு மோசம் வரும் என்பதாலா?

இங்கு இல்லாத விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும் அவர், நமதுநாட்டின் இராணுவத்தையே இந்து மயமாக்கும் கொடுமை கண்டு வாய்திறக்காதது ஏன்? ஏன்? ஏன்?

லேபிள்கள்: , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு