ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

19 நவம்பர், 2008

ரஜினியின் பேச்சு; முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க. உங்களால் அவங்களை ஜெயிக்க முடிந்ததா?

புலிகள் பற்றிய ரஜினியின் பேச்சு
பிரபாகரன் பாராட்டு

கிளிநொச்சியில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் Prabhakaranஉக்கிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் பல்வேறு உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முப்பது வருடமாக உங்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லையே? நீங்க ஆம்பிளைங்கதானா? என்றார் ஆவேசத்தோடு. ரஜினியின் இந்த பேச்சுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.

விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனை சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் பிரபாகரன் பேசிய விஷயங்கள் கொழும்பில் வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க... Rajinikanthஉங்களால் அவங்களை ஜெயிக்க முடிந்ததா? என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் போது கூறியதன் மூலம் எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே பிரதிபலித்திருக்கிறார். எங்களுடைய தியாகங்கள் என்றைக்கும் வீண் போகாது என்று பிரபாகரன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

போர் வியூகங்களுக்கு இடையே, தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களையும் பிரபாகரன் கூர்ந்து கவனித்து வருகிறார் என்பது இதன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது

லேபிள்கள்: , , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு