ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

28 நவம்பர், 2008

பிரதமரிடம் இரகசியமாக பேசவேண்டுமென்றால், ஒரு முதலமைச்சருக்கு வேறு வசதிகளே கிடையாதா?

அறிக்கை எதற்காக?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரினை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை மேலும் வலியுறுத்த, தமிழக அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழு முதலமைச்சர் தலைமையில் டிசம்பர் 4 அன்று டில்லி செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் - தமது குடும்பச் சொத்தைக் காப்பாற்றவும், அமைச்சர் இராசாவைக் காப்பாற்றவும் அரசு செலவில் கருணாநிதி டில்லி செல்கிறார் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே! அவர் சொல் வது உண்மையானது என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும், அப்படி ஒரு இரகசியம் பேச அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டா போவார்கள்?

பிரதமரிடம் இரகசியமாக பேசவேண்டுமென்றால், ஒரு முதலமைச்சருக்கு வேறு வசதிகளே கிடையாதா?

தன்மீதுள்ள வழக்குகளை விலக்கிக் கொள்ள பிரதமர் வாஜ்பேயிடம் வைத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்ளாததால்தான் மத்தியில் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவினை ஜெயலலிதா விலக்கிக் கொண்டாரே - அந்த முறையில், அந்தச் சுபாவத்தில்தான் இப்படி ஒரு அறிக்கையா

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு