ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

23 நவம்பர், 2008

உலகின் மிகப் பெரிய இடுகாடு;ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக் கான தாழிகள் வரிசை வரிசை யாகக் கிடைக்கின்றன


உலகின் மிகப் பெரிய இடுகாடு

ஆதிச்சநல்லூரின் தொன் மையை நமக்குச் சுட்டிக்காட் டியவர் டாக்டர் கால்டுவெல் அவர்கள். திருநெல்வேலியி லிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் உள்ளது. இது ஓர் இடுகாடு - இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப் பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்த வர்களை வைத்துப் புதைத் துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ் வாறு புதைக்கப்பட்ட பானை களை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். இந்தத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் மண்ணுக் கடியிலிருந்து கிடைக்கின்றன. தென்பாண்டி நாட்டில் இத் தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக் கான தாழிகள் வரிசை வரிசை யாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப் பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்பொருள்களை டாக்டர் ஜாகர் ஜெர்மன் நாட்டுக்குக் கொண்டு சென்றார். பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல் லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன. ஆதிச்சநல் லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப் போய்விட் டார். இவ்வாறு ஆதிச்ச நல் லூரில் கிடைத்த மிகத் தொன்மை வாய்ந்த பொருள் கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதை பொருள் சின்னங்கள் கிடைத் தால் ஆதிச்சநல்லூரின் தொன் மையான வரலாறு நமக்குத் தெரியவரும்.

1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, திராவிடர்களின் முன்னோர் கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந் தனர் என்று தெரிய வரு கிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ் திரேலியா தென் இந்தியா வோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட் டையும் இது உறுதி செய் கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூம ராங் என்னும் ஒரு வகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களை தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒரு வகை ஆயுதம் தான் பூமராங். ஆதிச்சநல்லூர் அகழ்வாய் வைப் பற்றி அறிஞர்களின் விரிவான ஆய்வு நூல்கள் இதுவரை வெளிவரவில்லை.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ் வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கிய பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளி யிட்டுள்ளார். ஆதிச்சநல்லூ ரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளி யிட்டார்.

பத்தாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழர்கள் இரும்பை கண்டுபிடித்து - தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகிய வற்றையும் உருவாக்கினர். பயிர்த் தொழில், சட்டிப் பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற வற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து, கடல் வாணிபம் செய்து உலகப் புகழ் பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின் னங்கள் உறுதிப்படுத்துகின் றன. மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து - அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறிய முடிகிறது. சங்க இலக் கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமை யாகக் கூறப்பட்டுள்ளன

லேபிள்கள்: , ,

2 கருத்துகள்:

Blogger சிக்கிமுக்கி கூறியது…

அரிய செய்தியைத் தந்திருக்கிறீர்கள்!
ஆனால் -
உங்கள் பதிவின் வண்ணச் சேரக்கையைத் தொடர்ந்து பார்த்தால் கண்ணுக்கு ஊறு நேரும்.
மாற்றினால் படிக்க உதவியாக இருக்கும்.

23 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:43  
Blogger தமிழ் வெங்கட் கூறியது…

nantri nanbara

23 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:16  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு