வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க வேண் டும். பெண் சிசுக் கொலை களை தடுக்க வேண்டும் தமிழச்சி தங்கபாண்டியன்

பெரியார் சிந்தனை மய்யம்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் சொற்பொழிவு


வல்லம், நவ.16- பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் சிந்தனை மய்யத்தில் எட்டாவது தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழி வுக்கு பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் நல். இராமச் சந்திரன் தலைமை வகித்தார். அவர் தமது உரையில் தந்தை பெரியாரின் கருத்துகள் சமு தாயத்தை எந்த அளவிற்கு உயர்த்தி இருக்கின்றன என்றும் தொழில் நுட்பக் கல்வி பயி லும் மாணவ மாணவிகள் தாம் பயிலும் கல்வியோடு மட்டுமல் லாமல் தந்தை பெரியார் சிந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு முழுமை பெற்ற மனிதனாக வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பெரி யார் சிந்தனை மய்ய இயக்குநர் டாக்டர் ந. வேலுசாமி வரவேற் றுப் பேசினார். சிறப்புரை யாற்றிய கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் சமுதாயம் மகளிரிடமும் மகளிர் சமுதா யத்திடமும் எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகையில் தந்தை பெரியாரின் கருத்து களால் சமுதாயம் முன்னேறி உள்ள நிலையினை எடுத்துக் கூறினார். வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க வேண் டும். பெண் சிசுக் கொலை களை தடுக்க வேண்டும். பெண் களை தெய்வமாக கருத வேண்டாம் சக மனிதனாக கருதினால் போதும் என்றும் பெண்களை பார்க்காதீர்கள் நோக்குங்கள் என்றும் குறிப் பிட்டார். பார்ப்பதற்கும் உள்மனதை நோக்குவதற்கும் உள்ள வேறுபாட்டை எடுத் துக் கூறினார். ஆதிகாலத்தில் பெண்களின் தைரியத்தையும் கட்டடக் கலையை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தது பெண் என்றும் இரு கற்களை உராய்ந்தால் தீ வரும் என்பதையும் கண்டு பிடித்தது பெண்தான் என்று குறிப்பிட் டார். தில்லையாடி வள்ளி யம்மை பற்றியும் வீர தீரத்தில் சிறந்த விளங்கிய பலரை பற்றி யும் விளக்கி கூறினார். பின்னர் மாணவ மாணவிகள் தொடுத்த வினாக்களுக்கு சிந்தனையை தூண்டும் வகையில் பதிலளித் தார். முன்னதாக பெரியார் சிந்தனை மய்யத்தின் விரிவுரை யாளர் டாக்டர் ச. அருணாச் சலம் அறிமுகவுரையாற்றினார். டாக்டர் செல்வக்குமார் வாழ்த் துச் செய்தி வாசித்தார். முது நிலை சமூகப் பணித்துறை மாணவி கவுசல்யா நன்றி கூறினார். முதலாமாண்டு தக வல் தொழில் நுட்ப மாணவி இளங்கவின் இணைப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் பவர் தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் டாக்டர் எச். பர்வின் தமிழ் பல்கலைக் கழக இலக்கியத் துறை பேராசிரியர் திலகவதி மற்றும் பேராசிரியர் கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை