ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

21 நவம்பர், 2008

மர்மயோகி, தலைவன் இருக்கின்றான்...
-கமல்ஹாசனின் அவசர விளக்கம்

மர்மயோகி படம் கைவிடப்படவில்லை என்ற பிரமிட் சாய்மீராவின் கருத்தையே Kamal Hasanதனது தரப்பிலும் உறுதி செய்திருக்கிறார் கமல். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறதே தவிர, மர்மயோகியை கைவிடவோ, கிடப்பில் போடவோ இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார் அவர்.

இதற்கிடையில் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய படத்தின் தலைப்பு குறித்தும் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் கமல். இப்படத்தின் பெயர் தலைவன் இருக்கிறான் என்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. உண்மையில் படத்தின் பெயர் தலைவன் இருக்கின்றான் என்பதுதானாம். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை என்றும் கமல் தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் கமல் ம-வில் துவங்கும் பெயர்களை கொண்ட படங்களில் நடித்தால், அது வெற்றி பெறுவதில்லை. அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் வருகின்றன என்று சென்ட்டிமென்ட் வெடிகளை கொளுத்திப் போடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். மகராசன், மகாநதி என்று ஓடாத படங்களையும், மருதநாயகம் என்ற துவக்கப்படாத படத்தையும் உதாரணமாக காட்டும் அவர்கள், அந்த லிஸ்டில் மர்மயோகியும் இணைந்து விட்டதோ என்று ஐயத்தை கிளப்புகிறார்கள். பகுத்தறிவு சிந்தனை கொண்ட கமல், இதை பற்றியெல்லாமா கவலைப்பட போகிறார்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு