நிலவில் மூவர்ணக்கொடி: சாதித்தது சந்திரயான் சந்திரயான் வெற்றிக்கு நாசா பாராட்டு


: சந்திரயான்-1 செயற்கைக்கோளில்இடம்பெற்றிருந்த எம்..பி., கருவி, நேற்று இரவு 8.31 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் இறங்கி, நிலவின்மேற்பரப்பில் நமது தேசியக்கொடியை இடம்பெறச்செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இந்தியாவின் முதலாவது ஆளில்லா செயற்கைக்கோளானசந்திரயான்-1, பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட் மூலம் கடந்தமாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த 12ம் தேதி நிலவிலிருந்து 100 கி.மீ., தொலைவிலானஅதன் இறுதி சுற்றுப்பாதையில் சுற்றவிடப்பட்டது.



செயற்கைக்கோளில் உள்ள 11 ஆராய்ச்சிக் கருவிகளில் ஒன்றான, "மூன் இம்பாக்ட் புரோப்' (எம்..பி.,) செயற்கைக்கோளிலிருந்து நேற்று இரவு 8.06 மணிக்கு கழற்றி விடப்பட்டது. பெங்களூரில் உள்ள, "இந்தியன் டீப்சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திலிருந்து இதற்கான உத்தரவு சந்திரயான் செயற்கைகோளுக்கு வழங்கப்பட்டது. இந்தஉத்தரவினால், எம்..பி.,யில் உள்ள இன்ஜின் இயக்கப்பட்டு, அக்கருவி நிலவை நோக்கி பயணித்தது. 25 நிமிடபயணத்திற்குப் பின் எம்..பி., கருவி நேற்று இரவு 8.31 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கியது. எம்..பி., கருவி நிலவில் மோதி இறங்குவதை, பெங்களூரில் உள்ள "டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திலிருந்துமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் ஆகியோர் பார்வையிட்டனர். திட்டமிட்டபடிபணிகள் நடைபெற்றதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். நிலவை நோக்கிச் சென்ற 25 நிமிடபயணத்தின்போது, அக்கருவி நிலவின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை பல்வேறு புகைப்படங்கள் எடுத்துள்ளது. இந்த தகவல்கள் எம்..பி., கருவியிலிருந்து சந்திரயானுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பெங்களூரு, பைபாலுகிராமத்தில் உள்ள "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திற்கு அனுப்பப்படும்.



எம்..பி., கருவி தனது 25 நிமிட பயணத்தின் போது, நிலவுக்கும் கருவிக்கும் உள்ள தொலைவை தொடர்ந்துகணக்கிடவுள்ளது. இதன்மூலம் நிலவில் ஒரு பொருள் இறங்கும்போது ஏற்படும் ஈர்ப்பு சக்தி கணக்கிடப்படவுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா நிலவிற்கு மனிதனை அனுப்பும் போது, நிலவில் விண்கலத்தை மெதுவாக இறக்குவதற்குத்தேவையான தொழில்நுட்ப அறிவைப் பெற இது மிகவும் அவசியம். எம்..பி., கருவியின் நான்கு புறங்களிலும் இந்தியமூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய மூவர்ணக்கொடி முதல்முறையாக நிலவின்மேற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, நிலவின்மேற்பரப்பில் தனது நாட்டு தேசியக்கொடியை இடம்பெறச் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாபெற்றுள்ளது. இனி நிலவைப் பார்க்கும் ஒவ்வொரு இந்தியனும், "அங்கு ஏதோ ஒரு இடத்தில் இந்திய மூவர்ணக்கொடிஉள்ளது' என பெருமிதம் கொள்ளலாம்.



சந்திரயான் வெற்றிக்கு நாசா பாராட்டு: "நாசா'வின் இந்தியப் பிரதிநிதி அலோக் சாட்டர்ஜி கூறியிருப்பதாவது: சந்திரயான்-1 சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது எங்களுக்கு நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு உள்ளது. முற்றிலும்அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு ஒரு குழு, செயற்கைக்கோளையும், அதன் சுற்றுப்பாதையையும் சரியாகதிட்டமிட்டு இப்பணியைச் செய்துள்ளது. நல்ல அனுபவம் வாய்ந்த சிறந்த விஞ்ஞானிகள் இத்திட்டத்தில்சேர்க்கப்பட்டுள்ளனர். நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பும் "நாசா'வின் முதல் முயற்சி தோல்வியடைந்ததா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், "நாசா'வின் இத்தகைய சில முயற்சிகள் கடினமானவையாகஇருந்திருக்கின்றன. இந்த வெற்றியின் மூலம் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம். இவ்வாறு அலோக் சாட்டர்ஜிகூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை