ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

18 நவம்பர், 2008

அலுவலகத்தில் பாலியல் தொல்லையால் அதிகாரியை பெண் அலுவலர்கள் தாக்கினர் ?

அலுவலகத்தில் பாலியல் தொல்லையால்
அதிகாரியை பெண் அலுவலர்கள் தாக்கினர்

மராட்டிய மாநிலத்தில் சுகாதாரத்துறை மாவட்ட உயர் அதிகாரியின் பாலியல் தொந்தரவால், அவ்வலுவலக பெண் அலுவலர்கள் அவரை அடித்து உதைத்து ஆடைகளை பறித்து அறைக்கு வெளியே தூக்கிப்போட்டனர்.

மராட்டிய மாநிலம் ரத்ன கிரியில் மாவட்ட சுகாதார அதிகாரியாக பணியாற்றி வருபவர் பிரதீப் சாவ்லே (வயது 57). இவர் தனது அலுவலகத் திலுள்ள பெண் அலுவலர் களை பாலியல் தொந்தரவு செய்வதும், தனது இச்சைக்கு கட்டுப்படாத பெண்களை இடமாற்றம் செய்யப்போவ தாக மிரட்டுவதும், இரவு நேரங்களில் பெண் அலுவ லர்கள் வீட்டுக்கு வந்து அத் துமீறி நுழைவதும், ஆபாச எஸ்.எஸ்.எம்.களை அனுப்புவ தும் பெயர் சொல்லாமல் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதாக ஏகப்பட்ட குற்றச் சாற்றுகள் இவர்மீது உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர்மீது துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கை இன் னும் சமர்ப்பிக்கப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில் மத்திய உணவு இடைவேளை முடிந்த சில நிமிடங்களில் அவரது அறைக்குள் புகுந்த இரண்டு பெண் அலுவலர்கள் உள்ளிட்ட சிலர் பிரதீப்பை தாக்கி அவரது உடைகளை கிழித்தெ றிந்தனர். பின்னர் அவரது அறையிலிருந்து அவரை வெளியே தூக்கிவந்து போட்டனர்.

இதுகுறித்து ரத்னகிரி தலைமை நிருவாக அதிகாரி கே. எஸ் சிங்கரே கூறுகையில் பிரதீப்பை மருத்துவ பரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.


சட்டக் கல்லூரி கலவரம் 14 மாணவர்கள் கைது

சென்னை, நவ.17 சட்டக் கல்லூரி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இது வரை 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், கடந்த 12ம் தேதி இரு பிரிவு மாண வர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க போலீ சார் 25 தனிப்படைகளை அமைத்து, பல ஊர்களுக்கு சென்று தேடினர். பாலமணி கண்டன், ஜெயக்குமார், திலீ பன்ஜோ, பிரபாகரன், கோகுல் ராஜ், வி.கோவிந்தன், பி.கோவிந் தன் ஆகிய 7 பேரை மறுநாளே கைது செய்தனர். மதுரை சிவகதிரவன், கடலூர் ராஜா, தஞ்சை பிரேம்நாத் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா நகர் இளம்முகில், நெல்லை கோபாலகிருஷ்ணன், மதுராந் தகம் பிரேம்குமார், உளுந் தூர்பேட்டை இளையராஜா ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். 4 பேரும் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் பரமராஜ் முன்பு ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு