ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

26 ஏப்ரல், 2009

மொக்கை:நகைச்சுவை! படத்திற்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம்…?

மொக்கை:நகைச்சுவை! படத்திற்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம்?
நேற்று இரவு 10 மணி

கரண்ட் இல்லை

;காற்றும் இல்லை,சரி என்று

மொட்டை மாடிக்கு சென்று படுத்தேன்                                    

மொக்கை ..மொக்கை..சூர மொக்கை என்று

சொல்கிறார்களே நாமும் முயற்ச்சி செய்தால் என்ன..1

விளைவை படித்து அநுபவிங்கள்...!

 

நகைச்சுவை

..ஆசிரியர்: ஏண்டா “home work” பண்ணல..?

மாணவன்; சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!

 

ஆசிரியர்;ரெண்டும் ரெண்டும் சேர்ந்தால் எத்தனை.?

. மாணவன்;சார் அசிங்கமா பேசதீங்க, ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால்தான் நல்லது...!

 

..ஆசிரியர்:டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....

. மாணவன்;அதுதான் சார் படிக்கவே வெறுப்பா இருக்கு....!

ஐ.டி.காதலன்:அன்பே “சத்தியம்பண்ணி சொல்லுறேன் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்..!

காதலி:விவசாயம் பாக்குற நல்ல மாப்பிள்ளையை எங்கப்பா எனக்கு முடிவு பண்ணிட்டார்...!

 

இன்னும் கொஞ்சம் மேட்டர் இருக்கு அது அடுத்த பதிவில்..

பிடிச்சா ரசியுங்கள் ..அப்படியே ஒட்டும் குத்துங்க...!

 

படத்திற்கும் பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .ஹி.ஹி.ஹி..ஹி.

லேபிள்கள்: , , ,

25 ஏப்ரல், 2009

மைக்ரோசாப்ட்: 23 ஆண்டுகளில் முதல் வருவாய் வீழ்ச்சி

Microsoftசான் பிரான்ஸிஸ்கோ: கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஐடி ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட். 

அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிட்டதிலிருந்து சரிவையே கண்டிராத நிறுவனமாகத் திகழ்ந்தது மைக்ரோசாப்ட். 

முதல் முறையாக இந்தக் காலாண்டில்தான் மைக்ரோசாப்டின் வருவாய் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கக் கொடுத்திருந்த ஆர்டர்களை திடீர் திடீரென 
ரத்துசெய்து வருவதால், விண்டோஸுக்கான தேவை இந்த காலாண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். 

ஆனால் இந்த மோசமான வர்த்தக சூழல் இந்தக் காலாண்டோடு முடிந்துவிடும் என்றும், அடுத்த காலாண்டில் மந்த நிலை இருந்தாலும் விரைவில் பழைய ட்ராக்குக்கு விற்பனை திரும்பும் என்றும் மைக்ரோசாப்ட் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 

'கடந்த காலாண்டில் மார்க்கெட் நிலவரம் மோசமாக இருந்தாலும், திருப்தியளித்த ஒரு விஷயமும் உண்டு. அது, சிக்கன 
நடவடிக்கைமற்றும் இருக்கிற ஆர்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள வாடிக்கையாளர் சேவைப் பணியாளர்கள் செய்த முயற்சி. இதனால் வருவாய் குறைந்தாலும், நஷ்டத்துக்குச் செல்லாமல் தவிர்க்கப்பட்டது', என்கிறார் மைக்ரோசாப்ட் சிஎப்ஓ க்றிஸ் லிட்டெல்

லேபிள்கள்: , , ,

24 ஏப்ரல், 2009

ராசபக்சேவுக்கு சமீபத்தில்வந்த பிறந்த நாள் பரிசு கேக்


  ராசபக்சேவுக்கு              சமீபத்தில்வந்த பிறந்த நாள் பரிசு கேக் இது..!

அரசியலை பார்தால்,அரசியல்வாதிகள் பேச்சை கேட்டால்

எரிச்சலாக உள்ளது. பச்சோந்தியை போல மாறி மாறி பேசி

மக்க்ளை முட்டாளக்குகிறார்கள்.எனக்கு தெரிந்து நியாமான,

நேர்மையான அரசியல்வாதி,அல்லது அரசியல் கட்சி இருப்பதாக

தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களன்....! 


படத்தை பர்ர்த்து கருத்தை சொல்லுங்கள்...1


லேபிள்கள்: , ,

16 ஏப்ரல், 2009

இதுதான் தேர்தல் கூட்டணியாம்----!கூட்டணிக்கு ஏற்றபடி முகங்களை மாற்றி கொள்(ல்)ளலாம்..ஹி.ஹி ஹி                                                  எனக்கு மின் அஞ்சலில் வந்த படங்கள் உங்கள் பார்வைக்கு !

 

கோடை வெயில் தாங்க முடியலையாம் ! என்ன கொடுமை சார்---?இது --!
                                பிஞ்சிலே பழுத்து விட்டதா?

                                                                 


                                                   காலையில் இப்படி உடற் பயிற்சி செய்ய வேண்டுமாம் ..........!

 


                             

                      இதுதான் தேர்தல் கூட்டணியாம்----!கூட்டணிக்கு ஏற்றபடி முகங்களை மாற்றி கொள்(ல்)ளலாம்..ஹி.ஹி ஹி

 
           பதிவு போட மேட்டர் சிக்கலை.....!எதோ ஒப்பேற்றி இருக்கிறேன்.

பாத்து வோட்டு போடுங்க......!நன்றிங்கோ..!

லேபிள்கள்: , , ,

15 ஏப்ரல், 2009

ஒரே குடும்பத்தில் 81 சுயமரியாதைத் திருமணங்கள்

தமிழ்நாட்டின் சமூக மாற்றத்தில் மிக முக்கியப் பங்காற்றியது பெரியார் அறிமுகப்-படுத்திய சுயமரியாதைத் திருமணங்கள்தான். தமிழினத்தின் தன்மான உணர்வை இழிவு-படுத்தும் வைதிகத் திருமணங்களைப் புறந்தள்ளி தன்மானத் திருமண முறையை பெரியாரின் தொண்டர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.

அது தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கி, ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற கொள்கைகளைத் தீவிரமாய்ப் பிரச்சாரம் செய்து வந்த காலகட்டம்.

பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! பார்! என்று தமிழகத்தில் புரட்சிப் பூபாளம் பாடி குடும்பம் குடும்பமாய் தந்தை பெரியாரோடு தன்மானத் தமிழர்கள் இணைந்தபோது, பச்சை அட்டை குடியரசை வாங்கிப் படித்து இந்த இயக்கத்தில், தான் சேர்ந்ததோடு இல்லாமல் தன் உடன்பிறந்த ஆறு பேர்களையும் சேர்த்து தாராசுரம் சுயமரி-யாதைக் குடும்பம் என்ற பெயர் பெற வைத்தவர் மறைந்த சக்கரபாணி. பழுத்த வைதிகரான வை.கோவிந்தசாமி (செட்டியார்) அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு.சக்கர-பாணி. காவிந்தசாமி அவர்கள் தனது மூன்று மகன்களுக்கு மட்டுமே திருமணம் செய்து வைத்த நிலையில், தமது வீட்டில் இனிமேல் பார்ப்பனரை வைத்து எந்த நிகழ்ச்சியும் நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவை சக்கரபாணியும் அவர் உடன்பிறந்தவர்களும் எடுத்தார்கள்.

தங்கள் உறவினர்தம் ஒத்துழைப்பின்மை, ஊராரின் எதிர்ப்பு, சனாதனிகளின் கலவரம், சுயமரியாதைத் திருமணம் செய்தால் ஜாதியைவிட்டு நீக்கப்படுவீர்கள் என்ற அச்சுறுத்-தல் போன்ற அனைத்தையும் புறந்தள்ளி 1936ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் அமாவாசை தினத்தன்று தன் தம்பி வரதராஜனுக்கும், புனிதவல்லி என்ற அம்மை-யாருக்கும் தாராசுரத்தில் முதல் சுயமரியாதைத் திருமணத்தை குடந்தை திரு.சின்னத்தம்பி அவர்கள் தலைமையில் ஒரு மாநாடு போல் நடத்தினார். அந்தத் திருமணப் பந்தலில்,

"பெண்ணுக்கு உரிமை தரவில்லையேல்
பின்னிந்த உலகினில் வாழ்க்கையில்லை"
"பெண்ணடிமை பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே"

போன்ற பதாகைகள் கட்டப்பட்டிருந்தன.

தனது அடுத்த தம்பி ராமானுஜத்திற்கு 1940ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் குஞ்சம்மாள் என்ற அம்மை-யாரைத் திருமணம் செய்து வைத்துள்ளார். இன்று ராகுகாலத்திலோ அமாவாசையிலோ திருமணம் செய்வது என்பது மிகமிக எளிது. ஆனால், 1936, 1940களில் இது எப்படி சாத்தியமாயிற்று? சுயமரியாதைத் கொள்கை-களின் மீது அவர்கள் வைத்திருந்த பற்றும் பிடிப்புமே அதற்குக் காரணமாகும். அன்று ஜாதி நீக்கம் போன்று அச்சுறுத்தியவர்-களெல்லாம் பின்னாளில் போட்டிபோட்டுக் கொண்டு சம்பந்தம் செய்து கொள்ள முன்வந்-தார்கள். இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.

ஒரே மேடையில் ஒரு திருமணத்திற்குமேல் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தால் அந்த மணமக்கள் சிறப்பாக வாழ-மாட்டார்கள் என்பது ஒரு மூடநம்பிக்கை. அப்படியே செய்ய நேர்ந்தாலும் ஒன்றுக்குப்-பின் மற்றொன்று என்றுதான் செய்வார்கள். ஆனால், தாராசுரம் சக்கரபாணி தன் குடும்பத்தில் இரண்டு, மூன்று, ஏன் நான்கு திருமணங்கள்கூட ஒரே மேடையில் ஒரே நேரத்தில் சர்வசாதாரணமாக நடத்திக் காட்டியுள்ளார். இதனால் திருமணச் செலவுகுறைவு, உறவினர்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதாரச் செலவு குறைவு, பயண அலைச்சல்கள் குறைவு என்பது அவரது கணக்கு அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதே-போன்று திருமண ஏற்பாடுகள் முடிவுற்ற நிலையில் ஏதேனும் இயற்கை இடர்பாடு எற்பட்டாலும் எப்படி நாணயத்திற்கு இரு பக்கமோ அதுபோல் வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் இருபக்கங்கள் என்ற கொள்கை அடிப்படையிலே நிகழ்ச்சிகளைத் தள்ளி வைக்காமல் நடத்திக் காட்டியதும் ஒரு சாதனைதான்.

அன்று தொடங்கி இன்று வரை சுமார் 81 திருமணங்கள் இந்தக் குடும்பத்தில் நடை-பெற்றுள்ளன. அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகின்றனர்.

இத்திருமணங்களில் பல ஜாதிமறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பதிவுத் திருமணம் மற்றும் சிக்கனத் திருமணங்களும் அடங்-கியுள்ளமை கூடுதல் சிறப்பாகும். மணமக்-களின் பெயர்களோ தனித்தமிழிலும், புரட்சி-யாளர்களின் பெயர்களாகவும் இருக்கின்றன. மாஸ்கோ, தமிழ்க்கொடி, அறிவுக்கொடி, மணியரசு, ஸ்டாலின், செங்கொடி, பூங்கொடி, மின்னல்கொடி, சிறைவாணி, ரஷ்யா, லெனின், வாலண்டினா, இங்கர்சால், ரூசோ எனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

குடந்தை கே.கே.நீலமேகம், தி.பொ.-வேதாசலம், தமிழர் தலைவர் கி.வீரமணி, ஈ.வெ.கி.சம்பத் உள்ளிட்ட பல திராவிட இயக்கத் தலைவர்கள் திருமணங்களுக்குத் தலைமையேற்றுள்ளனர்.

இந்தக்குடும்பத்தில் அண்மையில் நடந்த 81ஆவது சுயமரியாதைத் திருமணத்தில் ஒரு சிறு கையேட்டை வெளியிட்டுள்ளனர். அதில் 81 மணமக்கள் பெயர்கள், மணநாள் மற்றும் சுயமரியாதைத் திருமணம் குறித்த தந்தை பெரியார், அன்னை மனியம்மையார், முதலமைச்சர் கலைஞர் ஆகியோர் கருத்துகளையும் இணைத்து அச்சிடப்-பட்டு அனைவருக்கும் வழங்கப்-பட்டது. ஒவ்வொரு சுயமரியாதைத் திருமணத்திலும் இதுபோன்று சிறு கையேடுகளை வழங்கினால், இன்னும் இது போன்ற தன்மான மணமுறை அதிகரிக்கும். அந்த வகையில் வழிகாட்டும் குடும்பமான தாராசுரம் சுயமரியாதை வீரர் கோ.சக்கரபாணி குடும்-பத்திற்கு பாராட்டைத் தெரிவிப்போம்

லேபிள்கள்: , , ,

இழுக்கிற குதிரையாக இருந்தால் வெற்றிமீது வெற்றி வந்து சேரும்!

இழுக்கிற குதிரையாக இருந்தால் வெற்றிமீது வெற்றி வந்து சேரும்!

2000ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள்முதல் நாள் கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை திறப்பு விழா! ஆம், என்னுடைய நீண்ட நாள் கனவை சிற்பி பத்மசிறீ கணபதி ஸ்தபதி அவர்களின் குழு வினரைக் கொண்டு நிறை வேற்றி மகிழ்ந்த நாள் - பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களும் கலந்து கொண்டார்.

அப்போது 2001 ஆம் ஆண்டு தேர்தலில் காங் கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி சேருமா, சேராதா என்று தெரியாத நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்ட மூப்பனார் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத் தைப் பரிசாக அளித்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் - You can win - உம்மால் வெல்ல முடியும் - என்பதாகும். விழாவிலே நான் பேசும்போது - அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பற்றி பேசினேன்.

அதாவது, மூப்பனார் அவர்கள் இந்தப்பந்தலுக்கு வந்ததும் என்னி டத்திலே ஒரு புத்தகத் தைக் கொடுத்தார். புத்த கத்தின் தலைப்பு உம்மால் வெல்ல முடியும். என்ன அர்த்தத்தில் கொடுத்தாரோ எனக்குத் தெரியாது. அது பலித் திடுவதற்கு ஆவன நான் செய்வேன். அந்த நூலினை வழங்கியவரின் மனதிலே என்ன இருக் கிறது என்பது எனக்குப் புரிகிறது. சுற்றுச் சார்பு சரியில்லை என்ற ஒன் றைத் தவிர அவருடைய உள்ளம் என்பால் ஈர்க் கப்பட்ட - இன்று நேற் றல்ல பல ஆண்டுக் கால மாக உள்ள உள்ளம் என் பதை நான் மிக நன்றாக அறிவேன் என்று குறிப்பிட்டேன்.

அதன் பின்னர் பல முறை அந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம். கருத் துகளின் சுரங்கம் அந்தப் புத்தகம் என்று சொன்னால் மிகையாகாது.

அந்தப் புத்தகத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்புஅண்மையில் கிடைத்தது. அதன் கார ணமாக இன்றைய கடி தத்தில் அந்தப் புத்தகத் திலிருந்து எடுத்த சில பகுதிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒவ்வொரு இடத்திற் கும் - அது வீடாக இருந் தாலும் - நிறுவனமாக இருந்தாலும் - அல்லது ஒரு நாடாக இருந்தா லும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. சில சமயங் களில், நீங்கள் ஒரு கடைக் குச் செல்லும்போது, அங்கே விற்பனையாளர் பண்பட்டவராகவும், ஏன் கண்காணிப்பாள ரும், மேலாளரும், முத லாளியும் கூட பண்பட்ட வர்களாக இருப்பதை நீங் கள் கவனித்திருக்கலாம். அதே சமயம், நீங்கள் இன்னொரு கடைக்குச் செல்லும்போது, அங்கே யுள்ள எல்லோருமே ஆணவத்துடனும், மரி யாதையின்றியும் நடந்து கொள்வதைப் பார்க்கி றீர்கள். நீங்கள் ஒரு வீட் டிற்குச் செல்லும்போது, அங்கே குழந்தைகளும், பெற்றோர்களும் ஒழுங் காகவும், மரியாதையாக வும் விட்டுக்கொடுக்கும் பண்பு உடையவர்களாக இருப்பதைப் பார்க்கிறீர் கள். அதேசமயம், இன் னொரு வீட்டில் ஒவ் வொருவரும் கீரியும் பாம் புமாகச் சண்டை போட் டுக் கொள்வதைப் பார்க் கிறீர்கள். (பக்கம் 10-11)

இந்த வரிகளுக்கு நான் விளக்கம் எழுதத் தேவை யில்லை என்று கருது கிறேன். உடன்பிறப்பே, உனக்குப் புரிந்திருக்கும்.

*****

நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு சேர்ந்தால், நீங்களும் ஒரு வெற்றி வீரர் ஆவீர்கள். சிந்தனையாளர்களோடு சேர்ந்தால் நீங்களும் சிந்தனையாளர் ஆவீர் கள். கொடுப்பவர்க ளோடு சேர்ந்தால், நீங் களும் கொடுப்பவர் களாக ஆவீர்கள். குற்றம் குறை சொல்பவர்க ளோடு சேர்ந்தீர்கள் என் றால், நீங்களும் குற்றம் குறை சொல்லிக் கொண்டு உட்கார்ந்து விடுவீர்கள்.

யாராவது வாழ்க்கை யில் வெற்றி பெற்றால், அப்போதெல்லாம் சின்ன புத்திக்காரர்கள் அவர்களிடம் குறை களைக் கண்டு அவர் களின் தன்னம்பிக்கை யைக் குலைக்க முயற்சிப் பார்கள். இப்படிப்பட்ட அற்பப் புத்திக்காரர் களை எதிர்க்க நினைக் காமல், விலகிச் சென்றீர் களானால் நீங்கள் ஜெயித் தவர்கள் ஆவீர்கள். ஒருக் காலும் இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணமு டையவர்கள் உங்களைக் கால்வாரிவிட வாய்ப்பு கொடுக்காதீர்கள். ஒரு மனிதனின் குணத்தை அவன் யாருடன் சேர்ந்து இருக்கிறான் என்பதை வைத்து மட்டுமல்லாமல், அவன் யார் யாருடன் சேர்வதைத் தவிர்க்கி றான் என்பதையும் வைத்தே முடிவெடுக்க முடியும் என்பதை நினை வில் வைத்துக் கொள் ளுங்கள் -(பக்கம் 42-43)

உடன்பிறப்பே, இந்த வரிகளுக்கான விளக்கத் தையும் நான் எழுதாம லேயே நீ புரிந்து கொள் வாய் என்று நம்புகிறேன்!

*****

ஒரு குறிக்கோளை அடைவதற்காக நமக் குள் கொழுந்துவிட்டெ ரியும் ஆசையிலிருந்து தான் வெற்றி பெறுவ தற்கான தூண்டுதல் வரு கின்றது. ஓர் இளைஞன் சாக்ரடீசிடம் வந்து வெற் றிக்கான ரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் அந்த இளை ஞனிடம் அடுத்த நாள் காலையில் ஆற்றங்கரை அருகில் தன்னைச் சந் திக்கும்படி சொன்னார். அடுத்த நாள் அவர்கள் ஆற்றங்கரையில சந்தித் தனர். சாக்ரடீஸ் அந்த இளைஞரைத் தன்னு டன் ஆற்றை நோக்கி நடந்து வரும்படி கேட் டுக் கொண்டார்.

அவர்களது கழுத்தள விற்கு ஆற்று நீர் வந்தவு டன் சாக்ரடீஸ் அந்த இளைஞனை திடீரென நீரினுள் பிடித்து அழுத் தினார். அந்த இளைஞன் வெளியே வரப் போரா டினான். ஆனால் சாக்ர டீஸ் மிகவும் வலுவா னவர். ஆதலால், அப் படியே அவனை அமுக்கி யவாறு அவனது முகம் நீல நிறமாக மாறுகிற அளவுக்கு அமுக்கினார். சற்றுப் பொறுத்து சாக் ரடீஸ் அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞர் செய்த முதல் வேலையே தன் னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண் டும் உள்ளிழுத்ததுதான்.

சாக்ரடீஸ் அவனிடம், நீ நீருக்குள்ளே இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்? என்று கேட்டார். அந்த இளை ஞன், காற்று என்று பதில் அளித்தான். வெற் றியின் ரகசியமே அது தான். நீ எவ்வளவு அதிக மாகக் காற்றை விரும்பி னாயோ, அது போன்ற வெற்றியையுயம் விரும் பினால் உனக்கு அது கிட்டும் என்று சொன் னார். இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை. ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தைத் தர முடியாதோ, அதுபோல ஒரு பலவீனமான ஆசை யால் மிகப் பெரிய விளை வுகளை உருவாக்க முடி யாது. (பக்கம் 70-71)

உடன்பிறப்பே, வரப் போகின்ற தேர்தலில் வெற்றியையே எதிர் நோக் கும் உனக்கும் இந்தக் குறிப்பு முக்கியம் அல் லவா? வெற்றியை விரும்பு - அதற்காக உழைத்திட, உழைத்திட - நிச்சயம் வெற்றி கிட்டும்!

*****

ஒரு நாள் ஒரு பத்து வயதுச் சிறுவன் ஒரு அய்ஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக் கையில் உட்கார்ந்தான். அய்ஸ்கிரீம் கோன் எவ் வளவு? என்று கடைப் பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள், எழு பத்தைந்து சென்டுகள் என்றாள். அந்தச் சிறுவன் தனது கையில் இருந்த சில்லறைகளை எண்ணத் தொடங்கினான்.

பிறகு அவன், ஒரு சிறிய அளவு அய்ஸ் கிரீம் எவ்வளவு? என்று கேட் டான். பணிப்பெண், பொறுமையிழந்து, 65 சென்ட்டுகள் என்று பதில் அளித்தாள். அந்தச் சிறுவன், எனக்கு சிறிய அய்ஸ் கிரீம் கப் வேண் டும் என்றான். அவனுக்கு அய்ஸ் கிரீம் கிடைத்தது. பில் பணம் கொடுத்து விட்டு வெளியேறினான். அந்த வெற்றுக் கப்பை எடுக்க வந்த பணிப் பெண் மனமுருகிப் போனாள். அந்தக் கப் புக்கு அடியில் பத்து ஒரு சென்ட் சில்லறைகள் டிப்ஸாக வைக்கப்பட்டி ருந்தது. அந்தச் சிறுவன் அய்ஸ் கிரீமை வாங்கு வதற்கு முன்னால் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது தர எண்ணி இருந்திருக் கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறை யையும் காட்டிவிட் டான். அவன் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன் னால், பிறரைப் பற்றி எண்ணியிருக்கிறான்.

உடன் பிறப்பே, இந் தக் கதையை எதற்காக மேற்கோள் காட்டியிருக் கிறேன் என்பதையும் நீயே புரிந்து கொள்ள முயற்சி செய். புரியும்.

*****

வெற்றிக்கு எந்த மந் திரக்கோலும் இல்லை. இந்த உலகில் வெற்றி என்பது செயலாற்று பவர்களுக்குத்தான் கிடைக்கும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அல்ல. வண்டி இழுக்கிற குதிரை, உதைக்க முடி யாது. உதைக்கிற குதிரை வண்டி இழுக்காது. நாம் இழுக்கிற குதிரை போல இருப்போமாக. உதைக் கிற குதிரை போன்று இருப்பதை நிறுத்துவோ மாக. கடின உழைப்பில் லாமல் வெற்றி என்பதே இல்லை. ( பக்கம் 79)

உடன்பிறப்பே, வெற்றி ஒன்றையே நோக் கமாகக் கொண்டு உழைக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் உனக்கு, இறுதியாக சுட்டிக் காட்டியிருக்கும் இந்த வரிகளே போது மானது என்று கருதுகி றேன். ஆமாம். நீ இழுக் கிற குதிரை போல இருப்பாயாக - உதைக்கிற குதி ரையாக உன் எதிரிகளே இருந்து விட்டுப் போகட் டும்.

லேபிள்கள்: , ,

5 ஏப்ரல், 2009

சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்மனித உடலின் மின்காந்தத் திறனை 
சீர்ப்படுத்தும் சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்

தகவல் தொழில் நுட்பத் துறையில் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே கணினியில் பணி செய்யும் இளைஞர் களுக்கு உடலில் உள்ள மூட்டுகளில் வரும் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். இந்த வலியை போக்கு வதற்கு சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவப்படி உடலில் மின் காந்த திறனை சீர்ப்படுத்துவது குறித்து சைனீஸ் அக்கு பஞ் சர் மருத்துவ நிபுணர் டாக்டர் கே. நந்தகுமார் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகத் தில் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியால், தொடர்பு கொண்டு கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பப் பரிமாற்றங் கள் உடனுக்குடன் பெற்று பல்வேறு துறைகளில் அதிக ளவில் வளர்ச்சி பெற்று வருகிறோம்.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தி யாவும் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. படித்த இளைஞர்கள் உட னுக்குடன் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது கணினி, இணைய தளத்தின்மூலம் தகவல் பரி மாற்றங்கள் உலகம் முழு வதும் தொடர்பு கொண்டு பெறுவதுதான். இப்பணியில் இரவு - பகலாக பல மணி நேரங்கள் ஆண் - பெண் இருபாலரும் அமர்ந்த இடத் திலே பணி செய்யும் நிலையில் உள்ளனர்.

இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதால் இளம் வயதி லேயே உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளதோ அங் கெல்லாம் வலி ஏற்பட்டு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இம்மூட்டு வலி நோய்க்கு ஆங்கிலம் மருத்துவம் இருந் தாலும், எளிமையான இயற்கை மருத்துவமான சைனீஸ் அக்குபஞ்சர் சிகிச்சை முறை யில் விரைவில் மூட்டு வலியைப் போக்குவதுடன், மேற்கொண்டு வராமல் தடுப்பதற்கான உடலில் மெலிந்த ஊசிகளை செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் மின்காந்த சக்தியினை சீர்படுத்தி நோய் அகற்றப் படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுகிறது.

இம்மருத்துவத்தில் முழு மையான பரிசோதனை, சைனீஸ் மருந்துகள், ஆஸ் டியோ அக்குபஞ்சர், எளிய முறையில் உடற்பயிற்சி போன் றவைகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் கணினித் துறையில் பணி செய்பவர் களுக்கு வரும் மூட்டு வலிகள் நிரந்தரமாகப் போக்கப்படு கிறது 

லேபிள்கள்: ,

15-ஆவது மக்களவைத் தேர்தல் சில சிந்தனைகள்....!


15-ஆவது மக்களவைத் தேர்தல் சில சிந்தனைகள்....!


15-ஆவது மக்களவைத் தேர்தல் மே 13 தொடங்கி 5 கட்டங்களாக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நடக்கிறது.

மூன்று அணிகளாகப் போட்டி நடக்கிறது என்பதையும் கடந்து நான்கு அணிகளாகப் போட்டி நடக் கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது?

1. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி.
2. பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
3. இடதுசாரிகள் முன்னிலைப்படுத் தும் மற்றொரு கூட்டணி.
4) அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (லாலுபிரசாத்) லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ் வான்) என்கிற இன்னொரு அணி.

மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமையும்போது இந்த நான்காவது அணி காங்கிரசுடன் கைகோர்க்கும் சாத்தியம் மிக அதிகம்; இதனை ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத்தும் வெளிப் படையாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்தேர்தலில் இந்தப் பிரிவினைகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. எந்தப் பக்கத்தில் தவறு என்கிற ஆய்வைவிட, யார் விட்டுக் கொடுத்துப் போயிருந்தாலும் அவர் கள் நாட்டின்மீது அக்கறையுள்ள வர்கள் என்கிற மரியாதைக்குரியவர் களாகவிருந்திருப்பார்கள். அய்க்கிய முற்போக்குக் கூட் டணியைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நிலையான ஆட் சியைத் தந்துள்ளது; இடையில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கவிழ்க்க முனைந்தாலும் தள்ளாட்டமின்றி உறுதியாகவே நின்றிருக்கிறது.

உலக அளவில் ஏற்பட்ட பொரு ளாதார சுனாமியில் இந்தியா தப்பிப் பிழைத்து விட்டது என்று பொரு ளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை எதிர்க்கும் இடதுசாரிகளே ஒன்றை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பாதுகாப்பான நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டதற்கே காரணம் இடது சாரிகள் இடைஇடையே இந்திய அர சுக்குப் போட்டு வந்த தடைகள்தான் என்று மார் தட்டுகின்றனர். அது உண்மையாகக்கூட இருக்கட் டும். இடதுசாரிகளின் கருத்துரைகளை ஏற்று ஒரு அரசு நடந்து கொண்டு இருக்கிறது என்பது அரசு மீதான கெட்ட பெயராக எப்படி மாற முடி யும்? இன்னும் சொல்லப் போனால் இடதுசாரிகள் மனந்திறந்து பாராட்ட வேண்டுமே தவிர - குற்றப் பத்திரிகை படிப்பது எப்படி சரியாகும்?

கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் மக்கள் மத்தியிலே அரசின் மீது மரியாதை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட மாவட்டங்களில் நூறு நாள்களுக்கு வேலை உத்தரவாதம் என்பதே மேலும் வளர்த்தெடுக்கவும் அரசு முனைந் துள்ளது.

வேலை வாய்ப்பு என்பது உலக பிரச்சினையாகவேயிருக்கிறது. குபேர பூமி என்று கூத்தாடிய அமெரிக்கா இந்த நெருக்கடியில் குற்றுயிராய்த் துடித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையிலும் இந்தியா மூழ்கி விடாமல் தள்ளாடி விழுந்து விடாமல் நடைபோட்டுக் கொண்டுதானிருக் கிறது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் ஸ்திரத் தன்மைக்கு ஆபத்து இல்லை என்ற பெரு மூச்சு விடப்படுகிறது.

இரண்டாவதாக, மதச் சார்பின்மை! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகப்பே - இந்தியா என்பது மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசு என்ற பீடிகையோடுதான் தொடங்கப்படு கிறது.

அண்மைக்காலத்தில் அதற்குக் கேவலமான அச்சுறுத்தல்! ஆர்.எஸ். எஸ். தலைமை தாங்கும் இந்து மதவாத ஆரிய சனாதன அமைப்புகள், அவற்றின் அரசியல் போர்வையான பாரதிய ஜனதா ஆகியவை இந்தி யாவின் மதச்சார்பின்மைக்கான கடைக்காலை ஆட்டியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதற் கான உச்சகட்ட சாட்சியம்தான் 1992 (டிசம்பர் 6)இல் அயோத்தியில் - சிறு பான்மை மக்களுக்கான வழிபாட்டுத் தலத்தை பாபர் மசூதியை சுக்கல் ஆயிரமாக உடைத்துச் சிதறடித்த கொடூரமாகும்.

அந்தக் காயம் இன்னும் ஆற வில்லை; அதனையும் தொடர்ந்து பாரதிய ஜனதா ஆண்ட குஜராத் மாநிலத்தை சங்பரிவார்க்கும்பலின் பரிசோதனைக்கூடமாக்கி, மத வாரியாக வாக்கு வங்கியை உருவாக்கி, சிறுபான்மை மக்களான முசுலிம்கள், பெரும்பாலான மக்களாகிய இந்துக் களுக்குப் பரம விரோதிகள் என்ற வகையில் கொடூரத் தீயை மூட்டி, உத்திப்பிரித்து சிறுபான்மையினர்மீது வேட்டை நாயாக பெரும்பான்மை மக்களை ஏவி விடப்பட்டுக் கொன்று குவித்த கோரக் காட்சி சரித்திரம் நெடுக மனிதக் குருதியின் வாடையை வீசிக் கொண்டே தான் இருக்கும்.

அந்த ஆட்சி நாயகனை (மோடியை) பார்த்து உச்சநீதிமன்றம் நீரோ மன்னன் என்று இகழ்ந்து வீசிய வார்த்தைகள் சாதாரணமானவையா?

வெறிகொண்ட ஒரு மிருகத்தைக் கல்லால் அடித்து குப்பைத் தொட்டியில் வீசியது போன்ற நிலைப்பாடல்லவா அது!

குழந்தைத் திருமணத்தை தடுத்த குற்றத்துக்காக சமூக சேவகி ஒருவரை (பான்வாரி) அது இந்து மதத்துக்காக எதிரான நடவடிக்கை என்று கூறி, உயர் ஜாதி ஆண் காம வெறியர்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கித் அந்தப் பெண்ணைத் தூக்கி எறிந்தனரே - அதனை எந்தக் காலத்திலும் சீரணிக்க முடி யுமா?

அந்தக் கொடுமைக்கு இன் னொரு சிகரம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பாகும்.

தாழ்ந்த ஜாதிப் பெண் ணான பான்வாரிமீது - குற்றம் சாற்றப் பெற்ற உயர்ஜாதிக் காரர்களான பிராமணர்கள் பாலியல் கொடுமையை நிகழ்த்தி இருக்க மாட்டார் கள் என்று கூறி வழக்கினைத் தள்ளுபடி செய்தனர் உயர் ஜாதி பார்ப்பன நீதிபதிகள் என்றால் நீதிமன்றம்கூட பார திய ஜனதா ஆட்சியில் காவி வண்ணம் தீட்டிக் கொண்டு திரிசூலம் ஏந்திக் கொண்டது என்பதை வெளியில் சொன் னால் வெட்கக் கேடே!

பாடத் திட்டங்கள், வர லாறுகள் எல்லாம் இந்து மயமாக்க போர்க்கால நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. நல்ல வாய்ப்பாக அந்தத் தீய சக்திகள் கடந்த மக்களவைத் தேர்தலில் (2004) வாக்காளர்களால் வீழ்த்தப் பட்டன.

அந்தக் கும்பல் இரண் டாம் அணியாகக் கிளம்பி யிருக்கிறது. பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய தளகர்த் தரான அத்வானியைப் பிரத மருக்கான வேட்பாளராக அறிவித்துக் கிளம்பியிருக் கிறது என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான போக்கு!

நடக்க இருக்கும் மக் களவைத் தேர்தல் இந்தக் கூட்டத்திற்கான முடிவுரை முற்றுரை எழுதக் கூடிய பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். இதில் தப்பி விடுமானால் நாட்டு மக்கள் தப்பிப்பது முயற்கொம்புதான்! தென்னகத்தில் தன் வாலை நுழைக்காதிருந்த இந்தப் பாசிச பாரதிய ஜனதா கூட்டம் வஞ்சகமாக கருநாடக எல் லைக்குள் புகுந்து தன் சேட் டைகளைத் தொடங்கி விட்டது. இந்திய துணைக் கண்டத்திலேயே அது நுழைய முடியாமல் மூச்சுத் திணறும் ஒரே மாநிலம் தந்தை பெரியார் அவர்களால் திரா விடர் கழகத்தின் மூலம் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் நாடு மண்தான்! இந்தப் பெரு மையும் அரணும் இத்தேர் தலில் காப்பாற்றப்பட வேண் டும் என்பதிலே திராவிடர் கழகம் முக்கியக் கவனமாக இருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிலே அடுத்து முக்கியத்துவம் கொடுத்துக் கொடுக்கப்பட்டி ருப்பது சமூகநீதி என்பதாகும்.

இந்து மதத்தின் வருணத் தால் ஜாதி நோயால் பிளவு என்னும் பிளவை நோய்க்குப் பலியான கோடானு கோடி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான மகத் தான மருத்துவம்தான் சமூகநீதி என்பதாகும். இடஒதுக்கீடு என்று எளிய முறையில் அனைவருக்கும் விளங்கிட கூறப்படுகிறது.

கல்வியில்லாத பூமி களர் நிலம் என்றார் புரட்சிக் கவிஞர். அந்தக் கல்வியையும், வேலை வாய்ப்பையும் வழங் கக் கூடியதுதான் சமூகநீதி யாகும் - இடஒதுக்கீடாகும்.

அதற்கு உத்தரவாதம் கொடுக்கக்கூடியது திமுக முக்கியமாக இடம் பெற் றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும். அந்த வகையிலும் ஆட்சிப் பீடத் துக்கு மீண்டும் அழைக்கப்பட வேண்டியது அய்க்கிய முற் போக்குக் கூட்டணி கட்சி களையே! (U.P.A. United Prograssive Alliance) மூன்றாவது அணி என்ற ஒன்று இடதுசாரிகளின் முயற்சியால் கொம்பு கூர் தீட்டி கிளப்பி விடப்பட்டுள் ளது. மதச்சார்பின்மை, சமூக நீதி இவற்றில் நம்பிக்கை யுடைய கட்சிகள் சில அதில் உண்டு என்றாலும் அதனோடு இணைந்துள்ள பலபட்டறைக் கட்சிகள் இதில் பல்வேறு முரண்பட்ட நோக் குகளைக் கொண்டவை யாகும்.

குறிப்பாக சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் அணுகப்பட வேண்டிய இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்கிற வெடி மருந்தை வைக்கக்கூடிய இடதுசாரி இதில் உண்டு.

இக்கட்சிகள் வெற்றி பெற்றாலும் யார் பிரதமர் என்கிற குடுமிபிடிச் சண்டையில் மண்டைகளை உடைத்துக் கொள்ளக்கூடியவை. செல்வி ஜெயலலிதாவை உள்ளே அழைத்து விட்டு பிரதமர் பதவியைப் பற்றி இன்னொருவர் பேசுவதற்கான ஜன நாயகக் காற்றுக்கு இடம் உண்டா? எப்படியும் அடுத்த பிரதமர் நானே நானே! என்று இறுமாந்திருக்கும் சகோதரி மாயாவதி எந்த ரூபம் எடுப்பார் என்பதைக் கற்பனை செய்து தான் பார்க்க முடியுமா?

மகாராட்டியத்தைச் சேர்ந்த சரத்பவார் என்கிற பெரிய மனிதர் தம் வாழ் நாளில் என்றைக்காவது ஒரு நாள் அந்தப் பிரதமர் நாற் காலியில் உட்கார்ந்து பார்த்து விட வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார். அந்த ஆசையின் போதையிலே அவர் பாதங்கள் ஒன்றை யொன்று பின்னிப் பின்னி தடம் புரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற, சமூக நீதி வெற்றி பெற, மதச் சார்பின்மை உறுதிப்பட, கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, மக்கள் தொகையில் சமபகுதியின ரான பெண்களின் உரிமைகள் ஈட்டப்பட, விவசாயம் இலா பம் உள்ள தொழிலாக உரு வாக்கப்பட (காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது) தொழிலாளர்கள் ஏற்றம்பெற, மதவாதம் தோற் கடிக்கப்பட, ஈழத் தமிழர் களின் இருள் வெருண் டோடும் ஒரு நிலையை உருவாக்க திமுக முக்கியமாக இடம் பெற்றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரு வெற்றியை உறுதியுடன் தேடித் தர வேண்டியது தற்கொலையை விரும்பாத ஒவ் வொரு குடிமக்களின் கடமையாகும்.

லேபிள்கள்: , ,

4 ஏப்ரல், 2009

எனக்கு மெயிலில் வந்த சில படங்கள்; உங்கள் ரசனை எப்படி-?

                                              எனக்கு  மெயிலில் வந்த சில படங்கள்; உங்கள் ரசனை எப்படி-?                                       இது எந்த ஊரு ?                                                                                                                                                                        இதுதான் தொங்கு பாரளுமன்றம் !
                                              இன்னும் தொகுதி பங்கீடு முடியல  ! 
                                              இதுதான் கோடைக்கு ஏற்ற உடையாம் 

எனக்கு  ?

                          இதுதான் கோடைக்கு ஏற்ற உடையாம் !

 

 கமண்டை போட்டு தாக்குங்க  ------!தமிழ்  வெங்கட் 

   

 

 

           

 

 

 

 

 

        

 

 

  

 


லேபிள்கள்: ,