சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நப ருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத் ததும் அம்ப
இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு
காந்தியாரைக் கொன்ற இந்துப் பயங்கர வாதம் அதன் பிறகு நடத்தி யுள்ள சதிச் செயல்கள் ஒவ் வொன்றாக வெளியே வருகின் றன. அபிநவ் பாரத் எனும் பயங் கரவாத அமைப்பு எல்லா சதிச் செயல்களையும் நடத்தியுள் ளது என்பது வெளிவந்துள் ளது. பான்டே சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நப ருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத் ததும் அம்பலமாகியுள்ளது. பான்டே அபிநவ் பாரத் அமைப்பின் ஊதியம் பெறும் நபர் என்பதும் தெரிய வந்துள் ளது.
அபிநவ் பாரத் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்பு தான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், ரயிலில் 68 பேர் கொல்லப் பட்டதற்கும், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கும் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இந்தப் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்ட சுனில் ஜோஷி என்பவன் 2007 இல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். இந்தச் செய்தியை புரோகித்திடம் தொலைபேசி யில் தெரிவித்தபோது, சம் ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக் குக் காரணமான ஜோஷி தியா கியாகி விட்டார் என்று புரோ கித் குறிப்பிட்டார் என்பதை வாக்குமூலத்தில் ஒரு சாட்சி தெரிவித்துள்ளார்.
இத்தகயை சதிச் செயல் களை குஜராத்தைச் சேர்ந்த ஜதீன் சாட்டர்ஜி என்பவர்தான் செய்துள்ளார். இவரை சாமி அசிமானந்த் என்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமம் எனும் சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி பழங்குடி யினரிடையில் கலவரம் செய்து வரும் அமைப்பை இவர் நடத்தி வருகிறார். இவரையும் கல்சங் ராம் என்பாரையும் இன்னும் கைது செய்ய முடிய வில்லை.
சாத்வி பிரக்யா சிங் தனது மோட்டார் சைக்கிளை ஜோஷிக் குக் கொடுத்திருந்ததும் அவர் கொல்லப் பட்ட பின்னர் அதனை கல்சங்ராம் பயன் படுத்தி வெடி குண்டு வைத்து மாலேகாவ்னில் வெடிக்கச் செய்ததும் ஏற்கெனவே வெளி வந்துள்ளது. மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் அபிநவ் பாரத் அமைப்பின் சுனில் ஜோஷி சதிச் செயல்களில் ஈடுபட்டதை 2002 இல் கண்டு பிடித்தது. அப்போதைய காங் கிரசு முதல் அமைச்சர் திக் விஜய் சிங் இது பற்றி அறிவிப்பு செய்து பஜ்ரங்தள் உள்பட இந்துத்வ அமைப்புகள் ஈடு பட்டது குறித்து ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார். ஆனால் பிறகு முதலமைச்சராக வந்த உமாபாரதி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 2003 இல் உத்தரவிட்டு விட்டார்.
இந்துத்வ வெறிக் கட்சிகள் இந்துப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றி ஆதரவு அளித்து வந்துள்ளனர். இப்போது மகா ராட்டிர அரசு நடவடிக்கை எடுக்கும்போது அலறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
எம்.என். நம்பியார் மறைவு
பழம்பெரும் வில்லன் நடிகர் (வயது 89) மாரடைப்பால் நேற்று சென்னையில் மரணமடைந்தார்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.78 அடியாகும். வினாடிக்கு 61.54 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து வேளாண்மைக்காக 16 ஆயிரத்து 803 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போது நீரின் இருப்பு 36.03 டி.எம்.சி. ஆகும்.
கருத்துகள்