தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன
1993 தேர்தலில் ஜனதா தளத் தேர்தல் அறிக்கைவெளிவந்தது. தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அதில் மிக முக்கியமாகக் குறிப் பிடப்பட்டுஇருந்தது. பொறுக் குமா பார்ப்பனர்களுக்கு?
தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக்கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையைவெளிப் படுத்திக் கொண்டன.
துரதிர்ஷ்ட வசமாக ஜனதா தளத்தின் தேர்தல்அறிக்கை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம்செலுத்தவில்லை. தனியார்த் துறைகளிலும் மண்டல்கமிஷனை அமல் படுத்தக் கோருவது பெரும்பான்மை மக்களை அந்நியப் படுத்தும் என்றுஎழுதியது தினமணி.
பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் பெரும் பாலானமக்கள்தானே. இந்த நிலையில், தனியார்த் துறை களில் இட ஒதுக்கீடு என்பதுஎப்படி பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்தும்?
வி.பி. சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் அதற்கு இரண்டுஆண்டுகளுக்குப் பிறகு, ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மறக்காமல் - கொண்ட கொள்கை யில் சிறிதும் நழுவாமல், தனி யார்த் துறைகளிலும்இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு உகந்த நிலையை மேற்கொண் டார் வி.பி. சிங்என்பது - அந்த மாமனிதர் அக்கொள்கையில் கொண்டிருந்த பற்றையும், பிடிப்பையும் விளக்கவில்லையா?
அதனால்தான் துக்ளக் போன்ற பார்ப்பனர்கள் அனேக மாக ஒவ்வொரு இதழிலும்வி.பி. சிங்கைப்பற்றி கொச் சைப்படுத்தி எழுதிடத் தவ றுவதே கிடையாதே!
வி.பி. சிங், லாலு பிரசாத், கலைஞர், வீரமணி என்ற பெயர்கள் இந்தக்கூட்டத்திற்கு எப்பொழுதுமே எட்டிக்காயா கவே இருந்து வந்திருக்கிறது. தொட்டதற்கெல்லாம் இவர்கள் மீது பாய்ந்து பிராண்டாவிட் டால், தூக்கமேவராது இந்தக் கும்பலுக்கு.
ஒரு தகவல் - நவம்பர் ஏழு என்பது எப்படியோ இனப் பகை வர் கூட்டத்துக்குக்கூட்டாளி யாகவே இருக்கிறது.
நவம்பர் 7 (1990) இல் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர் களின் பிரதமர்பதவிக்குக் குறி வைத்துத் தாக்கினர்.
அதே நவம்பர் 7 (1966) இல் இதே பி.ஜே.பி. கும்பல் (அன்று அவர்களுக்குஜனசங்கம் என்று பெயர்) காவிக் கூட்டம் சங்கராச் சாரி வகையறாக்கள் தான், இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் ஒரு பகல் நேரத் தில் பசுவதைதடுப்புச் சட்டம் என்பதைக் காரணம் காட்டி பச்சைத் தமிழர் காமராசரின்உயிருக்குக் குறி வைத்தது. இன்று ராமன் பாலம் என்கின் றனர்; அன்று பசுமாமிசம் என் றனர்.
குறி வைக்கப்பட்டவர்கள் அனைவரும் சூத்திரர்கள்! அது ஒன்று போதாதா அந்தத்துரோணாச்சாரிக் கும்பலுக்கு அம்பு எய்ய? -
கருத்துகள்