ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

27 நவம்பர், 2008

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு என்ற தலைப்பில் Bharathirajaபுதுச்சேரியில் கருத்தரங்கு நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அவரது உரை வருமாறு-

மனித இனம் அழிந்து கொண்டுள்ளது. நீ இறையாண்மையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய். புலியை காப்பாற்ற பாம்புகளும், கழுதைகளும் தேவையில்லை. ஈவெரா இருந்தால் பாம்பை அடையாளம் காட்டியிருப்பார். புலிக்கு இடைஞ்சல் பண்ணாதே. இலங்கை தமிழர்கள் தற்காத்துக் கொள்வதற்காக போரிட்டுக் கொண்டுள்ளனர்.

பிரபாகரனின் பெயரை சொல்லாதே என்கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன். வீரமானவன். அவனது பெயரை உச்சரிக்க கூடாது என்றால் எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா. பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? ஒரு வீரனின் வீரன் என்று சொல்லக் கூடாதா? என்னை மிரட்டாதீர்கள்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றி பேசினால் இறையாண்மை போய்விடும் என்கிறார்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பது இறையான்மைக்கு எதிரானது இல்லையா? முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாய். இது என்ன இறையாண்மை? ராஜீவை கொன்று விட்டனர் என்ற ஒரே காரணத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறாறே, ஒரே ஒரு முறை இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு வா. 20 ஆண்டுகாலமாக அகதிகள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். மூன்று நாட்களுக்கு முன்னால் திடீர் என திரும்பிப்போ என்றால் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?

படைபலம், ராணுவ உதவி அனைத்தையும் அனுப்பிவிட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறோம். எம்பிக்களை ராஜினாமா செய்ய வைப்பது உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் வேளையில் அங்கு ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது உனக்கு தெரியாதா? உளவுத்துறை இல்லையா? இது வலுப்பெற்றால் தமிழகம் பாகுபட்டு விடும்.

இவ்வாறு பாரதிராஜா ஆவேசமாக பேசியுள்ளர்.

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு