ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

19 நவம்பர், 2008

‘டப்பிபோ டிப்போ டாபிடாபி டை...’ -விஜய் ஆன்ட்டனியின் அடுத்த ஹிட்..

‘டப்பிபோ டிப்போ டாபிடாபி டை...’
-விஜய் ஆன்ட்டனியின் அடுத்த ஹிட்...

டைலாமோ, நாக்க முக்க... என்று எங்கெங்கோ தேடி தேடி வார்த்தைகளை Vijay Antonyகண்டுபிடிக்கும் விஜய் ஆன்ட்டனி அஆஇஈ படத்தில் இன்னொரு வார்த்தையை கண்டுபிடித்திருக்கிறார். ‘டப்பிபோ டிப்போ டாபிடாபி டை...’ இந்த வருடத்தில் பட்டையை கிளப்பப் போகும் பாடல் இதுதான் என்கிறார் படத்தின் இயக்குனர் சபாபதி தட்சிணாமூர்த்தி.

கிராமபுற கதைகள் என்றாலே அரிவாளும், வேல்கம்புமாக யோசிக்கிற டைரக்டர்களுக்கு மத்தியில், அழகான காதல் கதையை சொல்லியிருக்கிறாராம் சபாபதி. கஞ்சா கருப்புக்கு ஜோடியாக நடிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பெண்ணை கொண்டு வந்திருக்கிறார்கள். கருப்பும் வெள்ளையும் கலந்த இந்த கலர்புல் காம்பினேஷன் கஞ்சா கருப்பையே திக்குமுக்காட வைத்திருக்கிறது. (என்ன பாஷையிலே பேசிக்கிட்டீங்க ரெண்டு பேரும்?)

நவ்தீப், சரண்யா மோகன், அரவிந்த், மோனிகா என்ற இளமை பட்டாளங்களுக்கு நடுவில், கம்பீரமாக களம் இறங்கியிருக்கிறார் இளைய திலகம் பிரபு. ஆச்சி மனோரமா இல்லாமல் ஏ.வி.எம் படங்களா? மூன்றாவது தலைமுறையோடும் போட்டி போட்டிருக்கிறார் மனோரமா!

காதலிக்க நேரமில்லை மாதிரி குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிற படங்கள் எல்லாம் இப்போ எங்கே வருது? என்று ஏக்கப்படும் பெருசுகளுக்கும், ரோபோதான் பெஸ்ட் என்று சொல்லும் இளசுகளுக்கும் சேர்ந்த மாதிரி எடுக்கப்பட்ட படம் இது என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம் குமரனும், ஏ.வி.எம்.கே சண்முகமும்.

உயிரெழுத்து தலைப்பிலும், உயிரோட்டம் கதையிலும் இருந்தால் சந்தோஷமே

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு