நிலாவிற்கு சந்திராயன் 1 விண்கலம் அனுப்பிய விஞ்ஞானி அண்ணாதுரைக்கு சொந்த ஊரில் பாராட்டு விழா

நிலாவிற்கு சந்திராயன் 1 விண்கலம் அனுப்பிய

விஞ்ஞானி அண்ணாதுரைக்கு சொந்த ஊரில் பாராட்டு விழா

கிணத்துக்கடவு, நவ.17 நிலா விற்கு விண்கலம் அனுப்பிய விஞ்ஞானி அண்ணாதுரைக்கு அவரது சொந்த ஊரான கோதவாடியில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. கடந்த 22 ந் தேதி நிலாவை பற்றி முழுமையாக ஆராய சந்திராயன் 1 என்ற விண் கலத்தை நிலவிற்கு இந்தியா அனுப்பியது. இதன் திட்ட இயக்குநராக விஞ்ஞானி அண்ணாதுரை உள்ளார். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திராயன் விண் கலம் செலுத்தப்பட்டதால் நாடே பெருமைப்பட்டு வரு கிறது. அந்த திட்டத்தின் இயக் குனராக உள்ள விஞ்ஞானி அண்ணாதுரை கோத வாடியை சேர்ந்தவர் என்பதால் அந்த ஊர் பொதுமக்கள் பெருமிதம் அடைந்தனர்.

இதையடுத்து கோதவாடி ஊர் பொதுமக்கள் சார்பில் விஞ்ஞானி அண்ணா துரைக்கு கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள மைதானத்தில் பாராட்டு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக விஞ்ஞானி அண்ணாதுரை தனது மனைவி வசந்தி மற்றும் தந்தை மயில் சாமி, தயார் பாலசரஸ்வதி, தம்பி மோகனசுந்தரம் மற்றும் உறவினர்களுடன் சொந்த ஊரான கோதவாடி வந்தார்.

கோதவாடி பிரிவு அருகே விஞ்ஞானி அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தின ருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோதவாடி பிரிவில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடந்தே தான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விஞ்ஞானி அண்ணா துரை வந்தார். அங்கு மாணவ மாணவிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி வாழ்த்து தெரி வித்தனர். பின்னர் விஞ்ஞானி அண்ணாதுரை தான்படித்த பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பள்ளிக்குள் சென்று பார்வையாளர் நோட்டை பார்வையிட்டு அதில், எனக்கு அ, ஆ சொல் லிக் கொடுத்த எனது அருமை ஆரம்பக்கல்வி நிலையத்திற்கு எனது மரியாதைக்குரிய வாழ்த் துகள் என தமிழில் எழுதி தமி ழிலேயே கையெழுத்திட்டார்.

பின்னர் விஞ்ஞானி அண் ணாதுரை பள்ளியில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இதையடுத்து பள்ளியின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை யொட்டி விஞ்ஞானி அண்ணா துரை தனது சொந்த செலவில் கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இலவச மாக கம்ப்யூட்டர் ஒன்று வழங்கினார்

கருத்துகள்

admin இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks to TN government !!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்