ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

16 நவம்பர், 2008

ஐஸ் ஆப்சென்ட்!சென்னையில் வளரும் எந்திரன்

ஐஸ் ஆப்சென்ட்!
சென்னையில் வளரும் எந்திரன்

ஐஸ் கட்டியே சூடாகி உருகியிருக்கும். காரணம், ஐஸ் போட்ட ஆப்சென்ட்தான்! Aishwarya raiஇம்மாதம் 20 ந்தேதி ஜிலுஜிலு ஐஸ் பிரதேசமான குலுமணாலிக்கு கிளம்ப தயாராக இருந்தது எந்திரன் யூனிட். திடீரென்று ஐஸ்வர்யாராயால் வர இயலவில்லையாம். தனது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவரை இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பில் இருக்கும்படி கூறிவிட்டாராம் மணிரத்னம். வேறு வழியில்லாத ஐஸ் ஷங்கரிடம் ஸாரி கேட்க, குழம்பிப் போனாராம் டைரக்டர்.

படப்பிடிப்பை இன்னும் தள்ளிப் போட்டால் அது வேண்டாத வதந்திகளுக்கு வழி வகுக்கும் என்பதால், உடனடியாக படப்பிடிப்பை நடத்திவிடலாம் என்று முடிவு செய்தாராம். ரஜினியை நேரில் சந்தித்து விளக்கம் சொல்ல, என்ன செய்வதென்று திட்டமிட்ட இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். படப்பிடிப்பை சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம்!

ரஜினியின் போர்ஷன்களை மட்டும் ஷ¨ட் பண்ணுவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலைகளில் இக்காட்சி படமாக்கப்படும் என்று தெரிகிறது. ஐஸ் வந்து சேர்ந்த பின் ஐஸ் லேண்டுக்கு பறப்பார்கள் போலிருக்கிறது.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு