மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது!
மும்பை நகரில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம்மனித நேயமற்ற அசல் காட்டுமிராண்டித்தனம்! வெறுக்கத்தகுந்தது; வன்மையானகண்டனத்திற்குரியது.
பிணைக் கைதிகளாக பலரும் பிரபல ஓட்டல்களில்;
பல முக்கிய காவல் துறையினர், அதிகாரிகள் சாவு! 100 பேருக்குமேல் உயிரிழப்பு; 200 பேர் படுகாயம்!
மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில், ஓட்டலில்தீயணைப்பு வீரர்கள் நுழைந்து தீயை அணைத்தனர். இராணுவம் உடனே நுழைந்துதீவிரவாதிகள்மீது தாக்குதல்;
விடிவு ஏற்படுத்த தொடர் முயற்சி என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது! கண்டிக்கப்பட வேண்டிய செயல்!
முதலாவதாக செய்யவேண்டியது
இன்று அதிகாலை 3 மணியளவில், தொலைக்காட்சியில் கண்டு உறக்கமில்லை; காரணம், நாடு இப்படி செல்லுகிறதே என்ற வேதனை!
மத்திய - மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே இதனை மோப்பம்பிடித்திருக்கவேண்டாமா? உடனடியாக பிரதமர் தலையிட்டு மத்திய - மாநிலகாவல்துறை - குறிப்பாக உளவுத் துறையில் அதிரடி மாற்றங்களைசெய்யவேண்டியது முதலாவதான முக்கிய நடவடிக்கையாகும்.
இறந்தவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்!
மக்களின் பீதியைப் போக்க அனைவரும் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டமின்றிஒன்றுபட்டு தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, அரசு எடுக்கும்அனைத்து நடவடிக்கை களுக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும்
கருத்துகள்