ஆண்கள் அடித்தால் பெண்களே திருப்பி அடியுங்கள்? மானமிகு இராமாத்தாள்
தெரியுமா சேதி?
அடிப்படைச் சுகாதார வசதி இல்லாத மக்கள் - உலகில் 41 விழுக்காடாம்!
நறுக்குகள்...
'தீவிரவாதி!'
எல்.கே. அத்வானி ஒரு தீவிரவாதிதான் என்று லாலுபிரசாத் (யாதவ்) கூறியுள்ளார். இந்துத்துவா சக்திகள் வன்முறையில் ஈடுபடும் போக்கினைச் சுட்டிக்காட்டிய லாலு அவர்கள், இதில் அத்வானி விலகியிருக்க முடியுமா என்கிற தோரணையில் வினா எழுப்பியுள்ளார்.
அவர் கணிப்பு மிகச் சரியானதே என்பதற்கு வேறு ஆவணங்கள் தேவையில்லை. அத்வானியின் கூற்றே போதுமானது.
சங்பரிவார் அமைப்பினர் பல இடங்களிலும் வன்முறையில் ஈடுபடுவதை காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகிறது என்று குற்றச்சாற்றுபோலக் கூறுகிறார். அப்படிப் பயன்படுத்தினால் அது எப்படிக் குற்றமாகும்?
உள்ளதைச் சொன்னால் எரிச்சலா? பெண்கள் அடிக்கலாமா?
ஆண்கள் அடித்தால் பெண்களே திருப்பி அடியுங்கள்? என்று தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் மானமிகு இராமாத்தாள் பேசியிருக்கிறார்.
பெண்கள் அடித்தால்...
ஆண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது என்று தினமலர் ஏடோ கொஞ்சம் முறுக்கிவிட்டுப் பார்க்கிறது.
அதெப்படி அப்படிப் பேசலாம்? என்று ஆண்கள் முன்னணித் தலைவர் என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளிவருகிறது.
இது கணவன் - மனைவி என்ற கலாச்சார உறவைக் கெடுத்து விடுமாம். ஆண்கள் அடித்தால்தானே திருப்பி அடிக்கச் சொல்லுகிறார்? அதனைக் கண்டுகொள்ளாமல் அறிக்கை விடலாமா? ஆண்கள் ஏன் பெண்களை அடிக்கவேண்டும்? அது தவறு என்று கண்டிக்க மனம் வராது. ஆண் எஜமானத் திமிரில்தான் இப்படி எழுதுகிறார்கள்.
காலம் மாறி வருகிறது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்பதெல்லாம அந்தக்காலம்.
பொருள் உண்டா?
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில் விழாவை முன்னிட்டு 272 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றனவாம்.
இதன் பயன் என்ன? மக்களிடத்திலே மூடத்தனத்தை வளர்ப்பது, அவர்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வீணுக்குச் செலவழிப்பது என்பதைதவிர, இதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? பொருள் இருக்கிறவர்களும், இல்லாதவர்களும் பொருளோடு சிந்திக்க வேண்டாமா?
கருத்துகள்