இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

படம்
மூக்கறுப்பு கல்வெட்டு மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! – சேலம் கல்வெட்டில் ஆதாரம் August 8, 2017 by புதிய அகராதி பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. ஆறகழூர் பொன்.வெங்கடேசன் மண்பேசும் சரித்திரம் நிகழ்சியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோய

சேலம் வரலாற்று கருத்தரங்கம் துவக்க விழா நூல் வெளியீடு

படம்
சேலம் வரலாற்று கருத்தரங்கம் மற்றும் சேலம் மாவட்ட நடுகற்கள் நூல் வெளியீடு காணொளி நிகழ்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் கண்டு களியுங்கள்

சேலம் வரலாற்று கருத்தரங்கம்

படம்
அன்புடையீர் வணக்கம். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் (Salem Historical Research Center/SHRC) இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கம் எதிர்வரும் மே மாதம் 13ம் தேதி (13.5.18) ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் (A/C) நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்கள் 1.முனைவர் பேராசிரியர் திரு. ராசவேலு ஐயா அவர்கள், ( துறைத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) 2.மூத்த கல்வெட்டாய்வாளர் விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா அவர்கள் 3.சமண/பவுத்தவியல் ஆய்வாளர் முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் ( Mahathma Selvapandiyan) 4.வரலாறு.காம் ஆசிரியர் குழுவினர் திரு. ச.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் 5. திரு.சு.சீதாராமன் அவர்கள் ( Seetharaman Subramanian) ஆகியோர் செறிவான தலைப்புகளில் வரலாற்றுரையாற்ற உள்ளனர். ( தலைப்புகளை அழைப்பிதழில் காண்க) அன்றைய தினம் எமது ஆய்வு மையம் இதுவரை கண்டறிந்த நடுகற்கள் அனைத்தையும் தொகுத்து "சேலம் மாவட்ட நடுகற்கள் (புதிய கண்டறிதல்கள்)"