இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

படம்
மூக்கறுப்பு கல்வெட்டு மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! – சேலம் கல்வெட்டில் ஆதாரம் August 8, 2017 by புதிய அகராதி பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. ஆறகழூர் பொன்.வெங்கடேசன் மண்பேசும் சரித்திரம் நிகழ்சியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோய

சேலம் வரலாற்று கருத்தரங்கம் துவக்க விழா நூல் வெளியீடு

படம்
சேலம் வரலாற்று கருத்தரங்கம் மற்றும் சேலம் மாவட்ட நடுகற்கள் நூல் வெளியீடு காணொளி நிகழ்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் கண்டு களியுங்கள்

சேலம் வரலாற்று கருத்தரங்கம்

படம்
அன்புடையீர் வணக்கம். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் (Salem Historical Research Center/SHRC) இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கம் எதிர்வரும் மே மாதம் 13ம் தேதி (13.5.18) ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் (A/C) நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்கள் 1.முனைவர் பேராசிரியர் திரு. ராசவேலு ஐயா அவர்கள், ( துறைத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) 2.மூத்த கல்வெட்டாய்வாளர் விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா அவர்கள் 3.சமண/பவுத்தவியல் ஆய்வாளர் முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் ( Mahathma Selvapandiyan) 4.வரலாறு.காம் ஆசிரியர் குழுவினர் திரு. ச.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் 5. திரு.சு.சீதாராமன் அவர்கள் ( Seetharaman Subramanian) ஆகியோர் செறிவான தலைப்புகளில் வரலாற்றுரையாற்ற உள்ளனர். ( தலைப்புகளை அழைப்பிதழில் காண்க) அன்றைய தினம் எமது ஆய்வு மையம் இதுவரை கண்டறிந்த நடுகற்கள் அனைத்தையும் தொகுத்து "சேலம் மாவட்ட நடுகற்கள் (புதிய கண்டறிதல்கள்)"

என் முதல் விமான பயணம்

படம்
என் முதல் விமான பயணம் அரை டவுசர் போட்ட காலத்தில் வானத்தில் ஏரோப்பிளான் சத்தம் கேட்டால் அன்னாந்து கழுத்து வலிக்க வலிக்க விமானம் மறைவும் வரை பார்த்து கொண்டே இருப்பேன்.. என்றாவது ஒரு நாள் அதன் அருகே சென்று பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு அண்மையில் பயணம் செய்யும் வாய்பாகவே வசப்பட்டது...! என் தொழில் தொடர்பான நிறுவனம் 42 பேர் கொண்ட குழுவை சுற்றுலா அழைத்து சென்றார்கள் என்னைவிட என் பொண்ணுக்கும், பையனுக்கும்தான் ரொம்ப சந்தோசம்....! என் 10 வயது மகள் அப்பா நீங்கள் இந்த வயதில்.......!தான் பிளைட்டில் ஏறுகிறீர்கள் நான் 10வயதில பிளைட்டில் பறக்கப் போகிறேன் என நக்கல் அடித்தார்..ஒரு மாதம் முன்பிருந் தே இன்னும் 30 நாள்,29நாள்தான் இருக்கு என நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தனர்... டெல்லி,ஜெய்பூர் செல்வதாக திட்டம்.. சேலத்தில் இருந்து ஏ.சி.டீலக்ஸ் பஸ்ஸில் கிளம்பி அதிகாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சென்று இறங்கினோம். விமான நிலையத்தில் ஒரு காப்பி குடிக்கலாம் என நானும் என் பையனும் சென்றோம்...விலையை கேட்டவுடன் அடி வயிறு கலங்கி விட்ட்து...

அப்பாவின் ஆசை

படம்
அப்பாவின் ஆசை என் பையன் அதிக மதிப்பெண் பெறவில்லையே...! வருந்தினேன் ஏங்கினேன்.....! குழந்தையே இல்லையென்று ஏங்குவோரை காணும் வரை..! எனக்கும் ஆசைதான்... அவனோடு நண்பணாக பழக வேண்டுமென்று இளமை துள்ளளோடு அவனின் குரும்புகள் கோபத்தை கொடுத்தலும் அவன் என் பையன்...! அவனின் மனநிலைக்கு நான் மாறிக் கொள்கிறேன்.....! அன்புள்ள அப் பா

10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை..........

படம்
10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் kகவிதை..........! என் முதல் கவிதை உன் உள் மனதில் பதிந்திருக்கும் பாலுணர்வு புதையல்கள் அகழ்தெடுக்கப்பட்டால் அவை.......! நிச்சயம் தங்கங்களாக அல்ல.....! நிச்சயம் தரங்கெட்டவகளாகத்தான் இருக்கும்.....! மனித நேயமென்ற உணர்வால் அவற்றை புதைத்துவிட்டு புத்தன் போல் வேடமிகிறாய்.......! வாய்ப்பு கிடைக்கும் வரை யாவரும் யோக்கியனே......!

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

நேற்று மாலை என் 10 வயது மகளிடம் கண்ணு ஏதாவது ஜோக் சொல்லு என்று கேட்டேன்  என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...! சேர்மேன் சேர்ல உட்காரலாம்... வாட்ச்மேன் வாட்ச்லே உட்கார முடியுமா..? அண்ணன் பொண்டாட்டி அண்ணி.. தம்பி பொண்டாட்டி தண்ணியா..? விக்கெட் கீப்பர் விக்கெட்டை எடுக்கலாம்.. கேட் கீப்பர் கேட்டை எடுக்க முடியுமா..? போர்ல தண்ணி அடிச்சா ந்ல்ல பேரு.. “பார்லே”தண்ணி அடிச்சா அக்க போரு ‘வோடா “ போன்ல பேசலாம் ... ” வோடாதா “ ஓட்டை போன்ல பேச முடியுமா..? உலகிலே பெரிய கடை எது ?   சாக்கடை உலகிலே பெரிய ஜாம் எது?     டிராபிக் ஜாம்....! உலகிலே பெரிய ஷிப் எது?   பிரண்ஷிப் என்ன சார் ஜோக் நல்லா இருந்துச்சா..?