ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

25 நவம்பர், 2008

உடல் மாற்றி ஒப்படைப்பு: வேறு குடும்பத்தினர் தகனம் செய்துவிட்டதால் பரபரப்பு


வேலூர் சாலை விபத்தில் சிக்கி இறந்த .தி.மு.., கிளைச்செயலரின் உடல், சென்னை அரசு பொது மருத்துவமனைபிணவறையில் கவனக்குறைவாக வேறு ஒருவரிடம்ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டுவிட்டது. இறந்தவரின் உடல் இல்லாமல் உறவினர்கள் கூச்சல்போட்டதால், மருத்துவமனையில் பெரும் பரபரப்புஏற்பட்டது.



வேலூர் மாவட்டம் மேமந்தபுரம் மசூதி தெருவைச் சேர்ந்தவர்கிருஷ்ணமூர்த்தி(45). விவசாயியான இவர், மேமந்தபுரம்.தி.மு.., கிளைச் செயலராக இருந்தார். இவருக்கு மனைவி பத்மினியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். கடந்தம் தேதி கிருஷ்ணமூர்த்தி, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேகத் தடையில் தடுக்கி விழுந்து, பலத்த காயம்அடைந்து, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். 20



சிகிச்சை அளித்தும் பலனின்றி, 23ம் தேதி மாலை 4 மணிக்கு இறந்துவிட்டார். அவரது உடல் மருத்துவமனைபிணவறையில் வைக்கப்பட்டது. பிணவறையில் உடல் அடையாளத்திற்கு 344 என்ற எண் வழங்கப்பட்டது. மேற்குவங்கத்தைச் சேர்ந்த தபஸ்பால்(39) என்பவர், தொடர் வயிற்றுவலி மற்றும் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதுபோன்ற காரணங்களுக்காக, கடந்த 22ம் தேதி, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றிஅவரும் 23ம் தேதி காலை இறந்துவிட்டார்.



தபஸ்பாலின் உறவினர்கள் நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து, இறந்தவரின் உடலைக் கேட்டனர். பிணவறை ஊழியர்கள் கவனக் குறைவாக, வேலூர் கிருஷ்ணமூர்த்தியின் உடலைக் கொடுத்துவிட்டனர். தபஸ்பாலின் உறவினர்கள், உடலை எடுத்துச் சென்று, கையோடு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில்எரித்துவிட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள், அவரது உடலைப் பெற்றுச் செல்ல காலை 9.45 மணிக்குவந்தனர். ஆனால், பிணவறையில் உடல் இல்லை. பிணவறையில் இருந்த அனைத்து பிரேதங்களையும் காட்டியபிறகு, அவற்றில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் இல்லை என்பது உறுதியானது. விசாரித்ததில், தபஸ்பாலின்உடலுக்குப் பதிலாக கிருஷ்ணமூர்த்தியின் உடல் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.



இறந்தவரின் உறவினர்கள், மருத்துவமனை "டீன்' மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக "டீன்' கலாநிதி கூறியதாவது:



இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. சம்பவம் நடந்ததற்கான காரணத்தை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க டாக்டர்கள் அடங்கிய குழுஅமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பிரேதம் மாற்றி ஒப்படைக்கப்பட்டபோது, பணியில் இருந்த ஊழியர்டில்லிபாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுக்கு நான் எந்தவகையில் ஆறுதல்சொல்வது என்று தெரியவில்லை.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு