ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

20 நவம்பர், 2008

கண்கெட்ட பின் கூலிங்கிளாஸ்! கார்த்திக்கும் படப்பிடிப்பும்.. தயாரிப்பாளர்களுக்கு நாக்கு வெளியே தள்ளியது

கண்கெட்ட பின் கூலிங்கிளாஸ்!
கார்த்திக்கும் படப்பிடிப்பும்...

மறுபடியும் ஒரு அக்னி நட்சத்திரமாக ஜொலிப்பாரா கார்த்திக்? மணிரத்னம் இயக்கியவரும் Karthikராவணன் படத்தில் நடித்து வருகிறாராம். நீண்ட காலம் கழித்து நடிக்க வந்திருக்கும் இவர், படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள்.

கார்த்திக் மட்டும் ஒழுக்கசீலராக இருந்திருந்தால், அவரது மார்க்கெட்டை யாராலும் அசைத்திருக்க முடியாது என்ற பரவலான பேச்சை இப்போதும் பல சினிமா கம்பெனிகளில் கேட்கலாம். தமிழ் சினிமா ரசிகர்களை தனது துறுதுறு நடிப்பால் கட்டி வைத்திருந்த கார்த்திக்கிடம், இல்லாத ஒரே விஷயம் பஞ்சுவாலிடி! காலை 9 மணிக்கு வரச்சொன்னால், மதியம் மூன்று மணிக்கு வந்து மேக்கப் ரூம் எங்கேயிருக்கு என்று கேட்பவர் அவர். 60 நாட்களில் முடிகிற படப்பிடிப்பு இவர் ஓருவராலேயே இரட்டிப்பு செலவை தந்ததால் பல தயாரிப்பாளர்களுக்கு நாக்கு வெளியே தள்ளியது. கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார் கார்த்திக்.

அரசியலுக்குள் காலடி வைத்த இவருக்கு அங்கேயும் இதே பிரச்சனை. ஏதோ பிரஸ்மீட்டை கேன்சல் செய்கிற மாதிரி பொதுக்கூட்டங்களையே கேன்சல் செய்தார். அவ்வளவுதான்...அங்கேயும் பின்னடைவு. தானே கதை வசனம் எழுதி இயக்கப் போகிறேன் என்ற பிடிவாதத்தோடு வீட்டுக்குள் அடைந்து கிடந்தவரை அழைத்து நடிக்க சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.

சாலக்குடியில் நடந்து வரும் படப்பிடிப்பில், சின்சியராக கலந்து கொள்கிறாராம் கார்த்திக். ‘கண் கெட்ட பிறகு கூலிங்கிளாஸ்!

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு