ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

23 நவம்பர், 2008

‘ஓடிப்போலாமா’ ;சந்தியா,அசத்தப் போவது யாரு புகழ் மகேஸ்வரி

சங்கீதம் என்றால் பாடகர்களுக்கு பிடிக்குமல்லவா? பாடகரான க்ரீஷ§க்கும் Odipolamaசங்கீதாவை பிடித்துப் போனது. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி சங்கீதா ரசிகர்களை நிலை குலைய வைத்தது. இந்த செய்தியை இருவரும் மறுத்தார்கள். ஆனாலும் சங்கீதாவுக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களின் கூட்டம் குறைந்து போனது.

பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்துப் பார்ப்பதுதானே நமது மரபும், இயல்பும்? சங்கீதாவின் இடத்தை அவரது தம்பி பரிமள் நிரப்புவார் என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ? இவரை ஹீரோவாக வைத்து ‘ஓடிப்போலாமா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். பரிமளுக்கு ஜோடியாக நடிக்கிறார் சந்தியா. இன்னொரு நாயகியாக அசத்தப் போவது யாரு புகழ் மகேஸ்வரியும் நடிக்கிறாராம். (மினி ஸ்கர்ட்டோடு சினிமா பங்ஷன்களுக்கு வரும்போதே நினைச்சோம்)

வழக்கமாக காதலர்கள்தான் ஓடிப்போவார்கள். இந்த படத்தில் பெற்றவர்களின் சந்தோஷத்திற்காக பிள்ளைகள் ஓடிப்போவார்கள். அப்படி ஓடிப்போகிற இருவர் சந்திக்கிறபோது ஏற்படுகிற விஷயத்தை சுவாரஸ்மாக சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் கண்மணி. ஆஹா எத்தனை அழகு என்ற படத்தை இயக்கியவர் இவர். ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி ஒவ்வொரு காட்சியையும் அமைச்சிருக்கேன் என்கிறார் கண்மணி.

தியேட்டருக்குள்ளே ஓடிப்போலாமா என்று ஆர்வப்பட வைத்தால் சரி.

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு