ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

23 நவம்பர், 2008

பெரிய பெரிய ஆயுதங் களையும், இயந்திரங்களை யும், மோட்டார்களையும் கண்டுபிடித்த அயல் நாடு களில் ஆயுத பூசை இல்லையே ஏன்?

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளால் பலன் உண்டா?

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசையாகும். கல்வியையும், தொழிலையும் மையமாக வைத்து ஒரு பெண்ணை தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டு அதை பூசை செய் தால் நாம் கல்வியை அதிக மாக கற்கவும், பெரிய பதவி களில் உயரவும் முடியும் என சொல்லி நம்மை பார்ப்பனப் பதர்கள் ஆண்டாண்டாய் ஏமாற்றி வந்தனர்.

கல்வியினை கற்க சொந்த முயற்சி எடுத்துக் கொள்ளா மல் கடவுளை (கல்லை) நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமியின் பேராலும், பூசையின் பேராலும் கொடுக்கும் பணத் தைக் கொண்டே நம்முடைய உழைப்பை கொண்டே பார்ப்பனர்கள் படித்து பெரிய படிப்பாளியாகிக் கொண்டு நம்மை படிப்பு வராத மக்கு கள் என சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சரஸ்வதி பூசை கொண்டாடும் பக்தர்களே, மாணவ - மாணவியரே, சற்று சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அவை பார்ப் பனர்களின் புராணக் கதை களின் படியே மிக மிக ஆபாச மானதாகும். அதாவது சரஸ் வதி என்கிற ஒரு பெண் பிரம் மனுடைய உடலில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு, அந்த பிரம்மனே அவளை மனைவியாக்க அழைக்கையில் அவள் பிரம் மனை தகப்பன் (தந்தை) என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண்மான் உருவம் எடுத்து ஓடுகிறாள், உடனே பிரமனும் ஒரு ஆண் மான் உருவம் எடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும். அங்கே சிவன் வேடன் உருவமெடுத்து ஆண் மானைக் கொன்று விடுகிறான். பிறகு சரஸ்வதி அழுது புலம்புகிறாள். சிவன் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து பிரம்ம னுக்கு அதாவது தன் தந் தைக்கே சரஸ்வதி மனைவி யாக சம்மதிக்கிறாள் என்று அய்யா தந்தை பெரியாரோ, அல்லது திராவிடர் கழகத் தினரோ கூறவில்லை இவை அனைத்தும் சரஸ்வதியின் உற்பவக் கதையில் கூறப்பட்டு இருக்கிறது. இது போன்ற பண்டிகைகளுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தான் மிகக் கேவலமான அறிவற்ற செயல் ஆகும்.

ஆயுத பூசையில் அரசன் தன்னுடைய ஆயுதங்களை யும், வியாபாரி தனது கணக் குப் புத்தகங்களையும், தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி, அரி வாள், மண் வெட்டி, முதலிய வற்றையும், தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயு தங்களையும், இயந்திரங்களை யும், மோட்டார், வாகனங் களையும், மாணவர்கள் பாட புத்தகங்களையும், குழந்தை கள் பொம்மைகளையும், இது போன்ற தங்களுடைய தொழி லுக்கேற்ப ஆயுதங்களையும், பொருள்களையும் பூசை போட்டு கும்பிடுகிறான். ஆனால் இன்று விபச்சாரத்தை தொழிலாக நடத்துபவர்கள் எதை வைத்து பூசை போடு வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

பெரிய பெரிய ஆயுதங் களையும், இயந்திரங்களை யும், மோட்டார்களையும் கண்டுபிடித்த அயல் நாடு களில் ஆயுத பூசை இல்லையே ஏன்? என்பதை நாம் உணர வேணடும். நம் தமிழன் பூசை போட்டு, பூசை போட்டே பொழுதை கழிக்கிறான்.

நாம் இன்று படித்து பட்டங்கள், பதவிகள் பெறு வதற்கும், குறிப்பாக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி இருப்பதற்கும் காரணம் தந்தை பெரியார் போராடி நமக்கு பெற்று தந்த இடஒதுக்கீடு - தான் காரணம். இதனை நாம் புரிந்து கொள் ளாமல். இன்று நாம் படித்து உயர காரணமாக இருப்பது சரஸ்வதிதான் என்று இன் றைய மாணவ - மாணவியர் கள் பலரும் அறியாமை இருளில் மூழ்கி கிடக்கின் றனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் அரசு பொதுத் தேர்வு நெருங்கியவுடன் அவர்கள் பயத்துடன் பக்தியில் மூழ்கின்றனர். அந்த தேர்வுக்கான தேர்வு அறை நுழைவு சீட்டை பள்ளியில் வாங்கியவுடன் புத்தியுள்ள மாணவர்கள், புத்தியில்லா கல்லின் முன் வைத்து கும்பிடுகின்றனர். இதனால் அவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியுமா அல்லது தேர்ச் சிதான் அடைய முடியுமா என்பதை உணர மறுக்கின் றனர். அவர்கள் தேர்வில் வெற்றி பெற பயின்ற கல்வியை நம்பவில்லை. கற்றுக் கொடுத்த ஆசிரியரை நம்வில்லையே. தன்னுடைய அறிவை நம்ப வில்லை. மாறாக அவர்கள் கல்லை நம்புகின்றனர். கல் விக்குக் காரணம் ஆசிரியரா? சரஸ்வதியா? பக்தியுள்ளவன் படிக்காமல் பாஸ் ஆவானா? என்பதை உணர வேண்டும் ஆகையால்தான் அய்யா பெரியார் படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லை. படித்தவர் பல பேருக்கு பகுத்தறிவு இல்லை என்று ஆழமான சிந்தனை களோடு கூறினார்கள்.

இதனையே கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர் கள் பகுத்தறிவு சுவை களோடு கூறுகையில் நான் முக நாக்கினிலே மலைமகள் உறைவதெனில் மலஜலம் கழிப்பது எங்கே எங்கே எனக் கேட்டார். இதுவரை எவரும் பதில் கூறவில்லை. கல்விக்கு கடவுள் உள்ள நம் தமிழ்நாட்டில் இன்றும் கைநாட்டுகள் இருப்பது ஏன்? கல்விக்குக் கடவுள் இல்லா நாடுகளில் அதிக விழுக்காடு படித்தோர் இருப் பது ஏன்? ஆயுதங்களை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப் பட்டும், தொழிலற்றும் இருப் பது ஏன்? இது போன்ற பூசை களின் மூலம் நமது முட்டாள் தனம் எவ்வளவு வெளியா கிறது என்பதை பள்ளி மாணவ - மாணவியரும், தமிழர்களும் உணர்ந்து மற்றவர் இடத்திலும் எடுத்து கூற வேண்டாமா?

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு