வீரமணியே, உன் விலை என்ன? வீரமணியே உன் விலை என்ன? எனத் திண்டுக்கல்லில் சுவரொட்டி கடைசி ஆர்.எஸ்.எஸ். இருக்கும் வரை, கருப்புச் சட்டைக்காரன் இருந்தே தீரு

அடுத்த தேர்தலை மட்டுமே சிந்திக்காமல்
அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்துச் செயல்படும்
கலைஞர் ஆட்சியைக் கண்ணிமைபோல் காப்போம்!
திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!


தேர்தலைப் பற்றி மட்டுமே கவலைப்படாமல் அடுத்த தலைமுறை பற்றிக் கவலை யுடன் சிந்தித்துச் செயல்படும் ஆட்சி - கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
கலைஞர் அமைச்சரவை யில் உள்ள கே.என்.நேரு, இ.பெரியசாமி ஆகியோர் களின் சாதனைகளுக்குப் பாராட்டு விழாவும், சிறு பான்மையினர்க்கு எதிராக வன்முறைகளை தூண்டிச் செயல்படுத்தும் சக்திகளைக் கண்டித்தும், சிறுபான்மை யினர் பாதுகாப்புக்காகவும் திராவிடர் தொழிலாளர் கழகத் தின் சார்பில், பேரணியுடன் கூடிய பொதுக்கூட்டம், நேற்று மாலை (15.11.2008) திண்டுக் கல்லில் நடைபெற்றது. கூட் டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது:
மிகுந்த எழுச்சியும், பெரு மையும் கொண்டு இருபெரும் செய்திகளை உள்ளடக்கிய பாராட்டு விழா, அதேநேரம் கண்டனம் தெரிவிக்கும் பேரணி என, வாழ்வில் அனைத்தும் இருக்கும் என்பதைப்போல திராவிடர் தொழிலாளர் சங்கத்தின் மிகச்சிறந்த நிகழ்ச்சி, எப்போதுமில்லாத அளவிற்குச் சிறப்பாக நடைபெற்று வரு கிறது.
ஆட்சிக் கிரீடத்தில் தங்கமாக ஜொலிக்கும் அமைச்சர்கள்
இன எதிரிகள் ஊடகங்கள் வாயிலாக, இந்த ஆட்சிக்கு எதிராக துரும்பைத் தூணாக் கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து அமைச்சர்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். கலைஞர் உருவாக்கிய ஆட்சிக் கிரீடத்தில் சாதனைச் செம்மல் களாக, ஜொலிக்கும் தங்கங் களாக விளங்குகிறார்கள்.
தாய்க்கழகம் பாராட்டு கிறது என அமைச்சர் கே.என்.நேரு சொன்னதை எண்ணி மகிழ்கிறோம். பாராட் டுவது எங்கள் கடமை. ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்கள் எழுச்சி கொள்ளும் அளவிற்குச் செயல் படுகிறீர்கள், அதனால் பாராட் டுகிறோம். அவ்வாறு செய்வது இனநலம். இன்னும் சொல்லப் போனால் எங்களின் பொதுச் சுயநலம். சுயநலம் என்றால் அது எங்களின் இனநலத்தை அடிப்படையாகக் கொண் டது.
போக்குவரத்துத்துறை சென்ற ஆட்சியில் பல சங்க டங்களைச் சந்தித்தது. ஆனால் கலைஞர் ஆட்சியின் சமதர்மத் திட்டத்தினால் தொழிலாளர் களுக்கு இது பயன்தரும் ஆட்சியாக இருக்கிறது.
ஒரு காலத்தில் அடையாறு முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை 23 எண் கொண்ட பேருந்தில் நான் அடிக்கடி பயணம் செய்வேன். அது ஒரு மணி நேரப் பயணமாக இருக் கும். அப்போதிருந்த பேருந்து அமைப்புக்கும், இப்போது உள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் என்ன மேலை நாட்டிலா இருக்கிறோம் என் கிற அய்யம் வருகிறது.
அந்தளவிற்குப் பேருந்துகள் மகிழுந்துகளாக இருக்கின்றன. நாள்தோறும் வடிவமைப் போடு, குளிர்சாதனம் பொருத் தப்பட்டு பயணிகள் ஏறியதும் தானாகவே கதவுகள் மூடப் படும் பேருந்துகள் எல்லாம் இங்கே இயக்கப்பட்டு வரு கின்றன. இதனை இவன் முடிப் பான் எனும் திருக்குறளுக்கு ஏற்ப கலைஞர் அவர்கள் பொருத்தமாக அமைச்சர்கள் நேரு, பெரியசாமி போன்றவர் களை நியமித்துள்ளார்.
பேருந்தைப் பார்க்கும் போதே பயணம் செய்யத் தூண் டுகிறது. ஒவ்வொரு பேருந்திற் கும் அழகழகான தமிழ்ப் பெயர்களும் சூட்டியுள்ளனர்.
1972ஆம் ஆண்டில் தனியார் வசமிருந்த பேருந்துகளைத் துணிச்சலாக அரசுடமையாக் கியவர் முதல்வர் கலைஞர். இன்றைக்கு அத்துறை மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள் ளது. பிற மாநிலப் பேருந்து களைப் பார்த்தால் இந்த வித் தியாசத்தை எளிதில் உணர லாம்.
அமைச்சர் மாண்புமிகு பெரியசாமி
அதேபோன்று வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களும் தம் துறையில் நிகரற்ற சாதனை படைத்துள் ளார். அமைச்சர் பெரியசாமி குறித்து நான் ஒன்றை நினைத் தேன். அதை அமைச்சர் நேரு கூறிவிட்டார். சகோதரர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். அதாவது பெரியசாமி அவர் கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் செயல்படக் கூடிய தன்மை படைத்தவர். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள்.
அதைப்போல இவர், அரசு நிர்ணயித்த இலக்கை விடவும் கூடுதலாகவே 6 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கி சாதனை படைத்துள்ளார்.
முன்பெல்லாம் அறம், பொருள், இன்பம் என்று கூறி வீடு என்றவுடன் மேலே காட்டி மோட்சம் என்று சொல்லி விடுவார்கள். இந்த ஆட்சியில் தான் அது வீடு என்பது குடியிருக்கும் வீடாக மக்களுக்குத் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் தொழிற் சாலைகள் பெருகி வருகின்றன. சென்ற ஆட்சியில் மின் உற்பத் திக்குச் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் இப் போது பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. அன்றைக்கு அவர்கள் செய்த தவறை அவர்களே இன் றைக்கு அரசியல் முதலீடாகப் பயன்படுத்துகிறார்கள். என்னே வேடிக்கை!


சட்டக்கல்லூரி பிரச்சினையும் முதல்வர் கையாண்ட அணுகுமுறையும்
இன்றைக்குத் தமிழக முதல் வர் அனைத்து அமைச்சர் களின் - துறை சார்ந்த பிரச் சினைகளையும் கேட்டறிந்து, அதனைத் தீர்ப்பதற்கே தன்னு டைய முழு நேர சிந்தனையைப் பயன்படுத்தி வருகிறார். அண் மையில் நடைபெற்ற விரும் பத்தகாத சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் அவர் கையாண்ட அணுகு முறை எங்களுக்கெல்லாம் பெரும் வியப்பாக இருந்தது.
எந்த ஒரு பிரச்சினை என் றாலும் அவர் காட்டுகின்ற சுறுசுறுப்புக்கு ஈடு இணை யில்லை. அவரின் உழைப்பு அலாதியானது. அதிகாலை எழுந்து அனைத்துப் பத்திரி கைகளும் படித்து, எந்தெந்தத் துறைகள் குறித்து செய்தி வந்திருக்கிறதோ, அந்த அமைச் சர்களிடம் அதற்கான விளக் கம் கேட்பார். தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் எப்படி பவ்யமாக நிற்பார்களோ, அதேபோல அமைச்சர்கள் இருப்பார்கள்.

கணினிபோல் செயல்படும் கலைஞர்
கணினியில் பொத்தானை அழுத்தினால் எப்படி அது வேகமாகச் செயல்படுகிறதோ, அதேபோல கலைஞர் செயல் படுகிறார்.
அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க, உலகத் தமிழர்கள் உற்சாகம் கொள்ளும் வகை யில், அற்புதமான ஒரு தீர் மானத்தை சட்டசபையிலே அவர் நிறைவேற்றியுள்ளார். அத்தீர்மானத்தைக்கூட அதி காலை 3.30 மணிக்கே எழுந்து, அவரே எழுதியிருக்கிறார். கோழி கூடக் கூவிட அந்நேரம் எழுந்திருக்காது. ஏன் உதய சூரியன் கூட அந்நேரத்தில் உதிப்பதில்லை. ஆனால் இந்த உழைப்புச் சூரியன் அதிகாலை நேரத்தில் இலங்கைத் தமிழர் களுக்காகத் தீர்மானம் எழுதிக் கொண்டிருக்கிறது.
பிறகு 4.30 மணிக்கு ஆற்காடு வீராசாமி அவர்கள் மூலம் அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும் எடுத்துக்கூறி, தூங்கு கிற எதிர்க்கட்சித் தலைவர் களுக்கும் எடுத்துக் கூறப் படுகிறது. அந்தளவிற்கு மிகச் சிறப்பாக தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆட்சி செய்து வரு கிறார். இந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்த பல்வேறு முயற்சி களும் இங்கு செய்யப்படு கின்றன. வடமாநிலங்களில் வாலை ஆட்டும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற மதவெறிக் கட்சிகள் தமிழ்நாட்டிலும் வால் ஆட்ட நினைக்கின்றன.
அண்மையில் மாலேகான் குண்டு வெடிப்பிற்கு, இராணு வத்தில் பணிபுரிந்த பார்ப்பனர் கள்தான் காரணம் என்பது வெளியுலகிற்குத் தெரிந்து விட்டது. உண்மையை எவ் வளவு நாள்தான் மறைக்க முடியும்? அகமதாபாத்தில் 500 பேருக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். அதேபோல தமிழ்நாட்டிலும் வாலாட்ட நினைக்கிறார்கள். ஆனால் இங்கு அவர்கள் வால் ஒட்ட நறுக்கப்படும்.
வீரமணியே, உன் விலை என்ன?
வீரமணியே உன் விலை என்ன? எனத் திண்டுக்கல்லில் சுவரொட்டி அடித்துள்ளார் கள். இங்கே நடைபெறும் கூட்டத்திற்கு விளம்பரம் போதாதது என நினைத்தேன். ஆனால் இந்தச் சுவரொட்டி கள் மூலம் நல்ல விளம்பரத்தை அவர்களே செய்து விட்டார் கள். வீரமணியே உன் விலை என்ன? என்று கேட்டிருக் கிறார்கள். நான் என்னுடைய விலையைச் சொன்னால் உன்னால் கொடுக்க முடியுமா? நாங்கள் இருக்கிறோம் எனக் காட்டுவதற்காக நீங்கள் செய்யும் வேலை இங்கு எடு படாது. கடைசி ஆர்.எஸ்.எஸ். இருக்கும் வரை, கருப்புச் சட்டைக்காரன் இருந்தே தீருவான். எங்களை விலைக்கு வாங்க உங்களாலும் முடியாது, உங்களுக்குப் பயிற்சி கொடுப் பவராலும் முடியாது.
பிரபாகரன் இந்து இல்லையா?
இந்துவை மட்டும் ஏன் பேச வேண்டும்? எனக் கேட்கிறார் கள். இந்து என்றால் யார்? உன் அகராதியில் காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகள் என்னும் பார்ப்பனர்கள் மட்டும்தான் இந்துவா? இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்களே, அவர்கள் யார்? உன் கொள் கைப்படி அவர்கள் இந்துக்கள் இல்லையா? பிரபாகரன் யார்? இசுலாமியரா? அவரும் இந்து தானே? ஏன் குரல் கொடுக்க மறுக்கிறாய்?
இரு தினங்களுக்கு முன் கோவிலில் குண்டு வெடித்ததே, கண்டித்தாயா? இலங்கை இராணுவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தாயா?
உலகின் ஒரே இந்து நாடு எனப் பெருமை கொண்ட நேபாளமும் உங்களை விட்டுப் போய்விட்டது. பிறகு என்ன இந்து குறித்துப் பேசுகிறாய்?
கீறல் விழுந்த கிராமபோன் பிளேட்டுகள்
கிறித்தவரும், இசுலாமி யரும் இனத்தால் திராவிடர்கள் - தமிழர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தமிழர்களா? துக்க நிகழ்ச்சியில் கூட எதைத் திருட லாம் எனச் சிலர் நினைப் பார்கள். அதைப்போல எந்தப் பிரச்சினை என்றாலும், அப் பிரச்சினையின் மீது உண்மை யான அக்கறை கொள்ளாமல், அரசு பதவி விலக வேண்டும் எனக் கீறல் விழுந்த கிராம போன் தட்டு போல திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள்.
ஆட்சியில் இருப்பவர்களே பதவி விலக நினைத்தாலும் நாங்கள் விடமாட்டோம். ஏனெனில் உங்கள் பதவிதான் ஒரு சமுதாயத்திற்கு உதவியாக உள்ளது. தருமபுரியையடுத்த நாகரசம்பட்டி கிராமத்தில் ஒரு விழா நடைபெறுகிறது. பெரியாரும், முதல் அமைச்சர் அண்ணாவும் ஒரே மேடையில் நீண்ட நாட்கள் கழித்துச் சந்திக் கிறார்கள். அவ்விழாவில் விடு தலை ஆசிரியர் என்ற அடிப் படையில் நான் (கி.வீரமணி) தலைமை வகித்தேன்.
அப்போது முதல் அமைச் சர் அறிஞர் அண்ணா பேசு கையில், எங்களின் அதிகார எல்லை உங்களுக்குத் தெரியும். உங்களின் வாழ்த்துகளோடும், வழிகாட்டுதலோடும்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். நீங்கள் நினைக்கும் அளவிற்கு எங்களால் சில நேரங்களில் கொள்கைகளைச் செயல் படுத்த முடியவில்லை. எனினும் அந்த இலட்சியத்தை நிறை வேற்றவே நாங்கள் ஆட்சி செய்கிறோம். ஒருவேளை கொள்கையைச் செயல்படுத்த முடியாமல் போனால் இந்த ஆட்சியையே துறப்போம் என அண்ணா பேசினார்.
பின்னர் பெரியார் பேசும் போது, உங்களின் ஆட்சி அதிகாரம் அதன் எல்லை எனக்குத் தெரியும். எனவே எதற்கும் நீங்கள் கவலைப் படவேண்டாம். இந்த 5 ஆண்டில் 1 நாள், 1 மணி நேரம் கூட நீங்கள் ஆட்சியை இழக் கக் கூடாது எனக் கூறினார்.
கண்ணிமை போல கலைஞர் ஆட்சியைப் பாதுகாப்போம்!
அப்படிக்கூறிய பெரியாரின் தொண்டர்கள்தான் நாங் களும். எனவே இந்த ஆட் சியைக் கண்ணை இமை காப் பதுபோல பாதுகாப்போம். சிலர் நினைக்கிறார்கள் அண் ணன் எப்போது சாவார்? திண்ணை எப்போது காலி யாகும்? என்று. இங்கே அண் ணனும் சாகமாட்டார், திண் ணையும் காலியாகாது. இந்நிகழ்ச்சியிலே வெள்ளி வாள் கொடுத்துள்ளார்கள். இது நினைவுக்காக வழங்கப் பட்ட ஒன்று. ஆனால் கலை ஞரின் ஆட்சிக்கு வாளாகவும், கேடயமாகவும் நாங்கள் இருப் போம். காரணம், அடுத்த தேர்தலை மட்டுமே சிந்திக்கக் கூடிய சாதாரண அரசியல்வாதி அல்ல கலைஞர் அவர்கள். மாறாக அடுத்த தலை முறையைப் பற்றி சிந்திக்கும், செயல்படும் அரசி யல் ஞானி அவர். எனவே நாம் அனை வரும் ஒன்று பட்டுப் பாடுபடு வோம் என தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

(நிகழ்ச்சி விவரம் நாளை விடுதலையில் காணலாம்)

துளிகள்

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேசுவதற்கு முன்பாக இரண்டு அமைச்சர்களுக்கு (கே.என். நேரு - இ. பெரியசாமி) தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இரண்டு அமைச்சர்களுக்கும் சிறப்பு செய்து, நினைவுப் பரிசினை வழங்கினார்.

அரசு கொறடா அர. சக்ரபாணி அவர்களுக்குப் பொன் னாடை போர்த்திப் பாராட்டினார் தமிழர் தலைவர்.

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், பொது ஆர்வலர்கள் என ஏராள மானோர் பொன்னாடை அணிவித்தும் நன்கொடைகள் வழங்கி யும் மகிழ்ந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பாக தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு வெள்ளியிலான வீரவாள் வழங்கப்பட்டது.

மேடையில் இரண்டு பெரியார் பிஞ்சுகள் ஆசிரியருக்கு நன்கொடை வழங்கினர். அப்பிஞ்சுகளைப் பாராட்டி ஆசிரியர் சால்வை அணிவித்தார். ட சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடிகள்

திண்டுக்கல் மாவட்ட மூவேந்தர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணியம், சுப. ஜெக நாதன், நாராயணன் ஆகியோரை அமைச்சர்களுக்கு அறிமுகம் செய்து, சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் தமிழர் தலைவர் திண்டுக்கல் நகரத்தில் பெரியார் புத்தக விற்பனை நிலையத்தை மிகச் சிறப்பாக முன்னின்று நடத்திய கழகத் தோழர்களுக்கு ஆசிரியர் சால்வை அணிவித்து சிறப்பித்தார்

பொதுக்கூட்டமா? மாநாடா? என்று வியக்கும் வண்ணம் பேரணியும், நிகழ்ச்சிகளும் அமைந்திருந்தன.

கூட்டம் நடைபெற்ற மணிக்கூண்டு பிரதான சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை திரளான மக்களைக் காண முடிந்தது.


இலங்கைத் தமிழர்கள் 29 பேர் ஏதிலிகளாக தனுஷ் கோடிக்கு வந்துள்ளனர். 7 பெண் களும் 11 குழந்தைகளும் இதில் அடங்குவர். இவர்கள் அனை வரும் திருச்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

ஜாமீன் மனு பரிசீல னையில் இருக்கும் போது ஒரு வரை கைது செய்யக்கூடாது என ஒப்பந்தம் இருக்கும்போது இதற்கு மாறாகச் செயல்பட்ட காவல் ஆய்வாள ருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரி வித்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை