ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

23 நவம்பர், 2008

அரசியலில் குதிக்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்கும் வடிவேலு, இந்த படத்தில் ஒரு அரசியல்வாதியாகவே நடிக்கிறார்.

மலையாளத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட சிந்தாமணி கொலை கேஸ் என்ற R.Kபடத்தை தமிழில் எல்லாம் அவன் செயல் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அதில் சுரேஷ்கோபி நடித்த கேரக்டரில், புதுமுகம் ஆர்கே நடிக்கிறார். பெரும் தொழிலதிபரான இவர், சினிமாவுக்கு வந்தது பணம் சேர்ப்பதற்காக இல்லையாம். இளைஞர்களை ஒன்று திரட்டி ஒவ்வொருவரையும் தொழிலதிபாராக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்கிறார் இந்த புதிய நடிகர்! அதற்கு சினிமா உதவுமே என்பதால்தான் நடிகர் அவதாரம் எடுத்தாராம்.

எல்லாம் அவன் செயல் படத்தின் கதை என்ன? மருத்துவக்கல்லூரியில் பணக்கார பெண்கள் 9 பேர் படிக்க வருகிறார்கள். அதே கல்லூரியில் மெரிட்டில் சீட் வாங்கிக் கொண்டு வருகிறாள் ஏழைப் பெண் ஒருத்தி. இந்த ஒன்பது பெண்களும், இந்த ஏழைப் பெண்ணுக்கு ஏற்படுத்தும் கொடுமைகள்தான் படம். சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டக்கல்லூரி கலவரத்தில், அடிவாங்கும் அந்த மாணவனை பார்த்து துடிக்காத இதயமே இருந்திருக்க முடியாது. யாராவது இந்த வன்முறையை தடுத்திருக்க கூடாதா என்று ஏங்க வைத்த மாதிரியேதான் இப்படத்தில் வரும் சம்பவமும் என்கிறார் ஆர்கே.

இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் ஆர்கே. படத்தில் கலகலப்பு மூட்ட வடிவேலுவும் இருக்கிறார். அரசியலில் குதிக்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்கும் வடிவேலு, இந்த படத்தில் ஒரு அரசியல்வாதியாகவே நடிக்கிறார். தனது அரசியல் முன்னோட்டத்திற்கு பொருத்தமாக இந்த கேரக்டரை தேர்ந்தெடுக்கிறார் வைகைப்புயல் என்று கட்டியம் கூறினார் ஆர்கே! அப்படியா சங்கதி?

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு