பரந்தன் நக ரத்தில் ஈழத்தமிழர் குடியிருப்புகளின்மீது குண்டு வீசித் தாக்கி வீடுகள் தகர்ப்பு
ஈழத்தமிழர் குடியிருப்புகளின்மீது
குண்டு வீசித் தாக்கி வீடுகள் தகர்ப்பு
ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் கிளிநொச்சி, இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள பரந்தன் நக ரத்தில் குடியிருக்கும் வீடுகளின் மீதும் சிங்களப் படையினர் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இளைஞர் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் பலர் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்களப் படையினரின் தாக் குதலில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
17 ஆம் தேதியன்று பரந்தன் நகரில் மக்கள் வாழும் பகுதி கள் மீது இலங்கைப்படையி னர் குண்டு வீசித் தாக்கினர். இதில் அந்தோணியார் தேவா லயத்தின் முன்பு நின்றிருந்த 24 வயது இளைஞர் ஒருவர் கொல் லப்பட்டார். 2 சகோதரர்கள் உள்பட 6 பேர் காயமடைந்து கிளிநொச்சியின் தருமபுரம் பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
பீரங்கித் தாக்குதலில் ஏரா ளமான வீடுகள் தரை மட்ட மாக்கப்பட்டன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். குடியிருப்புகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் வதால், பரந்தன் நகரில் உள்ள 750 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளைக் காலி செய்து விட்டு பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
பள்ளி மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள், கூட்டுறவுத் துறை ஊழியர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கன் வீடுகளையும், அலுவலகங்களையும் விட்டு வெளியேறி சாலை களில் தஞ்சம் புகுந்தனர். இலங்கைப் படையினரின் தாக்குதல் முடியும் வரை அவர்கள் சாலை களிலேயே இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
கருத்துகள்