ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

18 நவம்பர், 2008

உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு இலங்கையில் நிச்சயம் போர் நிறுத்தம் வரும்

உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு
இலங்கையில் நிச்சயம் போர் நிறுத்தம் வரும்

: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி, விஜய் ரசிகர் நற்பணி மன்றத் தின் சார்பில் தமிழகம் முழுவ தும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதி ரில் உண்ணாவிரதப் போராட் டத்தில் விஜய் கலந்து கொண் டார். இயக்குனரும், விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். விஜய் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 37 இடங்களில் என் நற்பணி மன்றத்தினர் உண்ணா விரதம் இருக்கின்றனர். இலங்கை பிரச்னையில் கடந்த சில மாதங்களாக கேள்விப்படும் செய்திகள் மனதுக்கு கஷ்ட மாக இருக்கிறது. நம்மூரில் விமானம் பறந்தால் சிறுவர்கள் கைதட்டி வேடிக்கை பார்ப் பார்கள். இலங்கையில் விமா னம் பறந்தால் அங்கிருக்கும் சிறுவர்கள், மாணவ, மாண விகள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிகிறார்கள். நாம் அங்கே போய் சண்டை போட முடியாது. இப்படித் தான் உணர்வை காட்ட முடியும். கலையுலகினர், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், டி.வி. உலகினர் என எல்லா தமிழர்களும் தங்களது உணர்வை காட்டியிருக்கிறார் கள். நிச்சயம் இலங்கையில் போர் நிறுத்தம் வரும். தமிழர்கள் படுகொலைகள் நிறுத்தப்படும். இலங்கையில் உள்ள வர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக சிங்கள மொழியில் போரை நிறுத்தக் கேட்கிறேன் (சிங்கள மொழியில் கூறினார்). இவ் வாறு விஜய் பேசினார்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு