ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

24 நவம்பர், 2008

யாருடைய காலணியிலும் இந்தத் தூளைத் தூவி விட்டால் அவர் 15 நாள்களில் இறந்து போவார். மடிக்கணினி (லேப்டாப்) காட்டிக் கொடுத்தது

சிக்கியது இந்துத்வ சதிக் கூட்டம்!
ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் தீவிரமாக இல்லையாம்!
அவர்களையும் படுகொலை செய்ய மகாதிட்டம்
மடிக்கணினி (லேப்டாப்) காட்டிக் கொடுத்தது

மும்பை, 23- மாலேகான் குண்டு வெடிப்புச் சதியில் செயல்பட்ட புரோகித், பான்டே சங்கராச்சார்யா ஆகியோர்க்கு ஆதரவாக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் செயல் படும் நிலையில் இவர்கள் ஆர் எஸ்எஸ் தலைவர்களையும் கொல்ல சதித் திட்டம் போட் டுள்ள உண்மை வெளி வந்துள்ளது. இசுலாமியர்களிடம் மென்மை யான அணுகு முறையைக் கையாள் வதால், ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் மோகன் பக்வத் மற்றும் மூத்த தலைவர் இந்திரேஷ் ஆகி யோரைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர்.
பான்டே தனது மடிக்கணினி யில் தன்னைச் சந்திக்கும் அனை வரையும் அவர்களுடனான உரை யாடல்களையும் பதிவு செய்து வைத்துள்ளார். அதில் புரோகித் ஆவேசமாகப் பேசியதும் பதிவாகி யிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் களைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என புரோகித் கூறியதை பான்டே யும், புனேயைச் சேர்ந்த ஷியாம் ஆப்தே என்பவரும் ஆமோதித் துள்ள விவரமும் கணினிப் பதிவு களிலிருந்து தெரியவருகிறது.
இசுலாமியர்களை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளான மோகன் பகவத் மற்றும் இந்திரேஷ் பற்றிப் பேச்சு வந்த போது, லெப். கர்னல் புரோகித், பான்டேயையும் ஆப்தேவையும் சமாதானப்படுத்தி அவர்களைக் கொன்றுவிடலாம் என்கிற தம் எண்ணத்தை வெளி யிட்டுள்ளார்.
இந்தச் சதித்திட்டத்தில், உலக இந்து கூட்டமைப்பின் முக்கிய புள்ளியான ஒரு பிரபல டாக்டரும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவரு கிறது. இந்த டாக்டர் அபிநவ் பாரத் அமைப்புடன் தொடர்புடையவர். இந்தத் திட்டத்திற்காக ஆப்தே 5 லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுத் துள்ளார். பான்டே தன் பங்குக்கு 9 மி.மீ. சீனா நாட்டுக் கைத்துப்பாக்கியைக் கொடுத்துள்ளார். அத்துடன் மட் டும் அல்லாது நச்சுத்தூள் ஒன்றை யும் தருவதாகச் சொல்லியுள்ளார். யாருடைய காலணியிலும் இந்தத் தூளைத் தூவி விட்டால் அவர் 15 நாள்களில் இறந்து போவார். அப் படிப்பட்ட நச்சுத் தூளைத் தருகி றேன் என்று பான்டே சங்கராச் சார்யா சொல்லியுள்ளார்.
நச்சுத் தூளைத் தன் பக்தரிட மிருந்து பான்டேவுக்குக் கிடைத்த தாம். ஆனால், கொலை செய்யும் ஆள்களைக் கண்டுபிடித்துத் தராமல் காலங்கடத்தியதால், பான் டேயும் ஆப்தேவும் புரோகித் மீது ஏமாற்றத்தில் உள்ளனராம். ஆர் எஸ்எஸ்சின் இசுலாமியர் எதிர்ப்பு நிலை கண்டு ஏமாற்றம் அடைந்த வர்களைச் சேர்த்துக் கொண்டு இந்தூரில் அபிநவ் பாரத் அமைப்பை புரோகித் ஏற்படுத்தி இருக்கிறார். இவரும் மற்றவர்களும் ஆர்எஸ்எஸ் தலைமையின்மீது கொண்டிருக்கும் வெறுப்பு போலவே சங்பரிவார்த் தலைவர்கள் மீதும் பல இந்துத்வத் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.
இந்தத் தீவிரவாதிகள் மீதும் தீவிரவாத அமைப்புகள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தான் மதச்சார்பற்ற மக் களின் கேள்வி.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு