இதன் விலை 400 அமெரிக்க டாலர். நம்மூர் மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய்.

வானோக்கிக் கருவி

பொழுது போக்கிற்காக வானத்துக் கோள்களை ஆயும் பழக்கம் உண்டா உங்களுக்கு? தொலை நோக்காடி (டெலஸ்கோப்)க்குப் பதிலாக கையடக் கமான வானோக்கிப் பெட்டி ஒன்று வந்துள்ளது.
கோள் அல்லது விண்மீனைக் குறிப்பிட்டு பொத்தானை அழுத்தினால், அதனைத் துல்லிய மாகக் காண்பிக்கும். அதுபற்றிய விவரங்களையும் காண்பிப்பதோடு அதனை ஒலிக்கவும் செய்யும். அறிவியல் உண்மைகளைக் கூறுவதுடன் அதுபற்றி இட்டுக் கட்டப் பட்ட புராணக் கதைகளையும் கூடக் கூறும்.
இதன் விலை 400 அமெரிக்க டாலர். நம்மூர் மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய். இதன் பெயர் வான் சாரணர் (SKY SCOUT)

அறிவியல் தமிழ்

  • தானியங்கி பொறிகள்மூலம் தகவல் களைத் தானாகவே கையாளும் பொறியை தகவல் இயக்கப் பொறி (Datamation) எனலாம்.

  • தேவைப்படும் வகையில் தகவல் களைப் பகுத்துளிக்கும் முறையை தகவல் பகுப் பாய்வு (Data Processing) எனலாம்.

  • கண்ணாடி, பளிங்கு, மரம் போன்ற வழ வழப்பானவற்றில் ஒளிப்படத்தை மற்றும் செய்முறையை ஒளிப்படமாற்று (Decalcomania) எனலாம்.

  • குறிப்பிட்ட காலத்தில் ஆண்டு தோறும் இலை உதிர்க்கும் மரங்களை இலை யுதிர்க்கக் கூடிய (Deciduous) எனலாம்.

  • படகின் மேல் தளம், வீட்டின் சம தளக் கூரை போன்ற வற்றைத் தட்ப வெப்ப மாறு தலுக்கு ஏற்ப பாதுகாக்கும் பொருளை அழகொப்பனை (Decking) எனலாம்..

  • ஆழ் கடலில் மூழ்குபவர்கள் கப்பல் மாலு மிகள் ஆகியோருக்கு ஏற்படும் ஒருவகை நோயை அழுத்தத் தளர்வு நோய் (Decompression) எனலாம்.

  • சத்துக் குறைவால் ஏற்படும் ஸ்கர்வி, பெரிபெரி போன்ற நோய்களை பற்றாக் குறை நோய் (Deficiency Disease) எனலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை