விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர்
விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில்
நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர்உயிரிழந்தனர்,
கிளி நொச்சியைப் பிடிக்க முயலும்ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள்நடத்திய கடும் தாக் குதலில் 200-க்கும்மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் உயிர்இழந்ததாகக் கூறப்படுகிறது.
விமானப்படையின் உதவியுடன் கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை ராணுவம்கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்குஅருகில் வந்துவிட்டோம் என்று கூறி னர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாகத்தெரியவில்லை.
விடுதலைப்புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கைராணுவத்தி னரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.
3 முனைகளில் ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்குவடக் கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும், மேற்கில்இருந்து மற் றொரு படையும் கிளிநொச் சியை நெருங்கி வருகின்றன.
ஆனால் மூன்று முனைகளிலும் அவர்களின் முன்னேற் றத்தைவிடுதலைப்புலிகள் தொடர்ந்து பல வாரகால மாகத் தடுத்து நிறுத்திப் போரிட்டுவருகின்றனர்.
வடக்குப் பகுதியில் முக மாலை வழியாக முன்னேறி வந்த சிங்களப் படையைவிடு தலைப்புலிகள் அதிரடியாகத் தாக்கினார்கள். இதில் 17 ஆம் தேதி தொடங்கிஆம் தேதி காலை வரை நடந்த சண்டையில் மட்டும் 36 சிங்கள வீரர் கள்கொல்லப் பட்டனர். 90 பேர் படுகாயமடைந்தனர். 18
16 ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் 35-க்கும் மேற் பட்ட ராணுவ வீரர்கள்கொல் லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல தெற்குமுனையில் மாங்குளம் அருகில் நடந்து வரும் கடும் சண்டையில் ஏராளமானசிங் கள வீரர்கள் பலியானார்கள்.
கிளிநொச்சிப் பகுதியில் கடந்த 3 நாள்கள் நடந்த சண் டையில் மட்டுமே 200 சிங்கள வீரர்கள் பலியாகி இருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்திருப்பதாகவும் இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாங்குளம் பகுதியைக் கடந்த 17 ஆம் தேதி கைப்பற்றி விட்டதாக அரசுஅறிவித்தது. ஆனால், அங்குதான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதிலிருந்து மாங் குளம் இன்னும் விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில்தான்இருக்கிறது என்று தெரிய வந் துள்ளது.
ராணுவத் தரப்பில் 18 ஆம் தேதி அதிகாலையில்தான் பலத்த சேதம்ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனே மருத்துவமனைக்கு அன்று காலைகாயமடைந்த வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்குப் பறப் பதும் ராணுவ வீரர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன.
ராணுவத் தாக்குதல் தொடர் பான செய்திகளை வெளியிட இலங்கைப்பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாகத் தெரிவதில்லை.
ஆனாலும் 3 நாள் போரில் சிங்கள வீரர்கள் 200 பேர் பலியாகி இருப்பதாகஇலங்கைப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி மக்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
கருத்துகள்