இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் முதல் விமான பயணம்

படம்
என் முதல் விமான பயணம் அரை டவுசர் போட்ட காலத்தில் வானத்தில் ஏரோப்பிளான் சத்தம் கேட்டால் அன்னாந்து கழுத்து வலிக்க வலிக்க விமானம் மறைவும் வரை பார்த்து கொண்டே இருப்பேன்.. என்றாவது ஒரு நாள் அதன் அருகே சென்று பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு அண்மையில் பயணம் செய்யும் வாய்பாகவே வசப்பட்டது...! என் தொழில் தொடர்பான நிறுவனம் 42 பேர் கொண்ட குழுவை சுற்றுலா அழைத்து சென்றார்கள் என்னைவிட என் பொண்ணுக்கும், பையனுக்கும்தான் ரொம்ப சந்தோசம்....! என் 10 வயது மகள் அப்பா நீங்கள் இந்த வயதில்.......!தான் பிளைட்டில் ஏறுகிறீர்கள் நான் 10வயதில பிளைட்டில் பறக்கப் போகிறேன் என நக்கல் அடித்தார்..ஒரு மாதம் முன்பிருந் தே இன்னும் 30 நாள்,29நாள்தான் இருக்கு என நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தனர்... டெல்லி,ஜெய்பூர் செல்வதாக திட்டம்.. சேலத்தில் இருந்து ஏ.சி.டீலக்ஸ் பஸ்ஸில் கிளம்பி அதிகாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சென்று இறங்கினோம். விமான நிலையத்தில் ஒரு காப்பி குடிக்கலாம் என நானும் என் பையனும் சென்றோம்...விலையை கேட்டவுடன் அடி வயிறு கலங்கி விட்ட்து...

அப்பாவின் ஆசை

படம்
அப்பாவின் ஆசை என் பையன் அதிக மதிப்பெண் பெறவில்லையே...! வருந்தினேன் ஏங்கினேன்.....! குழந்தையே இல்லையென்று ஏங்குவோரை காணும் வரை..! எனக்கும் ஆசைதான்... அவனோடு நண்பணாக பழக வேண்டுமென்று இளமை துள்ளளோடு அவனின் குரும்புகள் கோபத்தை கொடுத்தலும் அவன் என் பையன்...! அவனின் மனநிலைக்கு நான் மாறிக் கொள்கிறேன்.....! அன்புள்ள அப் பா

10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை..........

படம்
10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் kகவிதை..........! என் முதல் கவிதை உன் உள் மனதில் பதிந்திருக்கும் பாலுணர்வு புதையல்கள் அகழ்தெடுக்கப்பட்டால் அவை.......! நிச்சயம் தங்கங்களாக அல்ல.....! நிச்சயம் தரங்கெட்டவகளாகத்தான் இருக்கும்.....! மனித நேயமென்ற உணர்வால் அவற்றை புதைத்துவிட்டு புத்தன் போல் வேடமிகிறாய்.......! வாய்ப்பு கிடைக்கும் வரை யாவரும் யோக்கியனே......!

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

நேற்று மாலை என் 10 வயது மகளிடம் கண்ணு ஏதாவது ஜோக் சொல்லு என்று கேட்டேன்  என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...! சேர்மேன் சேர்ல உட்காரலாம்... வாட்ச்மேன் வாட்ச்லே உட்கார முடியுமா..? அண்ணன் பொண்டாட்டி அண்ணி.. தம்பி பொண்டாட்டி தண்ணியா..? விக்கெட் கீப்பர் விக்கெட்டை எடுக்கலாம்.. கேட் கீப்பர் கேட்டை எடுக்க முடியுமா..? போர்ல தண்ணி அடிச்சா ந்ல்ல பேரு.. “பார்லே”தண்ணி அடிச்சா அக்க போரு ‘வோடா “ போன்ல பேசலாம் ... ” வோடாதா “ ஓட்டை போன்ல பேச முடியுமா..? உலகிலே பெரிய கடை எது ?   சாக்கடை உலகிலே பெரிய ஜாம் எது?     டிராபிக் ஜாம்....! உலகிலே பெரிய ஷிப் எது?   பிரண்ஷிப் என்ன சார் ஜோக் நல்லா இருந்துச்சா..?

அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?

படம்
அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா? நமது நாட்டில் மதத் தலைவர்களும், அறிவியல் படித்தவர்களும் அறிவியலையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பார்க்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் பற்றிய செய்திகள் புராணங்களில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் மதவாதிகள் அடிக்கடி முனைப்புக் காட்டுகின்றனர். விண்கலம்,-செயற்கைக்கோள், குளோனிங் பற்றிய செய்தி-கள் புராணங்களில் உள்ளன என்பதற்குப் பலமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மதமும் அறிவியலுமே உண்மையினைக் கண்டறிவதற்கான நெறி-முறைகள் எனும் விவாதத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்தக் கூற்றே உண்மைக்குப் புறம்பானது என்பதே உண்மை நிலை. மதத்தலைவர்களும் சாமியார்களும் தங்களது கூற்றுக்கு வலிமை சேர்க்க அறிவியல் கற்ற தங்களது சீடர்களைப் பயன்படுத்தத் தயங்குவது இல்லை. அத்தகைய வேடதாரிகள், சிந்தனைக்குத் தடை விதிக்கும் மெய் அறிவியலை (Meta Physics) ஆதரிக்க இயற்பியலாளரை (Physicists) மேற்கோள் காட்டவும், ஒரு தொப்பி கீழே விழுவதற்கு விளக்கமாக நியூட்டனையே தவறாகப் பயன்படுத்தவும் தவறுவது இல்லை. ஏன் இந்த நிலை? விஞ்ஞான உலகிலிருந்து வரும் ஓர் ஆதரவுச் சொல்கூட ம

என் இனிய தமிழ் மக்களே ? என் முதல் பதிவு

படம்
என் இனிய தமிழ் மக்களே ?   என் முதல் பதிவு நன்பர் முரளி கிருக்ஷ்ன்னன் உதவிஉடன் தட்டு தடுமாரி விசை பலகையில் தட்டினே ன்     கொஞ்சம் நம்பிகை வந்தது அட நான் கூட ஒரு பதிவாளான் மிட்டாய் கிடைத குழந்தையின் மகிழ்ச்சி       ஆலோசனை வழங்கி ஆதரவு தாருங்கள். தமிழ் வெங்கட்

அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்

படம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்   மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான். பாட்டு முடியும்போது நாயகிக்கு நினைவு திரும்புகிறது. யெஸ், ஷீ இஸ் ஆல் ரைட். அடடா என்ன அழகு படத்தில் வரும் இந்தக் காட்சி ஒரு சோறு பதம். காட்சிகள் இருக்கட்டும், கதை? ஒரே கல்லூ‌ரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கும்பல் நாயகியை கடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்து விடுகிறார் நாயகி. இதன் பிறகு வருவது நாம் மேலே பார்த்த வித்தியாசமான இதுவரை திரையில் பார்த்திராத அந்த பாட்டு சிகிச்சை. நாயகனின் தந்தை, மகன் நாயகியை காதலிப்பதை அறிந்து நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார். இப்போது வில்லன் என்ட்‌ர். நாயகியின் அப்பா ஒரு மத்திய அமைச்சர். காதலுக்கு அவர் சிவப்பு விளக்கு காட்டுகிறார். அப்புறமென்ன... அடிதடி இறுதியில் சுபம். ஆகாஷ் ஜெய் படத்தின் நாயகன். அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. நாயகி நிக்கோல் காஸ்ட்யூமை கம்மிப் பண்ணினாலே

கைகள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்

படம்
பிற‌வி‌யிலேயே  இரு கைகளையும் இழந்த மாணவி, காலால்  ப‌த்தா‌ம் வகு‌ப்பு‌ பொது‌த ் தேர்வு எழுதினார்.  திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகள் வித்யஸ்ரீ. இவர் பிறக்கும் போதே 2 கைகளும் இல்லாத நிலையில் பிறந்தார். ஆனாலும் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் சிறுமியாக இருக்கும்போதே இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுதுவதற்கு பயிற்சி பெற்றார். பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  ப‌த்தா‌ம் வகு‌ப்பு  படித்து வந்தார். நே‌ற்று  தமிழ்நாடு முழுவதும்  ப‌‌த்தா‌ம் வகு‌ப்பு‌ப் பொது‌த் தே‌ர்வ ு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. முக ைய ூர் செயின்ட் சேவியர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், வித்யஸ்ரீ பரீட்சை எழுதினார். தனது இடது காலின் விரல்களுக்கிடையே பேனாவை வைத்து, காலால் வினாக்களுக்கான விடையை எழுதினார்.  மற்ற மாணவிகளை காட்டிலும், மாணவி வித்யஸ்ரீக்கு மட்டும், தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 1.45 மணி வரை அனுமதித

பாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு!

படம்
1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.  2001 ... 2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக. ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக. காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு  ராஜ்யசபா  சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ். அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார். 2004... 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

படம்
ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன்.  வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார். சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். விழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி:  "என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்த