ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

29 மார்ச், 2009

அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்

மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான். பாட்டு முடியும்போது நாயகிக்கு நினைவு திரும்புகிறது. யெஸ், ஷீ இஸ் ஆல் ரைட்.

அடடா என்ன அழகு படத்தில் வரும் இந்தக் காட்சி ஒரு சோறு பதம். காட்சிகள் இருக்கட்டும், கதை?

ஒரே கல்லூ‌ரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கும்பல் நாயகியை கடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்து விடுகிறார் நாயகி. இதன் பிறகு வருவது நாம் மேலே பார்த்த வித்தியாசமான இதுவரை திரையில் பார்த்திராத அந்த பாட்டு சிகிச்சை. நாயகனின் தந்தை, மகன் நாயகியை காதலிப்பதை அறிந்து நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார்.

இப்போது வில்லன் என்ட்‌ர். நாயகியின் அப்பா ஒரு மத்திய அமைச்சர். காதலுக்கு அவர் சிவப்பு விளக்கு காட்டுகிறார். அப்புறமென்ன... அடிதடி இறுதியில் சுபம்.

ஆகாஷ் ஜெய் படத்தின் நாயகன். அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. நாயகி நிக்கோல் காஸ்ட்யூமை கம்மிப் பண்ணினாலே சமாளித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆகாஷின் அப்பாவாக சரத்பாபு. நல்ல மனம்படைத்த மனநல மருத்துவராக ஜமாய்க்கிறார். அம்மாவாக வரும் ரேகாவுக்கு வேலையே இல்லை.

ஆசிஷ்வித்யார்த்தி வழக்கமான ஹிஸ்டீ‌ரியா வில்லன். ரவுடிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதும்போது மத்திய அமைச்சரா இல்லை மத்திய சென்னை ரவுடியா என திகைக்க வைக்கிறார். அரத பழசு கதையிலும் அழகாக காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது கிச்சாவின் கேமரா. மொத்தம் ஏழு பாடல்கள். சில கேட்கிற மாதி‌ரி இருப்பது ஆச்ச‌ரியம்.

கருணாஸின் கடி காமெடி சில நேரம் சி‌ரிக்கவும் வைக்கிறது. நிக்கோலை மானபங்கப்படுத்த பாதுகாப்பு வீரரே அவர் மீது பாய்வதெல்லாம் காதுல பூ..

படம் முடிந்த பிறகு பெருமூச்சுதான் வருகிறது, அடடா என்ன அவஸ்தை.

லேபிள்கள்: , ,

26 மார்ச், 2009

கைகள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்


பிற‌வி‌யிலேயே இரு கைகளையும் இழந்த மாணவி, காலால் ப‌த்தா‌ம் வகு‌ப்பு‌ பொது‌த் தேர்வு எழுதினார். 

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகள் வித்யஸ்ரீ.

இவர் பிறக்கும் போதே 2 கைகளும் இல்லாத நிலையில் பிறந்தார். ஆனாலும் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் சிறுமியாக இருக்கும்போதே இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுதுவதற்கு பயிற்சி பெற்றார். பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப‌த்தா‌ம் வகு‌ப்பு படித்து வந்தார்.

நே‌ற்று தமிழ்நாடு முழுவதும் ப‌‌த்தா‌ம் வகு‌ப்பு‌ப் பொது‌த் தே‌ர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

முகையூர் செயின்ட் சேவியர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், வித்யஸ்ரீ பரீட்சை எழுதினார். தனது இடது காலின் விரல்களுக்கிடையே பேனாவை வைத்து, காலால் வினாக்களுக்கான விடையை எழுதினார். 

மற்ற மாணவிகளை காட்டிலும், மாணவி வித்யஸ்ரீக்கு மட்டும், தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 1.45 மணி வரை அனுமதித்தார்கள்.

குழ‌ந்தைகளே கைக‌ள் இ‌ல்லாத ‌வி‌த்யாஸ்ரீ படி‌த்து காலா‌ல் தே‌ர்வு எழுது‌கிறா‌ர். அவரு‌க்கு நமது பாரா‌ட்டு‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்ளுவோ‌

லேபிள்கள்:

பாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு!


1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது. 

2001 ...

2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.

ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.

காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு 
ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.

அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.

2004...

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.

இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.

2006...

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008 ...

2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.

2009...

2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பின் மீண்டும் வரும்-காங் நம்பிக்கை:

கூட்டணியை விட்டு பாமக போய்விட்டாலும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் பாமக தங்களிடம் வந்துவிடும் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்புகிறது.

இதனால் தான் இன்று பாமக கூட்டணியைவிட்டு வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாமகவை கூட்டணியில் நீடிக்க வைக்க எவ்வளவோ முயன்றோம். இப்போதும் கூட அவர்களுடன் கூட்டணியையே விரும்புகிறோம். அந்தக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கும் என்றார்

லேபிள்கள்: , , , , , , ,

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்


ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன். 

வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார்.

சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார்.

படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி: 

"என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். என்னை விட நல்ல நல்ல படங்களை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சினிமா என்பது மொழி. அதை நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுகிறீர்கள். நான், நாகேஷிடம்தான் நகைச்சுவையை கற்றுக்கொண்டேன். சிவாஜியிடம் நடிப்பை கற்றுக்கொண்டேன். பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா போன்ற மேதைகளிடம் பாட்டைக் கற்றுக்கொண்டேன்.

தமிழ் 
சினிமா, யதார்த்தத்தை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், வர்த்தகத்தில் இருப்பவர்கள், குழந்தைகளாக இருப்பதுதான். வெற்றி ஒன்றை மட்டுமே நாடும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். ஒருவிதத்தில், ரசிகர்களும் இதற்கு காரணம். ஓட்டுப் போடுவதற்கு சோம்பல் கொள்வது மாதிரி, நல்ல படம் எது, கெட்ட படம் எது? என்பதைச் சொல்வதற்கும் சோம்பல்தனம் அவர்களுக்கு. 

எந்த மாதிரி படம் எடுக்க வேண்டும், எந்த மாதிரி படம் எடுக்கக் கூடாது? என்பதை நீங்கள்தான் எங்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் நல்லதையும் சொல்வதில்லை. கெட்டதையும் சொல்வதில்லை. 

ரசிகர்கள், நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அது திரைமொழியைச் செழுமைப்படுத்த உதவும். 

நீங்கள் கேட்டால், போதை பொருளைக்கூட நாங்கள் விற்போம். அவ்வளவு நல்ல வியாபாரிகள் நாங்கள். சில நல்ல படங்கள் ஓடுவதில்லை. அந்த படங்களை இயக்கிய இயக்குநர்கள் இன்று மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறார்கள். அது, நிஜமாவே உங்களுக்குத்தான் ஆபத்து.

செக்ஸ் படங்களை...

எனக்கு தெரிந்த தணிக்கை அதிகாரி கோட்டி ஆனந்த், செக்ஸ் படங்களை ட்ரிபிள் எக்ஸ் என்ற முத்திரை குத்தி காட்டிவிடலாம் என்றார். இதனாலேயே அவரை வேலையைவிட்டு தூக்கிவிட்டார்கள். அவர் சொன்னதுபோல் செய்தால், குடும்ப பெண்கள் அந்தப் படங்களை பார்க்காமல் ஒதுங்கி விடுவார்கள். கழிவுநீருக்காக தனியாக குழாய் இருப்பது மாதிரிதான்... இப்படி, பிரித்தால்தான் 
குழந்தைகள் படம் அதிகமாக வரும்.

செக்ஸ் நிராகரிக்க முடியாதது!

'செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத் தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை.

குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று 
குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை. 

ஸ்லம்டாக் மில்லினர்!

ஸ்லம் டாக் மில்லினர் படத்தில் இந்தியாவின் ஏழ்மையை காட்டிவிட்டார்கள் என்று குறை சொல்கிறார்கள். இல்லாததைக் காட்டவில்லையே. இருப்பதைத்தான் காட்டியிருக்கிறார்கள்! வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் கண்களில் விமானத்தில் இருந்து இறங்கும்போதே தெரிவது, இங்குள்ள வறுமைதான். கட்டிடங்கள் அதற்குப் பின்னால்தான் தெரிகிறது.

அதைப் பார்த்துவிட்டு அவன், சாப்பிடுவதையே குறைத்து விடுகிறான். நாம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். எனக்கு டேனி பாயலைத் தெரியாது. அந்த படத்துக்கு கிடைத்த வெற்றி, ரஹ்மானுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஆங்கில படத்துக்குக் கிடைத்த வெற்றி...", என்றார் கமல். 

லேபிள்கள்: , , , ,

24 மார்ச், 2009

ஐடி ஆண்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தனம்


சென்னை: ஆண்களிடையே குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக சென்னையில் நடந்த பாலியல் மருத்துவ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய பாலியல் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 4-வது மாநாடு சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

மாநாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். டாக்டர் ராஜமோகன் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் டாக்டர் காமராஜ் மாநாட்டில் விவாதிக்கப்படும் பாலியல் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினார். முன்னாள் சர்வதேச பாலியல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அடைக்கண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

டாக்டர்கள் எம்.ஏ.கலாம், ஜார்ஜி காக்கடஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர் கருணாநிதி வரவேற்றார்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆண்-பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றி டாக்டர் விதால் பிரபு பேசினார்.

அவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஆண்-பெண்களிடம் பாலியல் பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாலியல் விழிப்புணர்வு அதிகாரித்தால் பாலியல் தொடர்பான வன்முறைகள் குறையும் என்றார்.

மாநாட்டில் பாலியல் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியும், பாலியல் குறைபாட்டை போக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் அறிவியல் பூர்வமான செக்ஸ் சந்தேகங்களுக்கு சர்வதேச பாலியல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

முன்னதாக மாநாடு குறித்து டாக்டர் காமராஜ் பேசுகையில்,

சர்வதேச அளவில் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு ஆண்டு தோறும் சென்னையில் நடத்தப்படுகிறது. இன்று நடந்த மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சர்வதேச பாலியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

பாலியல் மருத்துவத்தில் தற்போது பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

60 வயதான பெண்கள் கூட நவீன சிகிச்சை முறைகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். எங்களது ஆகாஷ் மருத்துவமனையில் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் 55 வயதான பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

இதே போல் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சை மூலம் பல்வேறு சாதனைகள் உலகம் முழுவதிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

அந்த சாதனைகள் பற்றியும் இங்குள்ள டாக்டர்களிடம் சர்வதேச பாலியல் மருத்துவ நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பாலியல் விழிப்புணர்வு மூலம் ஆண்-பெண்களிடம் ஏற்படும் குறைபாடுகளை தொடக்கத்திலேயே குணமாக்க முடியும்.

சமீபகாலமாக ஆண்களிடம் பாலியல் குறைபாடு அதிகரித்துள்ளது. அதிலும் தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றும் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

பாலியல் பிரச்சினைகளால் தற்போது நம் நாட்டில் விவகாரத்து பெருகி வருகிறது. இதை தடுக்க இம்மாநாட்டில் திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

சமீபகாலமாக உலகம் முழுவதிலும் ஓரின சேர்க்கை கலாசாரம் பெருகி வருகிறது. இப்படிப்பட்டவர்களிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தவறான பழக்க வழக்கங்களை எளிதில் தடுக்க முடியும்.

மாநாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை எவை என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு பாலியல் கல்வி அளித்தால் பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும் என்றார்.

பெருமளவிலான மாணவ, மாணவியரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். 

பல்வேறு செக்ஸ் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வு குறித்தும் அறிவியல் பூர்வமான விளக்கக் காட்சிகளும் மாநாட்டின்போது காட்டப்பட்டன.

ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி நன்றி கூறினார்.

மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில், பாலியல் மருத்துவ நிறுவனம் சார்பில் காதலர் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

மேயர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டோரும், ஏராளமான காதல் ஜோடிகளும் கலந்து கொண்டனர்.

லேபிள்கள்: , , , , , ,

காதலில் விழ மாத்திரை


ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம்.

கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம்.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும்.

காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.

காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக காதல் உணர்வு தோன்றும். அதேபோல அந்த உணர்வை மரத்துப் போக வைக்க இன்னொரு மாத்திரையும் சாத்தியம்தான் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், சரியான கலவையில் உருவாக்கப்படும் இந்த வேதியியல் மாத்திரைகள் நிச்சயம் காதலில் விழவும், காதலிலிருந்து மீளவும் உதவும் என்கிறார்கள்.

அட்லாண்டாவில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி யங் கூறுகையில், மனித மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால்தான் காதல் உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை நேரடியாக டிவி மூலம் விளக்கும் காலம் வந்து விட்டது.

இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் எலியைப் போன்ற தோற்றமுடைய பிரெய்ரி வோல்ஸ் விலங்குகளிடம் நாங்கள் சோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றமே காதல் உணர்வுகளுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.

அந்த உணர்வுகளின் பின்னணி குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம். 

ஒரு பெண் பிரெய்ரி வோல் மீது ஹார்மோனை செலுத்தியபோது அது இன்னொரு ஆண் விலங்கின் துணையை நாடியதை நாங்கள் கண்டோம். 

பின்னர் அந்த ஹார்மோன் மூளைக்குப் போவதை தடுத்தபோது, ஆண் துணையின் உதவியை அது நாடவில்லை. மாறாக அது இருக்கும் பக்கம் கூட அது போகவில்லை.

மனித மூளையும் இதேபோலத்தான் செயல்படுகிறது. மூளையை தூண்டுவிக்கும் இந்த வகை ஹார்மோன்கள் உண்மையின் மனிதன் பழக்க வழக்கங்களையும் கூட கட்டுப்படுத்துகிறது, மாற்றுகிறது.

இந்த ஹார்மோன் அதீதமாக செயல்பட்டால் கண்ணோடு கண் பார்த்து அணுகும் தைரியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். காதலில் இது முக்கியமாச்சே.. இதுதான் காதல் உணர்வாக நமக்கு தெரிகிறது என்கிறார் அவர்.

இப்படி மூளையை தூண்ட உதவும் இரு வகையான ரசாயன ஹார்மோன்களை (ஆக்சிடாக்சின் மற்றும் டோபமைன்) தற்போது மாத்திரை வடிவில் மாற்றி புழக்கத்தில் விட்டால், காதல் பழக்கத்திற்கு இது உதவக் கூடிய தோழனாக இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

இனிமேல் பழக வேண்டும் என யாராவது ஆசைப்பட்டால் கையில் பேப்பரும், பேனாவுமாக உட்கார்ந்து, கடலையும், வானத்தையும் பார்த்து கவிதை பாட வேண்டாம்.

பையில் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, டக்கென்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டால் போதும்...

லேபிள்கள்: , , , ,

ஆண்கள் விரும்பும் ஈர முத்தம்!


ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.

ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது.

இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. 

முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.

எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.

ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.

லேபிள்கள்: , , , ,

செக்ஸ்: இந்தியர்கள் செம திருப்தி!


செக்ஸ் வாழ்க்கையில், இந்தியர்கள்தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் உலக அளவில் பல துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல படுக்கை அறையிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு.

இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வை ஃபிஸர் பார்மச்சூட்டிகல் நிறுவனம் நடத்தியது. இந்தியா உள்பட மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

இருப்பதிலேயே மிகவும் மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ்பவர்கள் ஜப்பானியர்கள்தானாம். 10 சதவீதம் ஜப்பானியர்களுக்கே செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாம் ('செக்ஸில்' வீக் ஆக இருந்தாலும் 'சென்செக்ஸில்' நம்மை விட ஜப்பானியர்கள் டாப் என்பதை மறக்கக் கூடாது).

மலேசியர்களைப் பொறுத்தமட்டில், 3 ஆண்களில் 2 பேருக்கும், நான்கு பெண்களில் 3 பேருக்கும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையாம்.

திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை வாழ்வோரின் பட்டியலில் மலேசியர்களுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவரான டாக்டர் ரோசி கிங் கூறுகையில், திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த ஆசியா- பசிபிக் முடிவுகளின் சதவீதத்தை விட மலேசியாவின் சதவீதம் அதிகமாக உள்ளது.

மலேசியர்களில், ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 64 சதவீதம் பேரும் திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் முக்கியமானது 'எரக்ஷன்' குறித்த கேள்வி. அதை பல்வேறு அளவீடுகள் மூலம் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஆண் குறிகளின் அளவுகளை வைத்து அவற்றை நான்கு மட்டங்களாகப் (Level) பிரித்து அவற்றின் அடிப்படையில், செக்ஸ் திருப்தி குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இந்த அளவீடுகள் குறித்து ஆண்களிடம் விளக்கி அவர்களாகவே அதை பரிசோதித்து எங்களிடம் முடிவைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்களுக்கே தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருப்தி அதிகம் உள்ளதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது. 

மேலும் செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமான மன நிலையில் இருக்கும் ஆண்களும், பெண்களும் எதையும் பாசிட்டிவாக சிந்திக்கும் மனோ பக்குவத்தையும் பெற்றுள்ளனர் என்றார் ரோசி கிங்.லேபிள்கள்: , , , , ,

ரொமான்ஸுக்கு ரெட்!


தலைப்பைப் பார்த்தவுடன் டென்ஷன் வேண்டாம். சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு ஏற்றதாம். ஆய்வுகள் கூறுகின்றன இப்படி.

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் ரொமான்ஸுக்கு ஏற்ற நிறம் சிவப்பு நிறமாம். பளிச்சென நமது பார்ட்னரைக் கவர ஏற்ற நிறம் சிவப்புதானாம்.

சிவப்பு ரோஜா, சிவப்பு உடைகள், சிவப்பு லிப்ஸ்டிக் என சிவப்பு மயமாக மாறினால் பார்ட்னர்களை வெகு எளிதில் ஈர்த்து விடலாமாம் பெண்கள்.

நியூயார்க்கின், ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது சிவப்பு நிற உடை உள்பட பல்வேறு நிறத்திலான உடைகளுடன் கூடிய பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்தனர்.

பெரும்பாலானவர்களுக்கு சிவப்பு நிற உடையில் இருந்த பெண்களைத்தான் பிடித்திருந்ததாம்.

இதன் மூலம் மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம்தான் ஒருவரை அதிகம் ஈர்க்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

சிம்பன்சி குரங்குகளிடம் ஒரு குணம் இருக்கிறதாம். பெண் துணைகள் 'அந்த' நேரத்தில் கிராக்கி செய்தால், அவர்களைக் கவருவதற்காகவும், ஐஸ் வைத்து 'வேலையை' முடித்துக் கொள்வதற்காகவும், தங்களது 'பின்புறத்தை', சிவப்பு நிறத்திற்கு மாற்றிக் கொள்ளுமாம். இதைப் பார்த்து பெண் துணைகள் வெட்கி, நாணி, வழிக்கு வந்து விடுமாம்.

காதலுக்கு என்றில்லாமல் மனிதனின் இயல்பான ஈர்ப்பே சிவப்பின் பக்கம்தான் அதிகம் இருக்கிறதாம். மற்ற எதையும் விட ரொமான்ஸுக்குத்தான் சிவப்பு மிக மிக உபயோகமாக இருக்கிறதாம்.

அதனால்தான் 'அந்த' ஏரியாக்களுக்கு 'ரெட் லைட்' என்று பெயர் வந்திருக்குமோ...?

லேபிள்கள்: , , , , , ,

22 மார்ச், 2009

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்


மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்


மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது. 

அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல்  அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும்.  எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன். 
 
மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள் செய்யவேண்டுமோ அதை செய்து வருகிறேன். தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. 
 
அ.தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ.வை சரியாக நடத்த தெரியவில்லை. எனக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட விரிசல் பிளவாகி விட்டது. இனி அதை சரி செய்ய முடியாது. போலியாக நடித்து கட்சியில் தொடரவும் எனக்கு விருப்பம் இல்லை. 
 
நான் எந்த முடிவை எடுத்தாலும் என் தொகுதி மக்கள் முன்னிலையில்தான் எடுப்பேன். சித்திரையில் முத்திரை பதிப்போம் என்பார்கள். வருகிற ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை முதல்நாளில் நான் முத்திரை பதிப்பேன். 
 
மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன். நான் ராஜினாமா செய்கிறேன் என்ற விபரத்தையும் மக்களுக்கு தெரிவிப்பேன். நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றார்.

லேபிள்கள்: , , ,

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்

பிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார். 

பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்: ,

அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா.

அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா. முந்தையப் படம் படிக்காதவனை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் அயனையும் வெளியிடுவது இரட்டை சந்தோஷம். விளம்பரத்தில் பின்னிடுவார்களே. ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது.

webdunia photoWD
அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாதி‌ி?

காலே‌ஜ் ்டூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு நேரா சொல்கிற தை‌ரியமான கேரக்டர். இந்த கேரக்ட‌ரில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த், ூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.

பையாவில் நயன்தாராவுக்குப் பதில் நடிக்கிறீர்களே...?

நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறேன்னு சொல்வதைவிட எனக்கு அந்தப் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்ததுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். நயன்தாராவை பையாவுக்காக ஒப்பந்தம் செய்தது பற்றியெல்லாம் எனக்கு தெ‌ரியாது. லிங்குசாமி கேட்டார், நான் ஒத்துக் கொண்டேன். மற்ற விஷயங்கள் எனக்கு தேவையில்லாதது.

தெலுங்கிலும் நடிக்கிறீர்களாமே...?

ஆமாம், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறேன்.

பையாவுக்காக நீங்கள் கார் ஓட்ட கற்றுக் கொண்டது உண்மையா? 

பையாவில் நான் டிரைவிங் பண்ற மாதி‌ி நிறைய சீன்ஸ் இருக்கு. கார் ஓட்ட தெ‌ரிஞ்சா நல்லதுன்னு லிங்குசாமி சொன்னார். கத்துக்க அதிக நாள் இல்லாததால் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து கத்துகிட்டேன்.

படத்தில் சேஸிங் காட்சியில் நடித்தீர்களா?

அப்படி எதுவும் இல்லை. கார் ஓட்டுவதுபோல் சில காட்சிகள் வருகிறது அவ்வளவுதான்.

கண்டேன் காதலை பற்றி சொல்லுங்கள்...

இந்தியில் ஜப் வி மெட் படத்தை பல தடைவை பார்த்திருக்கிறேன். இதில் நடித்ததற்காக க‌ரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் நிறைய கிடைத்தன. இந்தப் படத்தில் நடிக்க மாட்டோமா என பல நாட்கள் கனவு கண்டிருக்கிறேன். கனவு காணுங்கள் பலிக்கும் என்று அப்துல் கலாம்‌ஜிசொன்னதுபோல் என்னுடைய கனவு பலித்திருக்கிறது. ஜப் வி மெட் படம்தான் தமிழில் கண்டேன் காதலை என்ற பெய‌ரில் தயாராகிறது. பரத்ஜோடியாக நடிக்கிறேன். 

க‌ரீனா கபூ‌ரின் ஸ்டைலை பின்பற்றுவீர்களா?

இந்தப் படம் உண்மையிலேயே எனக்கு சவாலானது. க‌ரீனா கபூர் அற்புதமாக நடித்திருப்பார். அதற்காக அவரை காப்பி அடிக்க மாட்டேன். என்னுடைய ஸ்டைலில்தான் நடிப்பேன்.

லேபிள்கள்: ,

கோடை வெப்பத்தை தணிக்க

கோடை காலம் தொடங்கி விட்டது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு வெயில் கடுமையாகக் கொளுத்தித் தீர்க்கும்.

ஆண்டுதோறும் கோடை காலம் வந்தாலும், நாம் கோடையை எதிர்கொள்ளும் வழிமுறைகளை சில நேரங்களில் கடைபிடிக்கத் தவறி விடுகிறோம்.

இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

கோடையை எதிர்கொள்ள இதோ சில எளிய யோசனைகள்:

தண்ணீர் தேவையை விட அதிகமாக அருந்துங்கள். உடலில இருக்கும் தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறும் என்பதால், தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் சோர்வைத் தடுத்து புத்துணர்வை அளிக்கும்.

கண்டிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ ஒருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் தோலில் ஏற்படும் வெயில் பாதிப்பு நீங்கும். 

பகல் நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் பணியில் இருப்பவர்கள், அடிக்கடி ஜூஸ், பழச்சாறு போன்ற குளிர்பானங்களை தேவைக்கேற்ப பருகவும். இதனால் உடல் சோர்வு நீங்கும்.

இளநீர் கண்டிப்பாக அருந்துங்கள். இது உடல் சூட்டைத் தவிர்த்து சிறுநீரை எளிதாக பிரிய வழிவகுக்கும்.

முடிந்தவரை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை இரவில் உண்ணவும். இது ஜீரணத்தை விரைவுபடுத்தி, உடல் சோர்வு மற்றும் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கச் செய்யும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். உடல் சூட்டை அது தணிப்பதுடன், மலச்சிக்கல் வராமலும் இருக்க ஏதுவாகும்.

வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால், கண்டிப்பாக தொப்பி அணிந்து செல்லவும். தலையில் வெயில் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிக தண்ணீர், தண்ணீர்ச் சத்துடைய பழங்க்ளை அதிகளவில் சாப்பிடுங்கள். கோடையைத் தவிர்த்து நலமுடன் இருங்கள்.

லேபிள்கள்:

நான் தனிமையில் இருக்கிறேன். எனவே வாடகைக்கு தங்குமிடம் தேடும் பெண்கள் என்னுடன் தங்கலாம்.


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இப்போது வீட்டு வாடகை நியூயார்க்,லண்டன் வாடகையை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு போய் விட்டது.

அப்படியே கொடுக்கத் தயாராக இருந்தாலும் வீடு கிடைப்பதில்லை.

குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள், வெளியூர் பெண்களுக்குத்தான் வீடு கிடைப்பது பெரும் குதிரைக் கொம்பாகியுள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ஜொள்ளும், லொள்ளுமாக கிளம்பி விட்டனர். எப்படி..?

உங்களுக்கு நாங்கள் வீடு அல்லது அறை தருகிறோம். நீங்கள் எங்களுக்கு வாடகை தரத் தேவையில்லை. உங்களை மட்டும் தந்தால் போதும் என்று கேட்டு விளம்பரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் ஜொள்ளு பார்ட்டிகள்.

பல்வேறு இணையதளங்களில் ஆளுக்குப் பாதி வாடகைக்கு என்ற பெயரில் வரும் விளம்பரங்களும் கூட இதே டைப்பிலானவைதான். அதாவது ஆளுக்கு பாதி வாடகையைத் தருவோம் என்று கூறி இளம் பெண்களை இழுக்கும் ஆண்கள், ஆள் கிடைத்தவுடன், வாடகையே தர வேண்டும், உங்களைத் தந்தால் மட்டும் போதும் என்று கூறுகிறார்களாம்.

இதுபோன்ற விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என சிட்னியில் சிலர் குரல் எழுப்பினர். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் விளம்பர வாசகங்கள் உள்ளதாக இணையதளங்கள் கூறுகின்றனவாம்.

ஆபர்ன் நகரைச் சேர்ந்த ஆதிக் என்ற வாலிபர் கொடுத்துள்ள விளம்பரம் இப்படிப் போகிறது... என்னுடன் அறையை ஷேர் செய்து கொள்ள ஒரு பெண் தேவை. உடனே அணுகவும். 

அதே நபர் சன்டே டெலிகிராப் இதழில் கொடுத்துள்ள விளம்பரத்தில், சிங்கிள் பெட்ரூம் அறையில் என்னுடன் வசிக்க பெண் தேவை. வாடகையை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நான் தனிமையில் இருக்கிறேன். எனவே வாடகைக்கு தங்குமிடம் தேடும் பெண்கள் என்னுடன் தங்கலாம். வாடகைக்குப் பதில் அவர்களுடனான உறவை கேட்கிறேன் என்றும் அந்த நபர் விலாவாரியாக விளக்கியுள்ளார்.

இதெப்படி இருக்கு

லேபிள்கள்: , , ,

இப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை


: அதிமுக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகளை இழுக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். மீண்டும் திருமாவளவனுடன் அவர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக லோக்சபா தேர்தல் படு சூடாக இருக்கிறது. இதற்குக் காரணம், பாமக, தேமுதிக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்காததே.

இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை.

ஆனால் தற்போது பாமக ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அதிமுகவுடன் அணி சேரும் முடிவுக்கு ஒரு வழியாக பாமக வந்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும், தொகுதிகள் குறித்து அதிமுக தரப்புடன் பாமக தரப்பு ரகசியமாக பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தான் மட்டும் அதிமுகவுக்குப் போகாமல் திருமாவளவனையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார் ராமதாஸ். ஆனால் திருமாவோ, திமுக அணியை விட்டு வர முடியாது என கூறி வருகிறார்.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தனக்கும், தனது கட்சியினருக்கும் ஏற்பட்ட அவமானத்தை அவர் ராமதாஸிடம் எடுத்துக் கூறி எப்படி வர முடியும் என கேட்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் ராமதாஸ் விடாமல் திருமாவளவனை சமாதானப்படுத்தி வருகிறாராம். மீண்டும் அவர் திருமாவளவனுடன் பேசியுள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினையில் நாம் ஒன்றாக போராடி வருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் பிரியக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளாராம்.

என்ன பிரச்சினையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு அதிமுக கூட்டணிக்கு வருமாறு அவர் திருமாவளவனை கேட்டுக் கொண்டுள்ளாராம்.

நாளை பாமகவின் முடிவு அறிவிக்கப்படவுள்ளது. அதற்குள் திருமாவளவனின் முடிவை கேட்டுள்ளாராம் ராமதாஸ். ஆனால் பாமகவின் முடிவைப் பார்த்து விட்டு தனது முடிவை அறிவிக்கலாம் என்று நினைக்கிறாராம் திருமாவளவன்.

இப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை

லேபிள்கள்: , , , , ,

19 மார்ச், 2009

ஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'!

பீகாரில் லாலு காட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி விட்டது. இதையடுத்து அங்கு அதிக தொகுதிகளில் போட்டியவுள்ளது.

பீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பிரித்துக் கொள்வதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிககும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதை காங்கிரஸ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. பிரச்சினை தீர்ந்து சுமூகமாக பிரிவினை ஏற்படும். நமக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என காங்கிரஸ் காத்திருந்தது.

ஆனால் லாலு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் காங்கிரஸுக்கு. பாஸ்வானுக்கு 12, நமக்கு 25 என அறிவித்த லாலு, காங்கிரஸுக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார்.

இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது. லாலு பிரசாத் யாதவ் நம்பி்க்கைத் துரோகம் செய்து விட்டார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கண்டனம் தெரிவி்த்தார்.

இந்த நிலையில் பீகாரில் லாலு கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. குறைந்தது 20 தொகுதிகளில் அது போட்டியிடும் எனத் தெரிகிறது.

கடந்த முறை அங்கு 4 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'!

பீகாரில் தங்களுக்கு 3 சீட்களை ஒதுக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்த லாலு பிரசாத் யாதவுக்கு, ஜார்க்கண்ட்டில் பெரிய அல்வாவைக் கொடுத்துள்ளது காங்கிரஸ்.

லாலுவுக்குப் பதிலடி தரும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 தொகுதிகளை மட்டுமே லாலு கட்சிக்கு வழங்கியுள்ள காங்கிரஸ், ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒரு தொகுதியையும் தரவில்லை.

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பங்கிடுவது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியது.

இறுதியில், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், மோர்ச்சா 5 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. லாலு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது. பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

இதனால் அந்த கட்சி தனித்து போட்டியிடப்போடவதாக அறிவித்துள்ளது.

லேபிள்கள்: , , , ,

16 மார்ச், 2009

நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்

நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்

நடிகரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராதாரவி இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1/2 மணி நேரம் நீடித்தது.

 சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம், அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

லேபிள்கள்: , ,

காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்

வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும்.

சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும்.

அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


பாச மலர் - என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்.

உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.

முதல் மரியாதை - ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள்.

நாயகன் - நீங்க நல்லவரா? கெட்டவரா?

மணிரத்னம் பட வசனங்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அதனாலயே, அதிகம் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும். சின்னி ஜெயந்த், விவேக் இதை படங்களில் காமெடி செய்தார்கள்.

அஞ்சலி - அஞ்சலி ஏந்துமா

இந்த வசனத்தால் அந்த சோக காட்சியை பல ஷோக்களில் காமெடி ஆக்கினார்கள்.

தேவர் மகன் - ஒரு பாட்டு பட்றி

யாரையாவது பாட்டு பாட சொல்லும்போது, கிண்டலாக இப்படித்தான் சொல்லுவார்கள். கவுண்டமணி ஏதோவொரு படத்தில் நக்கல் செய்திருப்பார்.

நாட்டமை - நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லு

கல்லூரி மாணவர்களால் பல இடங்களில் ரீ-மிக்ஸ் செய்யப்படும் வசனம். தியேட்டரில் படம் போடலையா? ஆபரேட்டர், படத்தை போடு. கரண்டு போச்சா? லைட்டை போடு. இப்படி.

ரெட் - அது...

ஹி... ஹி... இந்த ரெண்டு எழுத்து சாதாரணமான வார்த்தை, இவ்வளவு ஸ்பெஷல் ட்ரிட்மெண்ட் கொடுக்கும்ன்னு யாரும் நினைச்சு இருக்க மாட்டாங்க.

ரமணா - தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு

விவேக்கால் பல படங்களில் கிண்டல் செய்யப்பட்ட வசனம். மக்களும் அவரவர் வசதிக்கேற்ப வார்த்தைகளை போட்டு பிரபலமான வசனம்.

அந்நியன் - அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுனா தப்பா?

சுஜாதாவால் சுவையாக கருத்து சொல்லப்பட்ட வசனம். படம் வெளிவந்த பிறகு டரியல் செய்யப்பட்டது.

சந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்...

பஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம்? எல்லா புகழும் பிரபுக்கே! பிளஸ் வெங்கட் பிரபு.


இந்த வசனங்களை இப்ப படங்களில் கேட்கும்போது காட்சியை மீறி சிரிக்க வைத்து விடுகிறது. 

உங்களுக்கு தோணுறதையும் சொல்லுங்க..

 

நன்றி்: 'குமரன் குடில் வலைப்பதிவு

லேபிள்கள்: , ,