ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

21 நவம்பர், 2008

நயன் கேட்ட இரண்டு கோடி மிரண்டு பின்வாங்கிய ஹீரோ

நயன் கேட்ட இரண்டு கோடி
மிரண்டு பின்வாங்கிய ஹீரோ

இதென்ன மருதமலைக்கு வந்த சோதனை? மருதமலை உள்ளிட்ட எத்தனையோ Nayantharaவெற்றிப்படங்களில் நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. திருவண்ணாமலைக்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேளுங்களேன் என்றாராம்.

விரும்பிய சீட்டை எடுப்பதுதானே குருவியின் வேலை? அர்ஜுனின் சொல்லை சிரமேற்கொண்டு செயல்படுத்த நினைத்த தொண்டரடிப் பொடிகள், நயன்தாராவையே நேரடியாக அப்ரோச் செய்தார்களாம். விஷயத்தை சொன்னவர்களிடம், நயன்தாரா கேட்ட தொகைதான் கிறுகிறு...

இரண்டு கோடி கொடுத்தால் நடிக்க தயார் என்றாராம். லிங்குசாமியின் படம் தாமதம் ஆவதால், மும்பைக்கே போய் ரெஸ்டில் இருக்கும் நயன், மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடுவது என்ற வெறியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அர்ஜுனுடன் ஜோடியாக நடிக்க அழைத்தால் ஒப்புக் கொள்வாரா? அதனால்தான் இப்படி ஒரு சம்பளத்தை கேட்டு மிரட்டியிருக்கிறார்.

இப்படி கேட்டதற்கு பேசாமல் நடிக்க விருப்பம் இல்லை என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாமே என்று முணுமுணுக்கிறது அர்ஜுன் தரப்பு. ஆக்ஷனுக்கே ஆக்ஷனா?

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு