ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

21 நவம்பர், 2008

சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் சூறை: 14 மாணவர்கள் கைது காவல்துறைத் தனிப் படை யினர் விசாரணை


சென்னை அம் பேத்கர் சட்டக் கல்லூரியின் முதல்வர் அறைக்குள் நுழைந்து அடித்து நொறுக்கி பாழ்படுத் திய வழக்கில் 14 மாணவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இச்சட்டக் கல்லூரியில் கடந்த 12 ஆம் தேதி மாணவர் களிடையே பயங்கரக் குழு மோதல் ஏற்பட்டது. 13 ஆம் தேதி காலையில் ஒரு பிரிவு மாணவர்கள் கல்லூரி முதல் வர் அறைக்குச் சென்று அங்கி ருந்த பொருள்களை அடித்து நொறுக்கி பாழ்படுத்தினர். இது தொடர்பாக எஸ்பிள னேடு காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி அலுவலகத் தலைமைக் கண்காணிப்பாளர் முருகதாசு முறையீடு அளித் தார். இதன்பேரில் ஆய்வாளர் ஜெயக்கொடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 14 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைதான 14 பேரிடமும் காவல்துறைத் தனிப் படை யினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஜார்ஜ் டவுன் நீதிமன்றத் தில் நேர் நிறுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.


கல்விக்கடன்

வங்கிகளில் கல்விக்காக கடன் பெறுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் இருப்பது தென் மாநிலங்கள்தானாம். மொத்தக் கடனில் 70 விழுக்காடு பெறுபவர்கள் - தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், கருநாடகா மாநிலங்கள் தானாம். பிகாரும் கொஞ்சம் முன்னேறி வருகிறதாம்! பிச்சை புகினும் கற்கை நன்றே!

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு