29 வயது கன் னியாஸ்திரி ஒருவரை பாதிரி யார் கண்முன்னரே வன்கலவி செய்தனர் கண்ணீர் மல்க கன்னி யாஸ்திரி வாக்குமூலம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட
ஒரிசா கன்னியாஸ்திரி வாக்குமூலம்

ஒரிசா மதக் கலவரத்தின்போது தன்னை வன்கலவி செய்த கும்பலிடமி ருந்து ஓர் பிரமுகரே தன்னைக் காப்பாற்றினார் என்று பாதிக் கப்பட்ட கன்னியாஸ்திரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒரி சாவில் பந்த் நடத்தப்பட்டது. அப்போது பஜ்ரங்தளம் மற் றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளைச் சேர்ந்தவர் கள் கிறித்துவ மக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தினர். கிறித்துவ தேவாலயங்களைச் சேதப்படுத்தினர். பாதிரியார் கள், கன்னியாஸ்திரிகளையும் தாக்கினர்.

கந்தமாலில் ஒரு கிறித்துவ தேவாலயத்துக்குள் புகுந்த மதவெறிக் கும்பல் 29 வயது கன் னியாஸ்திரி ஒருவரை பாதிரி யார் கண்முன்னரே வன்கலவி செய்தனர். இதன் பின் அக் கன்னியாஸ்திரி பாதுகாப்பு கருதி டில்லி சென்றுவிட்டார். உச்சநீதிமன்றத்திலும் இதுபற் றிய வழக்கு நடந்தது. மாநிலக் காவல்துறையினரின் விசா ரணைக்கு ஒத்துழைக்குமாறு உச்சநீதிமன்றம் அவருக்கு ஆலோசனை கூறியது.

கந்தமால் காவல்துறையினர் டில்லி சென்று கன்னியாஸ்திரி யிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் துறையினரிடம் சுமார் 3 மணி நேரம் கண்ணீர் மல்க கன்னி யாஸ்திரி வாக்குமூலம் அளித்தார்.

மதவெறிக் கும்பல் தன்னை வன்கலவி செய்து ஓய்ந்த பின்னர், மேலும் 2 பேர் வந்து தன்னை வன்கலவி செய்ய முயன்றதாகவும், அப்போது நல்வாய்ப்பாக ஓர் இந்து பிரமுகர் அங்கு வந்து அந்தக் கும்பலிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதாகவும் கன்னி யாஸ்திரி கூறியுள்ளார்.

தன்னை பாலியல் வன் கொடுமை செய்தவர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று கூறிய அவர், தான் சுயநினைவு இல்லாமல் மயங்கி விட்டதால் கடைசி யாக தன்னை பாலியல் வன் கொடுமை செய்ய முயன்ற 2 நபர்களை அடையாளம் காட்ட இயலாது என்று தெரிவித் துள்ளார். இந்த மதக் கலவரத்தின் போது கிறித்துவ ஆதரவற் றோர் இல்லத்தில் பகுதி நேர ஊழியராகப் பணியாற்ற வந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணையும், கிறித் துவப் பெண் எனத் தவறாகக் கருதி மதவெறிக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, பின்னர் தீ வைத்து எரித் துக் கொன்றது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை