ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

30 நவம்பர், 2008

கொக்கரக்கோ நாயகன் படத்தின் ரிசல்ட்டை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

கொக்கரக்கோ சத்தத்தில் கோடம்பாக்கத்தையே மிரட்டிய இயக்குனரும், அப்படத்தில் நடித்த ஹீரோவும் மேற்படி படத்தின் ரிசல்ட்டை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். போட்ட பணத்தில் பாதியை கூட வசூல் செய்யவில்லையாம் கொக்கரக்கோ! படத்தை நல்ல விலைக்கு தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், இன்னும் கொஞ்ச நாளைக்கு பழைய தொழிலான விநியோகத்தையே பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இதற்கிடையில், கொக்கரக்கோ நாயகன் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், இப்போது வேண்டாம். சிக்ஸ் முகம் வந்ததும் அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறாராம்.

கொக்கரக்கோவுக்கு முன்பே கொண்டு வந்த அட்வான்சை வாங்கியிருக்கலாம். அப்போதும் இந்த படம் வரட்டும். வந்தபின் அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார். இப்போது சிக்ஸ் முகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ரிசல்ட்டாவது நல்லபடியாக அமையட்டும் என்கிறார்கள் கொக்கரக்கோவை வைத்து படம் இயக்க விரும்பும் தயாரிப்பாளர்கள்.

இதற்கிடையில் ஆணானப்பட்ட உச்ச நடிகர், உலக நடிகர், புதுக்கட்சி நடிகர் என்று எல்லாரையும் சோதனைக்குள்ளாக்கிய டைரக்டரை நம்பி இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறோமே என்று கொக்கரக்கோவே குழம்பிப் போயிருக்கிறாராம். நல்லாயிருக்கு போங்க..

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு