ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

22 நவம்பர், 2008

இலங்கை அரசின் தலையீடு இன்றி உதவிப் பொருள்களை வழங்கும் பொறுப்பை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்றது


இலங்கை அரசின் தலையீடு இன்றி

உதவிப் பொருள்களை வழங்கும் பொறுப்பை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்றது

- ஈழத் தமிழர் களுக்காக தமிழக அரசின் சார் பில் அனுப்பி வைக்கப்பட்ட 1680 டன் உதவிப் பொருள்கள், செஞ்சிலுவைச் சங்கநிருவாகி களிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

கொழும்பில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் இப் பொருள்களை இலங்கைக் கான செஞ்சிலுவைச் சங்க நிருவாகி பால்கேஸ்டல்லா விடம் இலங்கைக்கான இந்திய தூதர் அலோப் பிரசாத் ஒப் படைத்தார். இந்த உதவிப் பொருள்கள் போரால் பாதிக் கப்பட்டு இலங்கையில் ஏதிலி களாக வாழும் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித் தார். உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொண்ட பால்கேஸ் டல்லா, தங்கள் அமைப்பு மீது இந்தியா கொண்டுள்ள நம்பிக் கைக்கு நன்றி தெரிவித்தார். தமிழக அரசு அனுப்பி வைத்த உதவிப் பொருள்கள் அனைத் தும் போரால் பாதிக்கப்பட் டுள்ள பகுதிகளில் வாழும் தமிழ் ஏதிலிகளுக்கு செஞ் சிலுவைச் சங்கத்தின் களக் குழுக்கள் மூலமாகவே வழங்கப்படும் என்றும், இதற்கு கிளி நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அரசு முகவர்கள் உதவி செய்வார்கள் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை அரசின் இன்றியமையாச் சேவைகள் துறையின் தலைமை ஆணையர் திவரத்தினே கலந்து கொண்டார். தமிழக அரசும், மத்திய அரசும் அனுப்பி வைக் கும் உதவிப் பொருள்கள் அனைத்தும் இலங்கை இன்றி யமையாச் சேவைத் துறை மூலமாகவே வழங்கப்பட வேண்டும் என்று இவர் கடந்த சில வாரங்களுக்குமுன் கூறி யிருந்தார். இச் செய்தியை அறிந்தவுடனே தமிழக முதல் வர் கலைஞர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு, உதவிப் பொருள்கள் அனைத்தும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகவே வழங் கப்பட வேண்டும் என வலி யுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அனைத்துப் பொருள்களும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், செஞ்சிலு வைச் சங்கம் மூலம் வழங்கப் படுவதை எற்றுக் கொள்ள முடியாது என்றும், இலங்கை அரசின் இன்றியமையாத்துறை மூலமாக தமிழர்களுக்கு வழங் குவதாக இருந்தால் மட்டுமே அப்பொருள்களை வடக்கு இலங்கைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று இலங்கைப் போர்ப் படை கட்டுப்பாடு விதித்ததாக நேற்று செய்திகள் வெளியாயின. ஆனால், உதவிப் பொருள் கள் அனைத்தும் நேரடியாக வழங்கப்படும் என்று செஞ் சிலுவைச் சங்கம் அறிவித்திருக் கிறது. அதற்கு, விழாவில் பங் கேற்ற இலங்கை அரசின் இன்றியமையாச் சேவைத்துறை ஆணையர் திவரத்தினேவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

லேபிள்கள்: , , , , ,

1 கருத்துகள்:

Blogger ஜுர்கேன் க்ருகேர் கூறியது…

கிரேட் நியூஸ்

22 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:03  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு