ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

27 நவம்பர், 2008

சண்டை நீடித்தால் என்ன நடக்கும்?கிளிநொச்சி இன்று வீழ்கிறதா, நாளை வீழ்கிறதா என்பதல்ல கேள்வி


இரண்டே கி.மீ. தூரத்தில் உள்ள கிளிநொச்சி மிகவும்கடினமான பாதை; உலக உருண்டையின் வேறு பக்கம்வழியாகச் சுற்றி வந்தால் சுலபமாகலாம். சிறீலங்காவின்ராணுவம் இந்த ஆண்டின் இறுதி யில் அந்நகரத்தைப்பிடித்து விட்டாலும் கூட, யுத்தம் முடிவடையாது; பாதியுத்தம் கூட முடிந்ததாகக் கருதப்பட முடியாது. வெற்றிஎனக் கூக்குரலிடு வது முட்டாள்தனமானது; அரசுக்கும்போர்ப்படை யினர்க்கும் இது தெரியும்! இருந்தாலும் ஏன் செய்கிறார்கள்? ஒருவேளை, கர்வமாக இருக்கலாம், அல்லது திசை திருப்புவதாக இருக்கலாம், ஆனால் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு வேறுவழியில்லை!

லஞ்ச லாவண்யம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு! பொருளாதாரமோ சீரழிந்தநிலையில்! அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகம் அளவு கடந்து! அகிலஉலகிலும் நாட்டின் பெயர் நாறிக் கொண்டுள்ள நிலை! இந்நிலையில் அந்தஅரசாங்கம் வேறென்ன செய்ய முடியும், வெற்றி என்று கூவுவதைத் தவிர? வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிதைந்த சடலம் ராஜபக்சேவின் காலடியில், புலிகள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில், நாடு விடுதலை அடைந்தது! என்பது அவர்களுக்கு தேவைப்படுகிறது - அரசியலில் செல்வாக்குகாலாவதியான நிலையில்! ஆகவே சிங்கள மக்களுக்கு அவர்கள் சீக்கிரமாகஇறுதி வெற்றியைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயம்! இப்போது இந்தச்சேதியைத் தராமல் ஏமாற்றி விட்டால்... அரசின் பிடிப்பு போயே போய்விடும். ஆறு மாதத்திலோ 12 மாதத்திலோ வெற்றி என்று சபதம் கூறி விட்டால் மக்கள்அமைதி அடைவார்களா?

சண்டை நீடித்தால் என்ன நடக்கும்?

விரைவில் விடுதலைப்புலிகள் தோற்றுப்போய் விடுவார்கள் என்று நான் கூடநினைத்தது உண்டு. தி ஹிண்டு ஏட்டிலோ, அல்ஜாஜிரா தொலைக் காட்சியிலோ, ராணுவ நிபுணர்கள் எழுதிவரும் செய்திச் சுருக்கங்களிலோ பத்திரிகைச் செய்திகளிலோ நான் படிக்கும் செய்திகளால் இம்முடிவுக்கு நான் வந்திருக்கலாம். அவையெல்லாம் வெறும் குப்பைகள், மீண்டும் ஒரு முறை செய்திகளைஆய்ந்திட்டால் இப்படித்தான் இருக்கும்: புலி காயப்பட்டுள்ளது, ஆனாலும்போர்க்குணம் மிகுந்து உள்ளது. சண்டை இன்னும் ஓயவில்லை, அடுத்தஆண்டில், நிலத்தில், கடலில், வானில் சண்டை மீதி உள்ளது.

வழமையான போரைக் கைவிட்டு கொரில்லாப் போருக்குத் தள்ளப்படும்நிலைகளில் புலிகள் இல்லை. கிளிநொச்சி இன்று வீழ்கிறதா, நாளை வீழ்கிறதாஎன்பதல்ல கேள்வி; அதைப் பிடிக்க முடி யாமல் உள்ள நிலை சண்டையைஅடுத்த ஆண் டுக்கும் நீட்டிக்கும், இனவெறி கொண்டவர்களின் இரத்தப் பசி தீரும்வரை அரசு இப்படி எதையாவது செய்து கொண்டே இருக்கும்.

பூநெரி, மான்குளம் பற்றிப் பேசிக் கொண்டு எவ்வளவு நாள்களுக்கு நிழல்யுத்தத்தை அரசு நடத்தும்? பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும் அரசாட்சித்துறைகளில் வேறு சாதனைகள் காட்ட முடியாத நிலையில், புலிகளுடனானபோரில் அவர்களை முழுதும் அழிக்க முடியாமல் பெறப்படும் சிறு சிறுவெற்றிகள் ஏமாற்றம் அளிப்பதாகவே கருதப்படும்.

இதுபோன்ற ஏமாற்றங்களை தந்திர உபாயங் களால் அரசு மறைத்து மக்களின்கோபத்தைத் தணிக்க முடியாது. மேலும் தமிழ்நாட்டின் எழுச்சி - புலிகளுக்குஅல்ல, தமிழர்க்கு ஆதரவு எனக் கூறப்பட்டாலும் அது கொழும்புக்குச்சங்கடம்தான். கொழும்பைக் காப்பாற்ற டில்லி முயன்றாலும், காங்கிரசுக்குத்தோல்வியைத் தந்தே தீரும் எனும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்படும் என்பதால்அதைக்கூட அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது... என்பதுதான் யதார்த்த நிலை

லேபிள்கள்: , , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு