ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள்


ஈழத் தமிழர் போராட்டம் குறித்து
'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள்

'யுத்த சரணம்' எனும் தலைப்பில் திரு பா.ராகவன்என்பவரால் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டு வரும்தொடர் தப்புத் தவறுமான தகவல்களை உள்ளடக்கமாகக்கொண்டு இருக்கிறது என்று ஆலமரம் என்ற இணையதளத்தில் வெளிவந்துள்ள இக்கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது படியுங்கள்.

பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியி ருக்கின்ற "யுத்தம்சரணம்" என்ற தொடர் பெருத்த ஏமாற்றத்தை யும், எரிச்சலையும்ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டுபாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளன.

இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பானசூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள்குறித்து தான் இந்தத் தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனைபிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக் குழுக்களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலையீடு போன்றவை குறித்துஎழுதும் பொழுது இன்னும் எத்தனை குழப்பங்களை முன்வைக்கப் போகிறதோ? என்ற அச்சமே ஏற்படுகிறது.

பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தான் தற்பொழுதுநடைபெறும் போருக்கான முக்கிய காரணம் என்பதான கருத்தாக்கத்தை இந்தத்தொடரின் முதல் பாகம் வாசகர் மனதில் விதைக்கிறது. இலங்கைப் பிரச்சனைகுறித்து பெரிய புரிதல் இல்லாத சாமானிய வாசகர்கள் இதனை மனதில்கொண்டே அடுத்து வருகின்ற பாகங்களை வாசிக்கப்போகிறார் கள். பொன்சேகாமீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் தானா இந்தப் போருக்கான முக்கியகாரணம்? போருக்கான சூழல் ஏற்பட்ட பிறகு, இனி நிச்சயமாக போர் தான் என்றநிலை ஏற்பட்ட பிறகே பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதேஉண்மையான நிலை.

இது குறித்த நண்பர் திருவின் பதிவு - யுத்தம் சரணம் தொடரின் எழுத்து அரசியல்!

************

இரண்டாம் பாகத்தில் வரும் சில வரிகள்...

அய்ரோப்பிய யூனியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி, அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த அய்ரோப்பிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க், ஃபின் லாந்து, நார்வே ஆகிய தேசங்களை `யூனியனிலிருந்துவிலகுங்கள்' என்று விடுதலைப்புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ம்ஹும். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல்அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவ தாகச் சொல்லிவிட்டன.

இந்த வரிகளைப் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அய்ரோப்பியயூனியனில் இருந்து ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே போன்றநாடுகளை விலக புலிகள் கேட்டு கொண்டார்களா? பா.ராகவன் எங்கேஇருக்கிறீர்கள்? புலிகள் என்ன கேட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நார்வே அய்ரோப்பிய யூனியனில் இல்லை என்பது கூடவா உங்களுக்குதெரியாது? அய்ரோப்பியாவில் இருக்கின்ற அனைத்து நாடுகளும் அய்ரோப்பியயூனியனில் இல்லை.

என்ன நடந்தது என்பதை நான் ஏற்கனவே என்னுடைய "சதுரங்க ஆட்டத்தில்தமிழீழம்" என்ற தொடரில் எழுதியுள் ளேன். மறுபடியும் இங்கே குறிப்பிடுவதில்ஒன்றும் பிரச்சினை இல்லை. பா.ராகவன் குறிப்பிடுவது போல ஸ்வீடன், டென்மார்க் போன்றவை அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல. அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் என பொதுவாக எதனைக் குறிப்பிடுகிறார்என்றும் தெரியவில்லை. ஊடி-உயசைள என்று சொல்லப்படும்கூட்டுத்தலைமையை குறிப்பிடுகிறாரா எனத் தெரியவில்லை. அதில் நார்வே, ஜப்பான், அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன் போன்றவை உள்ளன. ஸ்வீடன், டென்மார்க் போன்றவை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். அய்ரோப்பிய யூனியன் தடைக்கு பிறகு அய்ரோப்பிய யூனியனை சேர்ந்தபிரதிநிதிகள் இந்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருக்கக் கூடாது என்றுதான் புலிகள் கூறினார்கள். அய்ரோப்பிய யூனியனை விட்டே விலக வேண்டும்என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்டால் பலர் சிரிப்பார்கள்.

இது மட்டுமா? இன்னும் பிழைகள் உள்ளன...

மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம்வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில்ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின்அத்தனை தளங்களை யும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப்போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம், பத்திரமாகஇருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?

அடுத்து சில வரிகள் யாழ்ப்பாணம் குறித்த குழப்பத்தை இன்னும் அதிகரிக்கிறது.

பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவானகோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.

யாழ்ப்பாணம் புலிகள் கைகளில் உள்ளதா? இராணுவத்தின் கைகளில் உள்ளதா? யாழ்ப்பாணம் புலிகள் வசம் இல்லை என்ற உண்மையை அறியாமல் பா.ராகவன்இருக்க முடியாது என நம்புகிறேன். ஆனால் இலங்கை குறித்து அதிகம் தெரியாதசாமானிய வாசகர்கள் இந்த வரிகள் குறித்து படித்தால் என்ன நினைப்பார்கள்?

இங்கு மற்றொரு தகவல் பிழை உள்ளது. பூநகரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்குநிலம் வழியான பாதை இல்லை. படகுகள் மூலமாகவே செல்ல முடியும். சாலைவழியாக செல்ல வேண்டும் என்றால் ஆனையிறவு தான் வழி. 9 நெடுஞ்சாலைஆனையிறவு வழியாகவே யாழ்ப்பாணத்தை வன்னியுடன் இணைக்கிறது. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல் என்பதுமட்டும் அல்ல, யாழ்ப்பாணத்தை ஏன் சிறீலங்கா இராணுவம் பிடிக்க வேண்டும்? அது தான் அவர்கள் வசம் ஏற்கனவே உள்ளதே. அடுத்து...

தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூடநகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள். ஐளுழுஹ என்றஒன்றை புலிகள் சமர்ப்பித்தார்களே? அது என்ன? அது எதற்காக? அதை வைத்துஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? ஏன் நடக்கவில்லை? யார் காரணம்?

இந்தத் தொடரில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையில்சரியானது தானா? என்ற கேள்வி எனக்கு உள்ளது. சிறீலங்கா குறித்துஉண்மையில் அறிந்தவர்கள் இது சரியா? அல்லது தவறா? என்பதை கூறட்டும்.

தொடரில் இப்படியான ஒரு வரி வருகிறது.

அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம்மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்குஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளைஒழித்துவிடலாம். சிம்பிள்.

இது எந்தளவுக்கு உண்மையானது? எனக்கு தெரிந்த வரையில் ஜனாதிபதிராஜபஷேவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒன்றாகஇராணுவத்தில் இருந்தவர்கள். அவர்கள் ஒன்றாக இராணுவத்தில் இருந்தகாரணத்தால் நெருங்கிய நண்பர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் (Assumption, not fact), இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததால் பொன்சேகாவும், அதிபர்ராஜபக்சேவும் நண்பர்களா? அதுவும் "ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்டநட்புறவு அவர்களு டையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரேமாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்"?

இது உண்மையா? என்பதை சிறீலங்கா குறித்து தெரிந்தவர்கள் கூறட்டும். எனக்கும் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளது.

ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல் படி...

ராஜபக்க்ஷ, பொன்சேகா இருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர்கள்என்பது தவிர, எதுவுமே பொதுவில்லை. ஒருவர் படித்தது, ஆனந்தா கல்லூரி; மற்றையவர் நாளந்தா கல்லூரி. இரண்டுமே கொழும்புவட்டாரத்திலேஆளுக்காள் எதிரும் புதிருமான சிங்களப்போட்டிக்கல்லூரிகள்.

வரலாற்றை சுவரசியமாக, க்ரைம் நாவல் போன்று எழுத முனைந்தால்இப்படியான விபரீதங்கள் தான் விளையும். இன்னும் என்ன என்னவரப்போகிறதோ?

இந்தத் தொடர் ஒரு வியாபாரம் என்பதே என்னுடைய கருத்து. ஒரு பிரச்சினைதமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும்இந்திய வெகுஜன ஊடக, எழுத்து வியாபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர். அதனை சுவாரசியமாக க்ரைம் நாவல் போன்று எழுதி, பரபரப்பாக வாசகர்களிடம்கொண்டு சென்று பணம் சேர்க்க நடக்கும் இந்த வியபாரம் எரிச்சலையேஏற்படுத்துகிறது.

யுத்தம் சரணம் தொடரின் எழுத்து அரசியல்! கிழக்கு பதிப்பகத்தின் பா.ராகவன்குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் யுத்தம் சரணம் தொடரை குமுதத்தில்துவங்கியுள்ளார். எல்லா பக்கமும் இந்தியா போன்ற உலக நாடுகளின்ஆதரவுடன் ராணுவம் சூழ்ந்து ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்கும் போர்ச் சூழலில்அவதிப்படுகிற நேரத்தில் குமுதத்தில் பா.ராகவனின் தொடர் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்குவது இயல்பு. இத்தொடரின் முதல் பகுதியைபடிக்கும் போதே வாசகர்களுக்கு ஈழத்தின் அரசியல் பற்றிய நேர்மையானபார்வை கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறது. யுத்தம் சரணம் தொடரின் முதல்பகுதி திகில், பரபரப்பு, விறுவிறுப்பு என்று வார்த்தை அலங்காரங்களால் பாக்கட்நாவல்கள் படிப்பது போன்று வாசகனை பரபரப்பாக்க உதவும். அதற்காக நிச்சயம்எழுத் தாளரின் மொழி நடையை பாராட்டத்தான் வேண்டும். தொடரின் துவக்கம்மனித வெடிகுண்டுத் தாக்குதலில் சிதைந்த வாகனம் ஒன்றைகாட்சிப்படுத்துவதிலிருந்து துவங்குகிறது. யுத்தம் சரணம், முதல்பகுதியிலிருந்து.

சிதைந்த வாகனத்துக்கும், தாக்கப்பட்ட ராணுவத் தளபதிக்கும் எவ்வளவுவலித்திருக்கும்? ராஜபக்சேவும், சரத்பொன்சேகாவும், கோத்தபாய ராஜபக்சேவும்வன்னியிலும், கிளிநொச்சியிலும் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்துகுழந்தைகள் முதல் முதியவர் வரையில் கொல்வதற்கு சரத்பொன்சேகா மீதானதாக்குதலை பிரதான ஏதுவாக்குகிறார் ராகவன். இலங்கையின் சுதந்திரத்திற்குமுன்னரே துவங்கி விட்ட தமிழர்களின் போராட் டத்தை இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலில் துவங்குவது கதையாசிரியனின்அரசியலை உடைக்கிறது. எங்கிருந்து கதை சொல்லத் துவங்குவது என்பதுஎழுத்தாளனின் சுதந்திரம். ஆனால் ஈழத்தின் இனப்பிரச்சனையை சொல்லத்துவங்கும் கதையாசிரியர் 2002 நார்வே தலைமையி லான சமாதானப்பேச்சுவார்த்தைகளின் போது முதலில் ஆயுதங்களை தூக்கியது புலிகள் என்றுகட்டமைக்க முனைவது பின்வரும் பத்திகளில் பல்லிழிக்கிறது. 2002-ல்இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம்அறிவிக்கப்பட்டது. 2004 ஜூலைக்குப் பிறகு நார்வே சமாதானக் குழுவின்நடவடிக்கைகள் சூடு பிடிக்க, இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரியசம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை. இதுதான் - இது மட்டும்தான். போதாதா?

நார்வே தலைமையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்தசூழலில், அமெரிக்காவும், ஜப்பானும் இந்தப் பேச்சுக்களில் நுழைந்ததும், இந்தியாமறைமுகமாக இலங் கையை இயக்கி விடுதலைப்புலிகள் இயக்கத்தைப்பிளவுபடுத்தி, கருணாவை பயன்படுத்தி தொடர்ந்த படுகொலைகளை நாமும்வசதியாக மறந்துவிடலாம். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்புதிய இடங்களில் இலங்கை இராணுவம் முகாம்களை போர்நிறுத்தஉடன்படிக்கைக்கு எதிராக உரு வாக்கியதையும் மறந்துவிடுவோம். சுனாமிமீள்கட்டமைப்பிற் கான இடைக்கால அதிகார சபை ஒன்று பேசப்பட்டு வந்தநிலையில் இலங்கை அரசு நடத்திய இப்படுகொலைகளையும் வாசித்துமறந்துவிடுவோம். 2002 போர் நிறுத்தத்திற்கு பின்னர் சரத் பொன்சேகா மீதானதாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம்ஏதும் அங்கே நடக்கவில்லை என்கிறார் பா.ராகவன். ஈழம் பற்றிய அறிவில்உண்மையான இவ்வளவு அப்பாவியா இவர்? சரத் பொன்சேகா தாக்கப்பட்ட நாள்ஏப்பிரல் 2006. ஆனால் அதற்கும் முன்னர் இலங்கை இராணுவம் பல தமிழ்அரசியல் தலைவர்களை, போராளி தலைவர்களை, ஊடகவியலாளர்களை, பொது மக்களை படுகொலை செய்தது. ஆனால் அத்தனை படுகொலைகளையையும் கதை சொல்லும் நடையில் மறைத்து புலிகளும், தமிழர்தரப்பையும் கொலைகாரர்களாக, வன்முறையாளர்களாக சித்தரிக்கும்கேவலமான, நேர்மையற்ற அரசியலை தொடரின் முதல் பகுதியில் துவங்கிவைத்திருக்கிறார் பா.ராகவன். பா.ராகவனுக்கு இல்லாவிட்டாலும், வாசகர்களுக்காக இடைப்பட்ட காலத்தில் இலங்கை அரசு செய்த படுகொலைகள்சிலவற்றை சொல்வது நமது கடமை. 25

மட்டு - அம்பாறையில் புலிகளின் அரசியல் பிரிவின் தலை வராக செயலாற்றியகவுசல்யன் அவர்களையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருஅரியநாயகம் மற்றும் சில புலிகளையும் கிளிநொச்சியில் சுனாமி புனரமைப்புபற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணிவெடி வைத்து 8 பெப்ருவரி 2005 இரவு 7.15 மணியளவில் கொன்றது இலங்கை இராணுவஉடையணிந்த சிப்பாய்கள். 2005 டிசம்பர் திங்கள் 25ம் நாள் நள்ளிரவில்மட்டகளப்பில் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமைப்போராளி) புனித மரியாள் தேவாலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்றவழிபாட்டில் நற்கருணை பெற்று திரும்பும் போது, வழிபாட்டில் வைத்துமனைவிக்கு அருகில் வைத்து இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், கருணா, .பி.டி.பி குழுக் களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பாதகப்படுகொலை நடந்த போது தேவாலயம் முழுவதும் பீதியும் பதட்டமும்நிறைந்திருந்தன. ஜோசப் பரராஜசிங்கம் ஆயுதம் தூக்கியவரா? அது யுத்தகாலமா? ஏன் இந்தப் படுகொலை? தமிழர்களின் உரிமைகளுக்காகதேசங்களெல்லாம் பறந்தும், இலங்கை நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தஅமைதியானவரைக் கொன்று அவரது குரலை அடக்கியது இலங்கை அரசு. ராஜபக்ஷேவின் அன்றைய தொலைக்காட்சி உரையில் வேறெது குறித்தும் அவர்பேசவில்லை. இதுதான் - இது ஒன்றுதான். கண் துடைப்புப் போர் நிறுத்தம் பற்றியஎரிச்சல் கலந்த ஏமாற்றம். `இனி நான் சும்மா இருக்க மாட்டேன்' என்கிறஎச்சரிக்கை. அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்றஅமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச்சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும்இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்றுமுப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பன போன்ற சிலபுள்ளிவிவரங்களையும் சொன்னார்.

யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மக்களும் ராணுவத்தினரும்மிரண்டிருந்தார்கள். ராணுவத் தலைமை யகத்துக்கு உள்ளேயே, ராணுவத் தளபதிமீது ஒரு தாக்குதல். எப்படி இது சாத்தியம்?

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான விடுதலைப் புலிகள் கதையும்திருப்பெரும்புதூரில் இராஜீவ் கொலலயிலிருந்து துவங்குகிறது. செய்தியைஎங்கிருந்து சொல்லத் துவங்குவது என்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. காங்கிரஸ்காரர்களுக்கும், தமிழின எதிர்ப்பாளர்களுக்கும் தமிழர்இனப்பிரச்சனையின் துவக்கம் ராஜீவ் மரணத்தில் துவங்கி அங்கேயே முடிந்துவிடுகிறது. காங்கிரஸ்காரர்களது ஈழப் பார்வையும், தற்போதைய ஈழப் போர்நிலவரத்திற்கு சரத் பொன்சேகா மீதான தாக்குதலை முன்னிறுத்தும் பா.ராகவன்எழுத்தரசியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றன. ஈழத்தமிழர்களின்போராட்டத்தை வன்முறை, படுகொலைகள், சகோதர யுத்தம் என்றுகாட்சிப்படுத்தி, அரசியல் அதிகாரத்திற்கான போராட்ட நியாயங்களை மறைக்கும்இவ்வகை எழுத்துக்களின் அரசியல் இனங்காணப் படவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை