ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

24 நவம்பர், 2008

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ள பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


வாஷிங்டன் : அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியைசமாளிக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்கள்உருவாக்கப்படும் என்று, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ள பராக்ஒபாமா அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நேற்று வாஷிங்டன்னில் வெளியிட்டுள்ள குடியரசு கட்சியின் வாராந்திர அறிக்கையில் ஒபாமா கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரம்மீண்டும் சரியாமல் இருப்பதற்கு, விரைவும், துணிவும் மிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்களை உருவாக்குவதற்கான திட்டங்களைதயாரிப்பதற்கு எனது ஆலோசகரிடம் தெரிவித்துள்ளேன். இந்த திட்டம் ஒரேயடியாக செயல்படுத்த முடியாது. இதுஒரு நீண்ட கால திட்டமாகும். இந்த திட்டத்தினால் குறுகிய காலத்திற்கு அல்லாமல் நீண்ட காலங்கள்பொருளாதாரத்தை பிடித்து நிறுத்துவதாக அமையும்.பொருளாதார சரிவை மீட்பதற்கு கடுமையான தடைகளை எதிர்கொள்ளவேண்டும். அதற்குறிய அடிப்படை திட்டங்களை தயார் செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளேன். இந்ததிட்டங்களால் நல்ல வளர்ச்சி காணவேண்டும்.குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் சேர்ந்து ஆதரவும், ஆலோசனையும் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு