ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

24 நவம்பர், 2008

,கொடிய நோய்களால் பாதிக்கப்படுபவர் களிடம் சூனியம்தான் கார ணம் என்ற மூட நம்பிக்கை அதிகரித்துள்ளது


வழிகாட்டுகிறது அசாம் அரசு:
சூனியம் மூடநம்பிக்கையை எதிர்த்து பள்ளியில் பாடம்

: சூனியம் குறித்து மக்களிடம் உள்ள மூட நம்பிக்கையைநீக்கும் வகையில் அது பற்றி தொடக்கப்பள்ளிபாடத்திட்டதில் பாடமாக சேர்க்க வேண்டும் என்ற தேசியபெண்கள் கமிஷன் யோச னையை அசாம் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
சூனியம் வைக்கும் பெண் கள் என்று சந்தேகிக்கப்படுப வர்களை பலர் சேர்ந்துஅடித்து கொன்ற சம்பவங்கள், வடமாநிலங்களில் அடிக்கடி நடக்கும் ஒருநிகழ்ச்சியாகவே மாறிவிட்டது. அந்தளவுக்கு சூனியம் என்றாலே அந்தமக்களுக்கு பயம். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த மூட நம்பிக்கைஅதிகம் உள்ளது. அசாம் மக்களிடமிருந்து இந்த மூட நம்பிக்கையை அகற்றும்வகையில், தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் சூனி யம் பற்றிய பாடத்தை சேர்க்கவேண்டும் என்று தேசிய பெண்கள் கமிஷன் வலியுறுத் தியது.
தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் நீவா கொன்வார் கூறுகையில்,தொற்றுநோய் போல் சூனியம் பற்றிய மூட நம்பிக்கையும் மக்களிடம் வேகமாக பரவிவருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். சூனி யம் தொடர்பான நம்பிக்கை யையும்சூனியம் வைப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்களை அடித்துக் கொல்லப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இதனால்தான் தொடக்கக் கல்வி பாடத்திட்டத்தில் சூனியம் பற்றிய பாடத்தை சேர்க்க வலியுறுத் துகிறோம். அப்போதுதான் இளம் வயதிலேயே சூனியம் ஒரு மூட நம்பிக்கைதான் என்பதுமனதில் ஆழமாகப் பதியும் என்றார்.
அசாம் மாநில பெண்கள் கமிஷன் கூறுகையில்,கொடிய நோய்களால்பாதிக்கப்படுபவர் களிடம் சூனியம்தான் கார ணம் என்ற மூட நம்பிக்கைஅதிகரித்துள்ளது. இதை தடுக்க கிராமங்களில் மட்டு மல்லாது, பழங்குடியினமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தரமான மருத்துவச் சேவை கிடைக்கஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
சூனியம் தொடர்பான மூட நம்பிக்கையை மக்களிடமி ருந்து அகற்ற அசாம் அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் தொடக்க பள்ளிபாடத் திட்டத்தில் சூனியம் பற்றிய பாடம் இடம் பெறும் என்று அறிவித்துள்ளது. இது தவிர தொண்டு நிறுவனங்கள் சார் பிலும் கிராமந்தோறும் சூனி யம் குறித்தமூட நம்பிக்கையை மக்களிடமிருந்து நீக்க விழிப் புணர்வுப் பிரசாரம் செய்யவும்திட்டமிடப்பட்டுள்ளது.

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு