ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

16 நவம்பர், 2008

"தீக்கதிர்" கேலிச் சித்திரம் முதல்வர் கலைஞரின் வருத்தம்

"தீக்கதிர்" கேலிச் சித்திரம் முதல்வர் கலைஞரின் வருத்தம்

கடந்த 12 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தவிர்க்க இயலாத காரணங் களால் மின்வெட்டு பற்றிய பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது ஒத்தி வைக்கப்பட்டதைக் குறித்து தீக்கதிர் நாளேடு தீட்டியிருந்த கேலிச் சித்திரத்தைக் கண்டு மனம் வருந்தி முதல்வர் கலை ஞர் அவர்கள் முரசொலியில் எழுதியிருப்பதாவது:

இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் 12-11-2008 அன்று மின்வெட்டு பற்றிய கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசுவ தென்றும், மின்துறை அமைச் சர் பதில் சொல்வதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் இலங் கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப் பட வேண்டுமென்ற தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் - 12-ஆம் தேதியன்று விடியற் காலை 3.30 மணி அளவில் நான் எழுந்து அந்தத் தீர்மா னத்தை நானே என் கைப்பட விடிய விடிய எழுதினேன். அதற்கிடையே 4.30 மணி யளவில் மின்துறை அமைச் சரை எழுப்பி, அனைத்து எதிர்க் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களையும் தொலை பேசியில் அழைத்து, இலங் கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசு தீர்மானம் அன்றைய தினமே அவையிலே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெரிவிக்கச் செய்தேன். அவரும் அவ்வாறே ஒவ்வொரு தலைவருடனும் பேசி, ஒப்புதல் பெற்றதை அந்தந்தக் கட்சிகளின் தலை வர்களே நன்கறிவார்கள். அப் போது கூட இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்மானம் அவையிலே முடிந்து விட்டால், தொடர்ந்து மின்துறை பற்றிய விவாதத்தை வைத்துக் கொள் ளலாம் என்ற அளவிலேதான் இருந்தோம்.

ஆனால் இலங்கைத் தமிழர் தீர்மானத்திற்காக ஒதுக்கப் பட்ட நேரத்துக்கு அதிகமா கவே நான் உள்பட அனை வருமே உரையாற்றியதால் நண் பகல் உணவு வேளை வரையில் நீண்டுவிட்டது காலம்!

எனவே அந்த நாளில் மின்சாரம் பற்றிய விவா தத்தை எடுத்துக் கொண்டு எல்லோரும் கருத்து அறிவிக்க நேரம் இருக்குமா என்ற சந் தேகத்தில் - இன்று இலங்கைப் பிரச்சினை தீர்மானத்துடன்; அதாவது இத்துடன் முடித்து விடலாமே; முதன் முதலாக எல்லோரும் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற் றியுள்ளோமே என்ற பெரு மிதத்தில் மின்சார விவாதம் நாளைக்கு வைத்துக் கொள் ளலாமே என்று அவைத் தலைவர் அவர்களிடமும், எதிர்க்கட்சித் துணைத் தலை வரிடமும் ஜாடை செய்து கேட்டேன். அவர்களும் ஒப் புதல் அளிப்பது போல தலை அசைத்தார்கள். அதற்குள் அதி முக சார்பில் செங்கோட் டையன் எழுந்து மின்சாரம் குறித்த விவாதம் பற்றிய பிரச்சினையை எழுப்ப, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பால பாரதியும் மின்சாரம் பற்றிய விவாதத்தை அன்றைக்கே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அப்போது நமது மின்சாரத்துறை அமைச்சரும் எழுந்து, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஆட்சே பணை இல்லையென்றால், பேரவைத் தலைவர் அனுமதித் தால், மின்சாரம் பற்றி விவா தித்தால், இப்போதே பதில் சொல்ல அரசு தயாராக உள்ளது என்றார். அப்போது மணி 1. 15 ஆகி விட்டதால், மறு நாள் 13 ஆம் தேதி மின்சாரம் குறித்த விவாதம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதிமுக வும் மின்சாரம் பற்றிய விவா தத்தை உடனே எடுத்துக் கொள்ளாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுதான் 12-11-2008 அன்று நடந்தது. ஆனால் ஏதோ பயந்து கொண்டு மின்சார விவாதத்தை நடத்தாமல் ஓடி விட்டதைப் போல சில ஏடுகள் செய்தி வெளியிட்டு மகிழ்ந் தன. அது மட்டுமல்ல; மின் சாரப் பற்றாக்குறை பற்றிய அந்த விவாதம் மறுநாள் 13-11-2008 அன்று அவையில் நடைபெற்று தக்க புள்ளி விவரங்களுடன் மின்துறை அமைச்சர் விரிவான பதில் அளித்துள்ளார்.

ஆனால் நான் வியப்படை யும் வண்ணம் ஒரு கேலிச் சித்திரம்,

13-11-2008 அன்று அந்த விவாதம் நடைபெற்று முடி வடைகிறது என்றால், 14-11-2008 அன்று தீக்கதிர் எனும் மார்க்சிஸ்ட் கட்சி ஏட்டில்:

ஓ; அப்படியா? எனும் தலைப்பிட்ட ஒரு கேலிச் சித்திரம் -

மின் வெட்டுக் குறித்துப் பேச அனுமதி மறுப்பு - (செய்தி)

மின்வெட்டு குறித்துத்தான் வீட்டுக்கு வீடு பேசுறாங்களே; சட்டசபையிலும் பேசணுமா? இது என்ன நியாயம்?

என்று எழுதி வெளியிட்டுள்ளார்கள் - விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதா? அல்லது விவாதம், தவிர்க்கப் பட இயலாத சூழ்நிலையில் தள்ளி வைக்கப்பட்டதா? எதிர்க்கட்சி என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் - எழுதலாம் - என்று ஆகிவிட்டால்; மற்ற பத்திரிகைகளுக் கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பத்திரிகைக்கும் என்ன வித்தி யாசம்? என்றுதான் வேதனையுடன் கேட்கத் தோன்றுகிறது!

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு