ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

27 நவம்பர், 2008

காந்தியடிகள்;பத்திரிகையா ளர் ஒருவர், இந்தியாவின் வைஸ்ராயாக ஒரே ஒரு நாள் மட்டும் உங்களை நியமித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.


சிம்லாவில் வைஸ்ராய் தங்கியிருந்த நேரத்தில் காந்தியடிகளைச் சந்திக்க அழைப்பு வந்தது. காந்தியடிகள் வைஸ்ராய் மாளிகைக்கு வெளியே காந்திருந்தபோது, மாளிகைஅருகே இருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மனிதக் கழிவுகளைச் சுமந்து செல்லும் அலங் கோல நிலையில் இருந்த காட்சியைப் பார்த்த காந்தியடி களின் கண்கள் குளமாயின. அந்தநேரத்தில், பத்திரிகையா ளர் ஒருவர், இந்தியாவின்வைஸ்ராயாக ஒரே ஒரு நாள் மட்டும் உங்களை நியமித்தால்நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

அதோ, என் துப்புரவுத் தொழிலாளத் தோழர்கள் செய்கின்றார்களே அந்தப்பணியைத்தான் நான் செய் வேன் என்று காந்தியடிகள் கூறினார்.

இரண்டாவது நாளும் வைஸ்ராயாக நீங்கள் நீடிக் கப்பட்டால் . . . என்று கேட்டபோது, மீண்டும் அதே துப்புர வுப் பணியைத்தான் செய் வேன் என்று உறுதிபடக்கூறி னார்.

மனிதக் கழிவுகளை மனிதர் சுமக்கின்ற கொடுமையைக் கண்டு, மனம் வெந்துநொந்து குமுறிய மகாத்மாவின் மன நிலையைப் போலவே, அடக் கப்பட்டஒடுக்கப்பட்ட விலங் குகளுக்கும் கீழாய் நடத்தப் படுகின்ற ஆதிதிராவிடர்களில்கடைத்தட்டில் இருக்கின்ற அருந்ததியர் சமுதாயத்தின ருக்கு 3 சதவிகித தனிஉள் ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டப்படியான நடவடிக்கை களைமுத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் மேற் கொண்டிருப்பது மனித நேயத்தின் உச்சக்கட்ட வெளிப் பாடாகும்.

காலம் காலமாக மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, அலங்கோல அடிமை வாழ்வில் சமுதாயத்தின் தாழ்த்தப் பட்டோரின் கடைத்தட்டில் அல்லல்பட்டஅருந்ததியினர் சமுதாயத்தினருக்குத் தனி ஒதுக்கீடு வழங்கி அவர்கள் வாழ்வில்ஒளிவீசச் செய்தது அற்புதச் சாதனையாகும்.

1863 ஜனவரி முதல் நாள் காலை, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்புதிரண்டு நின்ற மக்கள் வெள் ளத்தின் முன்பு, தங்கப் பேனாவால் கையொப்பமிட்டுலட்சம் கறுப்பின மக்களை சுதந்திர மனிதர்களாய்ப் பிர கடனம் செய்த மனிதஉரிமைப் பிரகடனத்தைப் போல, மனித குல வரலாற்றில் மீண்டும் ஒரு மனிதஉரிமைப் பிரகடனம் கலைஞர் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 38

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு