ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

15 நவம்பர், 2008

"பென் டிரைவ்'ஐ பயன் படுத்தி திரிபாதியின் தொலைபேசி உரையாடல் பதிவு செய்து பத்திரிகைகளுக்குக் கொடுத்த விவரம்


தமிழக தலைமைச் செயலர் திரிபாதியின் தொலைபேசி உரையாடல் ஒட் டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி, போலீஸ் அதிகாரி உபாத்தியாய், சிறப்பு உதவியாளர் சங்கர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் இயக்குனர் உபாத்தியாய் இடையே நடந்த தொலைபேசி உரையாடல், கடந்த ஏப்ரல் 14ம் தேதி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது.இதுகுறித்து விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் முழுமையாக விசாரித்து தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. தொலைபேசி உரையாடலை உபாத்தியாய் தனது "லேப்-டாப்' மூலம் பதிவு செய்தது உறுதி செய் யப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சிறப்பு உதவியாளர் சங்கர், "பென் டிரைவ்'ஐ பயன் படுத்தி அந்த உரையாடலைப் பதிவு செய்து பத்திரிகைகளுக்குக் கொடுத்த விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வெளியிட்ட பத்திரிகையாளர் கள் மீது வழக்கு தொடரவும் நீதிபதி ஆணையம் பரிந்துரை அளித்தது. ஆணையத்தின் பரிந்துரை மற்றும் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக் கை விவரம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.அதில் கூறப்பட்டிருப்பதாவது: அலுவலக ரகசியத் தன்மை வாய்ந்த விஷயங்கள் வெளியாக மறைமுகமாக அனுமதித்த தவறான நடத்தை, கடமை புறக்கணிப்பு மற்றும் தொலைபேசி விதிகளை மீறியது ஆகியவற்றுக்காக உபாத்தியாய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சிறப்பு உதவியாளர் சங்கர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. சங்கர் அனுமதியின்றி கணினியில் இருந்து தகவல்களை எடுத்து ஊடகப் பணியாளர்களிடம் வெளியிட்டதன் மூலம், அரசு ரகசியத்தைப் பாதுகாக்கத் தவறிய நடத்தைக்காக அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ரகசியத் தகவலை பிறருக்கு வெளியிடுவதை அனுமதித்த தவறான நடத்தை மற்றும் கடமை புறக்கணிப் புக்காக போலீஸ் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் சட்ட ஆலோசகர் விஜயராஜன் ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு விஷயம் தொடர்பாக ஆணையம் தெரிவித்த பரிந்துரைகள், பணியாளரமைப்பு நிர்வாகச் சீர்திருத்தத் துறையிலும், தகவல் தொழில் நுட்பத் துறையிலும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது. கணினி தகவல்களைப் பாதுகாக்க விரிவான பாதுகாப்புக் கொள்கை மற்றும் வழிகாட்டிக் குறிப்புகளை வகுக்க மின் ஆளுமை இயக்குனரின் தலைமையின் கீழ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. .

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு